பதிவு செய்த நாள்

20 ஜூலை 2018
14:37

  சங்கம்-4 அமைப்பின் சார்பாக நேற்று (19-07-2018) மாலை ’ஆசீவகம்’ கோட்பாடு குறித்த நிகழ்வு ஏற்பாடாகியிருந்தது. இந்நிகழ்வில் அருட்திரு.ஆனந்த் அமலதாஸ் தலைமை தாங்கினார். பேரா.க.நெடுஞ்செழியன் சிறப்புரையாற்றினார்.

தலைமையுரையாற்றிய அமலதாஸ் ‘ஆசீவகம்’ குறித்த இந்நிகழ்வு எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை விளக்கினார்.


ஆசீவகமும் ஐய்யனாரிதமும்:
 
தமிழின் மரபிலக்கியங்கள் அகம், புறம் என்னும் இரு கோட்பாடுகளாகவே முன் வைக்கப்படுகின்றன. மேலும் அவற்றில் பௌத்த ஜைன மதக் கருத்துகளே அதிகம் என்பதாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழின் மரபிலக்கியத்தில் மெய்யியல் தத்துவங்களுக்கு பெரும் இடமுண்டு என்று விளக்குவதே இந்நூலாகும்.இதற்கான சான்றுகளையும் நெடுஞ்செழியன் முன்வைத்தார்.
சான்று: 
தமிழ்ச் சமூகத்தில் ஆசீவகக்கோட்பாடு வேரூன்றி இருந்ததுக்கான சான்று, அது வடநாட்டில் மூன்றாம் நூற்றாண்டிலேயே காலமாகிவிட்டது ஆனால் தமிழகத்தில் பதிநான்காம் நூற்றாண்டு வரை நீடித்துள்ளது என்பதே. ஆசீவகத்தின் கோட்பாடுகள் சங்க இலக்கியங்களில் விரவி காணப்படுகின்றன.

ஆசீவகம் கோட்பாடு: 
இது மூன்று கொள்கைகளை உள்ளடக்கிய கோட்பாடாகும். அவை தற்செயல் கோட்பாடு, அணு கோட்பாடு என்பதாகும். இதனை உருவாக்கியவர் மூன்றாம் திருத்தங்கர். இதன் முக்கிய கொள்கையாக வைதீக எதிர்ப்பே விளங்கியது. அணுகோட்பாட்டிற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவது தமிழின் நீலகேசி நூலாகும்.

சங்க இலக்கியங்களில்: 
ஆசீவகக் கோட்பாடுக்கு எடுத்துக்காட்டு காட்டப்படும் சான்று பாடல்கள் யாவும் தமிழின் சங்க இலக்கிய பாடல்களே பாலி மொழியிலிருந்தோ சமஸ்கிருத மொழியிலிருந்தோ அவை எடுத்துக்காட்டப்படவில்லை.

சிக்கல்கள்: 
ஆசீவகக் கோட்பாடு தொடராமல் போனதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ஆய்வாளர்கள் அதனை சரியான முறையில் ஆய்வு செய்யாமல் இருட்டடிப்பு செய்தனர். வைணவ சமயமே தமிழை முன்னெடுத்த சமயமாகும். டி.டி.கோசாம்பி போன்ற ஆய்வாளர்களிடமும் சில காழ்ப்புணர்ச்சிகள் காணப்படுகின்றன.

மேற்கண்ட தனது சிறப்புரையை ஆற்றிய பேரா.க.நெடுஞ்செழியன் தகுந்த மேற்கொள்களையும் எடுத்துக் காட்டினார்.
  -தியாகு.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)