பதிவு செய்த நாள்

21 ஜூலை 2018
11:30

பாசியுடன் கொடிசியா இணைந்து நடத்தும் நான்காவது கோயமுத்தூர் புத்தகத் திருவிழா நேற்று மாலை துவங்கியது.  முதல் நாள் நிகழ்வாக, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன் நிகழ்வினைத் துவங்கிவைத்து சிறப்புரையாற்றினார். கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்க, எஸ்.ராமகிருஷ்ணன் ஏற்புரையாற்றினார்.

வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்
வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்

ஜூலை 20 முதல் 29 வரை இவ்விழா நடைபெறுகிறது. வார நாட்களில் பகல் 2 மணி முதல் இரவு 8 மணிவரைக்கும், வார இறுதி நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தகத் திருவிழா நடைபெறூம். அனுமதி இலவசம்.

புத்தகத் திருவிழாவில் நாள்தோறும் கலை இலக்கிய நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன.  இரண்டாம் நாளான இன்று, காலை 11.30 முதல் 12.30 வரை கவிஞர் அகிலாவின் ‘நின்று துடித்த இதயம்’ புத்தக வெளியீடு, பகல் 2 மணி முதல் 3 மணி வரை வசந்த வாசல் கவிமன்றம் நடத்தும் தொழிலாளர்களுக்கான ‘கவிதை போட்டி’, மாலை 3 மணி முதல் 4 மணி வரை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் ஒருங்கிணைத்து நடத்தும்,  ‘தரமென்னும் தாரக மந்திரம்’ தலைப்பில் தொழிலாளர்களுக்கான கட்டுரைப் போட்டி, மாலை 5.30 மணிக்கு கவிஞர் அகிலாவின் ‘மணலில் நீந்தும் மீன்கள்’ புத்தக வெளியீடு ஆகிய நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன.

மாலை 6 மணி முதல் 7 மணி வரை முனைவர் க.மனோன்மணி தலைமையில் ‘மரபு இலக்கிய அரங்கம்’ நடைபெற இருக்கிறது. இந்நிகழ்வில் சங்கத் தமிழில் பெண்ணெழுத்து தலைப்பில் முனைவர் சக்தி ஜோதியும், சமயத் தமிழில் பெண்ணெழுத்து தலைப்பில் முனைவர் குரு ஞானாம்பிகாவும் பேசுகின்றனர்.

கடந்த மூன்று வருடங்களாக சிறப்பான திட்டமிடலுடன் நடத்தி வந்த இந்நிகழ்வில் இந்த வருடம் சில குளறுபடிகள் நடந்திருக்கின்றன என விற்பனையாளர் வருத்தம் தெரிவித்துள்ளனர். “புத்தகத் திருவிழா குறித்த விளம்பரங்கள் அதிகமாக செய்யப்படவில்லை. மேலும் முதன்மை சாலையில் இருந்து விழா நடைபெறும் அரங்கம் வெகு தொலைவில் இருப்பதால் முதல் நாளான நேற்றே வாசகர்களின் வருகை குறைவாகவே இருக்கிறது. போக்குவரத்து வசதிகளை செய்யப்படவில்லை. விற்பனையாளர்களுடன் புத்தக திருவிழா நிர்வாகக் குழு தொடர்பற்ற நிலையில் இருப்பதால் நிறைய குழப்பங்கள் ஏற்படுகின்றன” என தெரிவித்தனர்.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)