பதிவு செய்த நாள்

21 ஜூலை 2018
13:49

மிழ் இலக்கியத்தின் முதல் நாவல் மயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம். 19ம் நூற்றாண்டின் சிறந்த நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளராக வலம் வந்திருக்கிறார்.

இவர் 1826ம் ஆண்டு திருச்சி குளத்தூரில் பிறந்தார். தன்னுடைய தொடக்க கல்வியை அவரது தந்தை சவரி முத்துப்பிள்ளையிடமும், தமிழ் மற்றும் ஆங்கிலப் புலமையை தியாகராச பிள்ளையிடமும் பெற்றார்.

படித்து முடித்து நீதிமன்றங்களில் பதிவாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றி வந்தார். கிட்டத்தட்ட 13 ஆண்டு காலம் தரங்கம்பாடி நகராட்சி அதிகாரியாகப் பணியாற்றியதால் இவர் மாயவரம் வேதநாயகம் பிள்ளை என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.

அரசு அதிகாரியாகப் பணியாற்றிய அதே காலகட்டத்தில், 16 புத்தகங்களை எழுதியுள்ளார். இவரின் இலக்கிய ஆர்வமும் ஆளுமையும், தமிழறிஞர்களான மீனாட்சி சுந்தரம் பிள்ளை, ராமலிங்க வள்ளலார், சுப்பிரமணிய தேசிகர் ஆகியோருடன் நட்பு ஏற்பட்டது.

நீதிமன்ற தீர்ப்புகளை முதன் முதலில் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவர் வேதநாயகம் பிள்ளை. ஆங்கில மொழியில் இருந்த சதர்ன் கோர்ட் தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்த்து ‘சித்தாந்த சங்கிரகம்’ என்ற நூலாகவும் வெளியிட்டார்.

மேலும் பெண்மதி மாலை பாடல் மற்றும் உரைநடை புத்தகம், திருவருள் அந்தாதி, திருவருள் மாலை, தேவமாதர் அந்தாதி, சர்வ சமய சமரசக் கீர்த்தனை, சத்திய வேத கீர்த்தனை, பொம்மைக் கலியாணம், பெரியநாயகியம்மன்  ஆகிய பக்திப் பாடல் நூல்களையும் எழுதியுள்ளார். இறுதியாக 1889ம் ஆண்டு சுகுண சுந்திரி என்ற புதினத்தையும் எழுதியிருக்கிறார். அந்த வருடமே ஜூலை மாதம் 21ம் தேதி இயற்கை எய்தினார்.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)