பதிவு செய்த நாள்

24 ஜூலை 2018
12:46

திருப்பூரில்  வாசகசாலை  நடத்திவரும் மாதாந்திர இலக்கிய நிகழ்வின் ஆறாவது நிகழ்வாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று எழுத்தாளர் ராஜ் கெளதமனின்  சிலுவைராஜ் சரித்திரம் நாவல் குறித்தான கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.

சிலுவைராஜின் கால் நூற்றாண்டு கால வாழ்கையை மையமாக வைத்து சாதியத்தின் கோர முகத்தையும் , வேற்று மதங்களும் சாதியைத் தன்வயப்படுத்திக் கொண்டு மக்களைச் சுரண்டும் தன்மையையும் விவரிக்கும் நாவலான சிலுவைராஜ் சரித்திரம் குறித்து தங்களின் அனுபவங்களின் வாயிலாக வாசக பார்வையில் பாலசுப்பிரமணியன் , கிருத்திகா கார்த்திகேயன் ஆகியோரின் பேச்சு நாவலின் வீரியத்தை உணர்த்தும் விதமாக அமைந்தது . கிருத்திகா, தன் புரிதலுக்கு உட்பட்ட அளவில் சிலுவைராஜ் சரித்திரம் நாவல் குறித்து தனது வாசிப்பு அனுபவத்தை விளக்கினார். நாவலின் அரசியலையும் , வட்டாரத் தன்மையையும், வட்டாரத் தன்மை அற்று எங்கும் விரவிக் கிடக்கும் சாதியத்தையும் பற்றி கூறினார்  பாலசுப்பிரமணியன்.

நாவலின் மையக் கருத்தையும் , அதன் அழகியலையும் விவரித்தது வாசகர்களை வெகுவாக கவர்ந்தது கவிஞர் ஆனந்தனின் உரை. சிறுவர்கள் மீதான கல்வி சார்ந்த கல்விக் கூடங்கள் நடத்தும் வன்முறை, ஆசிரியர்களின் சாதிய சார்பு மனநிலை ஆகியவை குறித்து, இளம் வயதில் சாதியத்தால் காயப்படுத்தப்படும் பிஞ்சு மனங்களின் வேதனையில் தொடங்கி, சாதியத்தின் பேரால் தன்னை நிராகரித்த சமூகத்தை புறக்கணிக்கும் இளைஞர்கள் வரை அனைவரையும் ஆவணப்படுத்தும் வகையில் அமைந்த அவரது பேச்சு நாவலுக்கு சரியான சிறப்புரையாக அமைந்தது.

நிறைவாக , நாவல் சார்ந்த கருத்துகளை கவிஞர் மு.ஆனந்தனுடன் வாசகர்கள் கருத்து பரிமாற்றங்கள் செய்யும் கலந்துரையாடலாக நிகழ்வு அமைந்தது.

திருப்பூரில் வாசகசாலையின் அடுத்த இலக்கிய சந்திப்பு நிகழ்வு ஆகஸ்ட் 19ம் தேதி நடைபெற இருக்கிறது. எழுத்தாளர் அகரமுதல்வனின் ‘இரண்டாம் லெப்ரினன்ட்’ சிறுகதைத் தொகுப்பு குறித்தான கலந்துரையாடல் நிகழ்வு  திருப்பூர் குமரன் சாலையிலுள்ள நலம் அரங்கில் நடைப்பெறும்.

அருண் சுந்தர்
வாசகசாலை - திருப்பூர்.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)