பதிவு செய்த நாள்

26 ஜூலை 2018
10:26

   இந்த ஆண்டிற்கான 'யுவ புரஷ்கார்’ விருது பெற்ற எழுத்தாளர் சுனீல் கிருஷ்ணனின் ‘அம்பு படுக்கை’ சிறுகதை நூல் குறித்தான கலந்துரையாடல் கடந்த ஞாயிறன்று (ஜூலை-7) கோவை வாசகசாலையின் ஐந்தாவது நிகழ்வாக நடைபெற்றது


சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொண்ட எழுத்தாளர் இளஞ்சேரல் ராமமூர்த்தி நூறாண்டு தொட்டு விட்ட சிறுகதை வரலாற்றை ஒரு காலக் கண்ணாடி போல் சொல்லிவிட்டு தொகுப்புக்குள் வந்தது சிறப்பாக அமைந்தது. வழக்கமான சிறுகதைக்குரிய வட்டத்தில் இருந்து சற்று மாறுபட்ட கதை சொல்லும் முறையை கொண்ட இத்தொகுப்பை புரிந்துகொள்ள அது தேவையாயிருந்தது. ஒவ்வொரு கதையின் சாரத்தையும் அந்த கதைகளத்தின் தன்மையையும் சரியாக விளக்கிக் கூறினார். குறிப்பாக குறுநாவல் வடிவில் இருக்கும் குருதிச்சோறு கதையில் நாட்டார் வழக்கில் சொல்லப்படும் நல்லதங்காள் கதை எவ்வாறு ஒத்துப்போகிறது என்பதை விளக்கினார். தொகுப்பு முழுக்க வயதானவர்கள் மீது ஆசிரியர் காட்டும் கரிசனத்தையும் எதிர் உரையாடல் மூலம் கேள்வி கேட்கும் உத்தியை கையாண்டுள்ளார். ஆசிரியருக்கு காந்தியாரின் மீதுள்ள பற்று ஆரோகணம் கதையில் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதையும் கூறியது நல்லதொரு பொழிவாக அமைந்தது.முடிவில் தொகுப்பில் பல சிறுகதைகள் அரசியலற்று மரணம் சார்ந்து இருப்பதையும் புத்தகத்தின் மீதான அவரின் விமர்சனமாகக் கூறி அமர்ந்தார்

முன்னதாக வாசகபார்வையில் பானுப்பிரியா மற்றும் நிஜந்தன் ஆகியோர் பேசினர். பானுப்பிரியா, குறிப்பிட்ட நான்கு சிறுகதைகள் எடுத்து அதன் மீதான தன் புரிதலை கூறினார். தொடர்ந்து பேசிய நிஜந்தன், சிறுகதை பேசும் அக உணர்வுகளை பற்றி தன் பார்வையை பகிர்ந்து கொண்டார்.

அடுத்த கூட்டம்:
எழுத்தாளர் அசோகமித்திரனின் ’இந்தியா 1944 – 48’
நாள் - ஆகஸ்ட் 26, 2018.
இடம் – PSG மேலாண்மை கல்லூரி.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)