பதிவு செய்த நாள்

26 ஜூலை 2018
11:35

   இத்தாலிய யூத எழுத்தாளரும் வேதியியல் நிபுணருமான ப்ரைமோ லெவியின் எழுத்தாக்கங்கள் இருபதாம் நூற்றாண்டின் முக்கிய இலக்கியப் படைப்புகளில் இடம்பெறுபவை.

ப்ரைமோ லெவி ட்யூரின் நகரிலுள்ள ஒரு மத்திய தர யூத குடும்பத்தில் பிறந்தார். இளவயதில் தனது யூதத் தன்மை பற்றி லெவிக்குப் பிரத்யேகமாக எதுவும் தெரிந்திருக்கவில்லை என்றாலும் விரைவிலேயே முஸோலினியின் யூத எதிர்ப்புக் கோட்பாடு கத்தோலிக்க நாடு ஒன்றில் யூதராக இருப்பதிலுள்ள ஒவ்வாமையையும், அபாயத்தையும் அவருக்கு உணர்த்தி விட்டது. இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த சமயம் லெவி Giustizia e Liberta என்ற நாஜி எதிர்ப்புப் பத்திரிக்கைக்கு எழுதிக்கொண்டிருந்தார்.


’ப்ரைமோ லெவி’யின் படைப்பாக்கங்களில் நினைவுக்குறிப்புகளும், கதைசொல்லல்களும்,புனைவுகளும், அசாதாரணக் கதையாடல் பாணிகளில் இரண்டறக்  கலந்து இடம்பெறுகின்றன’ என்கிறார் டேவிட் கெஃப்பர் என்பவர்.

’என்னுடைய தொழில் என்னுடைய எழுத்துக்கான கச்சாப்பொருளை வழஙியிருக்கிறது’ என்று கூறும் லெவி  ’ரசாயணம் என்பது பருப்பொருளுடனான ஒரு போராட்டம்; பகுத்தறிவின் மஹோன்னதப் படைப்பு; இருத்தலியலின் நன்னெறிக் கதை; ரசாயனம் தர்க்க அறிவோடு கலந்த அளவிலான விழிப்பைக் கற்றுத் தருகிறது என்று தன் ரசாயன அறிவின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார்.

ப்ரைமோ லெவி வதை முகாம் அனுபவங்களைப் பற்றிய சுயசரிதைத்தனமான நாவல் SE QUESTO E UN VOMA  (If this is a Man - இது மனிதனெனில்) தான் அவருடைய முதல் படைப்பாக்கம். 1943-44 கால கட்டத்தில் பத்து மாதங்களை ஆஸ்ச்விட்ஸ் வதைமுகாமில் கழித்த அனுபவம் ‘அது குறித்து எழுதியே ஆக வேண்டும்’ என்ற உள்ளார்ந்த நிர்பந்தத்தை ‘லெவிக்கு ஏற்படுத்தியது. புனை கதைகளல்லாத அவரது எழுத்தாக்கங்கள் கூட அந்த இனப் பேரழிவின் முக்கியமான வரலாற்று சாட்சியங்களாகின்றன. ஆஸ்ச்விட்ஸ் குறித்த அவரது எண்ணப் பதிவுகள் அவை வதை முகாமின் கோர, துயர சம்பவங்களை எழுத்தில் வடிக்கும் கலப்படமற்ற நேர்மைத் தன்மையில் முக்கியத்துவம் பெறுகின்றன. அலெக்ஸாந்தர் ஸோல்ஷெட்ஸினின் ‘குலாக் ஆர்க்கி பிலாகோ’ கம்யூனிஸ ருஷ்யாவின் கொடுமைகளை வெளிப்படுத்துவது போல் எனில், நேரடி அனுபங்ளேயானாலும் ஒருவித விலகல் பார்வையுடன் - ப்ரைமோ லெவியின் பல படைப்புகள் வெளிப்படுத்துகின்றன.

நன்றி: லதா ராமகிருஷ்ணன்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)