பதிவு செய்த நாள்

26 ஜூலை 2018
17:47

  இயற்பெயர்: கே.எஸ்.சுந்தரம்
பிறப்பு: 1942
இறப்பு: ஜூலை 19, 1987
இடம்: கல்லிடைக்குறிச்சி


தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் முக்கிய இடம்பெறுபவை ஆதவனின் எழுத்துகள். மரணத்திற்கு பின்பே 1897 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடெமி விருது இவரின் “முதலில் இரவு வரும்” என்ற சிறுகதைக்காக வழங்கப்பட்டது. ஆங்கிலம்,பிரெஞ்சு உருசியம் மற்றும் பல இந்திய மொழிகளிலும் இவரது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘என் பெயர் ராமசேஷன் புதினம் உருசிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையாயின.

இந்திய இரயிவேயில் சிறிது காலமும் பின்னர் ’நேஷனல் புக் டிரஸ்டின்’ துணையாசிரியராகவும் பணியாற்றினார். பெங்களூருக்கு மாற்றலாகி வந்த இவர் 1987,ஜூலை 19ம் தேதி சிருங்கேரி துங்கா நதியின் சுழலில் சிக்கி மரணமடைந்தார்.

இவரின் ஆக்கங்கள்:

குறும்புதினம்
இரவுக்கு முன்பு வருவது மாலை (1974)
சிறகுககள்
மீட்சியைத் தேடி
கணபதி ஒரு கீழ்மட்டத்து ஊழியன்
நதியும் மலையும்
பெண், தோழி, தலைவி (1982)

சிறுகதை
கனவுக்குமிழிகள் (1975)
கால் வலி (1975)
ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் (1980)
புதுமைப்பித்தனின் துரோகம் (1981)
முதலில் இரவு வரும் (1985)

புதினம்
காகித மலர்கள் (1977)
என் பெயர் ராமசேஷன் (1980)வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)