இறப்பு: 2003
சொந்த ஊர்: மதுரை
நவீன தமிழ்ச் சிறுகதையுலகின் தனித்துவமான எழுத்தாளராக
மதிக்கப்படுபவர் கோபிகிருஷ்ணன். மதுரையில் பிறந்தாலும் பிழைப்பின் காரணமாக
வெவ்வேறு மாநிலங்களுக்கும் பயணப்படும் சாகசம் நிரம்பிய வாழ்வை மேற்கொள்ள
வேண்டியிருந்தது. மனநோய் மாத்திரைகளை விழுங்கி தற்கொலை செய்யுமளவிற்கு அவரின் யதார்த்த
வாழ்வு சிக்கல் மிகுந்ததாயிருந்தது.
உளவியல் துறையிலும் சமூக சேவை துறையிலும் முதுகலைப்பட்டம்
பெற்றவர். ‘ஆத்மன் ஆலோசனை மையம்’ என்ற அமைப்பை உருவாக்கி, மனநல ஆலோசகராக சில காலம்
பணியாற்றினார். எதனோடும் சமரசம் செய்துகொள்ளாத இயல்பின் விளைவாய் நிறைய
பணியிடங்கள் மாறவேண்டியிருந்தது. மனநிலை பிறழ்வு மையங்களில் ஆலோசகராக பணியாற்றிய
போது ஏற்பட்ட அனுபவத்தைக்கொண்டு ‘உள்ளிருந்து சில குரல்கள்’ என்னும் நாவலை
எழுதினார்.
நடுத்தர வர்க்கத்தின் போலியான மதிப்பீடுகளையும் அவலங்களையும்
இவரது கதைகள் வெளிப்படுத்துகின்றன. வறுமையான குடும்பச்சூழல் தனது அடையாளத்தை விடாத
பிடிவாதம் இவற்றின் காரணமாக மிகுந்த மனச்சோர்வுக்கு ஆட்பட்டார். இதற்காக
எடுத்துக்கொண்ட உளநல மருந்துகளால் அதிக நோய்மையுற்று 2003ஆம் ஆண்டு மரணமடைந்தார்.
இவரின் ஆக்கங்கள்:
ஒவ்வாத உணர்வுகள்
தூயோன்
மானிட வாழ்வு தரும் ஆனந்தம்
டேபிள் டென்னிஸ்
உள்ளிருந்து சில குரல்கள்
முடியாத சமன்