பதிவு செய்த நாள்

28 ஜூலை 2018
12:02

கொடிசியா வணிக வளாகத்தில் நடைபெற்று வரும் நான்காவது ‘கோவை புத்தகத் திருவிழா’வில் இன்றும், நாளையும் சில பதிப்பகங்களில் சிறப்புத் தள்ளுபடியில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

நிலா காமிக்ஸ் பதிப்பகத்தில் குழந்தைகளுக்காக ‘பொன்னியின் செல்வன்’ காமிக்ஸ் வடிவில் உள்ளது. சிறப்பு சலுகையாக 10 புத்தகங்கள் சேர்ந்து, 499 ரூபாய்க்கு கிடைக்கிறது.

ஆர்வமுடன் புத்தகங்களைத் தேர்வு செய்யும் பெற்றோர்களும் குழந்தைகளும்.
ஆர்வமுடன் புத்தகங்களைத் தேர்வு செய்யும் பெற்றோர்களும் குழந்தைகளும்.

ஓம் சக்தி புக்ஸ் பதிப்பகத்தில், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் ஆபரை அறிவித்துள்ளது. குழந்தைகளுக்கான 990 ரூபாய் மதிப்புள்ள விஷூவல் டிக்‌ஷனரி மற்றும் என்சைக்ளோபீடியா புத்தகம், இங்கு 350 ரூபாய் மட்டுமே.

புக் வேர்ல்டு லைப்ரரி பதிப்பகத்தில் வர்த்தகம், மேலாண்மை சார்ந்த புத்தகங்கள், குழந்தைகள் புத்தகங்கள், ரீடர்ஸ் டைஜஸ்ட் வெளியீடுகள், ஒன்று வாங்கினால் இரண்டு இலவசம்.

கவுரா புத்தக மையத்தில், புறநானுாறு, ராவண காவியம் உள்ளிட்ட எண்ணற்ற புத்தகங்கள் குவிந்துள்ளன. 500 ரூபாய்க்கு மேல் புத்தகம் வாங்கினால், 50 சதவீதம் தள்ளுபடி பெறலாம்.

அபெக்ஸ் ஏஜன்சியில் குழந்தைகளுக்கான ஸ்மார்ட் கிளாஸ் சிடிக்கள், 3 சலுகை விலையில் 100 ரூபாய் விலையில் விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.

யுனிவர்சல் பப்ளிஷர்ஸ், கவிக்கோ அப்துல் ரகுமானின் 35 நுால்களை மொத்தமாக, 4470 ரூபாய்க்கு பதில், 3300 ரூபாய்க்கு ஆபர் விலையில் அளிக்கிறது.

சங்கர் பதிப்பகம், 10 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் 5 வாங்கினால் ஒன்றும்; 10 வாங்கினால் 3 புத்தகங்களும் இலவசமாக தருகிறது.

நாளையுடன் (ஜூலை 29) புத்தகத் திருவிழா முடிவடைகிறது என்பதை வாசகர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்.                 



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)