மியாவ்...
இடிபாடுகளுள் நின்று
ரசித்துக் கொண்டே இருந்த
அதன் விழிகளுள்
ஜீவகளை ததும்பியது
எவ்வித அசைவும் இல்லை
யாரும்
அதை கவனித்திருக்கவும்
வாய்ப்பில்லை
வீழ்ந்து கிடந்தவனைத் தவிர.
எல்லோரும் முறைவைத்து ஊற்றினார்கள்
வியர்க்க விறுவிறுக்க
வந்தவனின் முறையிலே
கண்டம் இரண்டுமுறை ஏறி இறங்கியது
அப்பொழுது
மியாவ் என்ற சப்தத்துடன்
நகர்ந்தது
ஆடிப் பிம்பம்
சூரியனின் ஒளிபட்டு
மின்னுகிறது
பாதரச ஆடி
கையிலெடுத்துத்
திருப்பி திருப்பிப்
பார்க்கிறேன்
மழலை போல
யாரென்று அறியாமலே
கரம் தழுவிட
ஆயுள்ரேகையாய் மாறி
மூச்சொல்லாம்
நிறைகிறது
அதில் தெரிந்த அவள் முகம்