பதிவு செய்த நாள்

28 ஜூலை 2018
16:58


  எனது ரகசியங்கள் குழந்தைகள்
கதவுக்குப்பின் சென்று ஒளிந்துகொள்வதைப் போல
எளிமையானது
எனது சுக துக்கங்களால் பூஜையறை உண்டியல் நிரம்பியது
திருத்தலங்களின்
பயணச்செலவிற்கானவை என்பது முதலும்
கடைசியுமான விதி
ஒவ்வொரு கோடை பருவத்திலும்
இருபதாயிரம் செம்பருத்தி பூக்களைப்
பறிக்கிறார்கள் மாணவர்கள்
நேர்த்தியான கவிதைக்கு முன்பு
நூற்றுக்கணக்கான பக்கங்கள்
வாசிக்கப்படுகின்றன
நகரத்தில் புதிய நோய் ஒன்று
சமீபித்திருக்கிறது
நடுவயது பெண்களின் முடிகள்
மனஅழுத்தங்களில் நாள்தோறும்
உதிர்ந்தபடி இருக்கின்றன
அவர்களுக்கு உச்சியெடுத்து சீவுவதில்
மட்டும் தான் காலை சிரம்மாய் இருக்கிறது.



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)