பதிவு செய்த நாள்

01 ஆக் 2017
17:51
திரையில் வருகிறார் ஜெயகாந்தன்

 “தனக்குச் சரி என்று பட்டதைத் துணிச்சலாகச் சொல்லுகிற கலைஞன். குடிசைவாழ் மனிதர்களின் வாழ்க்கையை முதல்முறை இலக்கியத்திற்குள் எடுத்தாண்ட தனிப்பெரும் படைப்பாளர். அரை நூற்றாண்டுகாலமாக தன் எழுத்துகளால் தமிழ் வாசகனை கட்டி ஆண்டவர்” என்ற சிறப்புகளுக்கெல்லாம் உரியவர் ஜெயகாந்தன். 
ஜே.கே எழுத்தில்,‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘ஊருக்கு நூறு பேர்’, ‘காவல் தெய்வம்’ உள்ளிட்ட நூல்கள்முன்னரே திரைப்படங்களாக வெளியாகியிருக்கின்றன. அவற்றில், ‘உன்னைப் போல் ஒருவன்’, ‘யாருக்காக அழுதான்’, ‘புதுச்செருப்பு கடிக்கும்’ ஆகிய திரைப்படங்களை அவரே இயக்கவும் செய்தார். 
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஜெயகாந்தன் எழுத்தில் உருவான ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஓர் உலகம்’ நாவல் தற்போது அவரது மறைவிற்குப் பிறகு திரைப்படமாகத் தயாராக உள்ளது.  “வாழ்க்கையின் இருண்ட பகுதிகளையே காட்டுகிறவன், என்று என்னைப்பற்றி பாமரத்தனமான ஓர் இலக்கிய அபிப்ராயம் இருக்கிறது. ஆனால், இந்தக் கதை (ஒரு மனிதன் ஒரு வீடு ஓர் உலகம்) வாழ்க்கையின் ஒளிமிகுந்த பகுதிகளைக் காட்டுகிறது. மனிதர்களின் பலவீனத்தையே, அழுத்தம்தந்து, ஆணியறைந்து காட்டுவதை எனது நோக்கமாகவோ செயலாகவோ நான் எப்போதும் கொண்டிருந்ததில்லை. எளிமையும் அதே சமயம் உயர்வும் மிகுந்த மனிதப்பண்புகள் என்னை எப்போதும் வசீகரிக்கின்றன” எனும் ஜெய காந்தனின் இந்த நாவல் திரைப்படமாக மறுவடிவம் எடுப்பது அவரது வாசக மனங்களுக்கு மகிழ்ச்சி தரும் நற்செய்தியாகும்.‘நீலம்’,‘உனக்குள் நான்’ திரைப்படங்களை இயக்கிய, இயக்குநர். ஜி.வெங்கடேஷ் குமார் இந்நாவலைத் திரைப்படமாக்குகிறார்.
 -கே.பி

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)