பதிவு செய்த நாள்

02 ஆக் 2018
12:45

ழுத்தாளர் அசோகமித்ரன் பெயரில் கடந்த ஆண்டு முதல் சிறந்த சிறுகதைக்கான விருதை ஞாநியின் கோலம் அறக்கட்டளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டிற்கான ‘அசோகமித்ரன் சிறுகதைப் போட்டி’யை அறிவித்திருக்கிறார்கள்.

சிறந்த சிறுகதைகள்

ஆகஸ்ட் 2017ல் இருந்து ஜூலை 2018 வரைக்கு பிரசுரமான சிறுகதைகளைப் போட்டிக்கு அனுப்பி வைக்கலாம். தேர்வு செய்யப்படும் சிறந்த சிறுகதைக்கு ரூ.5 ஆயிரம் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். இதுமட்டுமல்லாது தேர்வு செய்யப்படும் இரண்டு சிறுகதைகளுக்கு தலா இரண்டாயிரம் ஆறுதல் பரிசும் வழங்கப்படும்.

பிரசுரமாகாத கதைகள்

இதுவரைக்கும் எந்த இதழிலோ அல்லது தொகுப்பிலோ வெளியாகாத கதைகளின் கையெழுத்துப் பிரதிகளையும் அனுப்பிவைக்கலாம். தேர்வு செய்யப்படும் சிறந்த சிறுகதைக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கப் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். மேலும் இதர கதைகளில் இரண்டு கதைகளைத் தேர்வு செய்து தலா ரூ.2 ஆயிரம் சிறப்புப் பரிசாக வழங்கப்படும். மேலும் பிரசுரமாகாத மூன்று கதைகளைத் தேர்வு செய்து வார இதழில் வெளியிடப்படும்.

தவிர்க்க வேண்டியவை

மொழிபெயர்ப்பு கதைகளை அனுப்பக்கூடாது. எவரும் எவருடைய கதைகளையும் பரிந்துரைக்கலாம். ஒருவர் இரண்டு கதைகளுக்கு மேல் அனுப்ப கூடாது. ஒரே எழுத்தாளரின் இரண்டு கதைகளுக்கு மேல் பரிந்துரைக்க கூடாது. கதைகளுடன் தங்களுடைய தொடர்பு  என் முகவரி ஆகியவற்றை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

கதைகள் அனுப்ப வேண்டிய முகவரி :
ரவி தியாகராஜன்
‘ஸநாதனா’ 2-வது தளம்,
1, முருகேசன் தெரு,
தியாகராய நகர்,
சென்னை - 600 017

மின்னஞ்சலிலும் அனுப்பலாம் : amiawards2018@gmail.com



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)