தலைப்பு | : | ராதையுமில்லை ருக்மணியுமில்லை |
ஆசிரியர் | : | தமிழில்: சரஸ்வதி ராம்நாத் |
பதிப்பகம் | : | நேஷனல் புக் டிரஸ்ட் |
விலை | : | 30/- |
பிரபுத்துவ சமூகத்தின் சமூக பண்பாட்டுக் கோட்பாடுகள், தேசப்
பிரிவினைக்குப் பின்னரும் பஞ்சாபிய சமூகத்தில் முன்போல அப்படியே நிலைத்திருந்தன.
ஆண் பெண் உறவுகளின் கடையானி என்றென்றும் ஆணாகவே இருந்தான். ஒழுக்கம் சம்பந்தப்பட்ட
புனிதங்கள் யாவும் அவனாலேயே உருவாக்கப்பட்டன. திருமணத்திற்குப் பின்னரும் ஒரு ஆண்
ஏற்படுத்திக்கொள்ளும் பாலியல் உறவுகளுக்கும் உடலிச்சைகளை நிறைவேற்றிக்கொள்ளும்
சாதனங்களுக்கும் வழிமுறைகளுக்கும் எவ்விதமான கட்டுப்பாடுகளும் இல்லை. ஆனால் புதிய
யுகத்தின் விழிப்புற்ற பெண்ணின் மீது சுமத்தப்பட்டிருக்கும் புனிதங்களின்
மதிப்பீடுகள், அவள் முன்னே பல கேள்விகளை எழுப்பி விட்டன. இப்போது அவள் ஆண்-பெண்
உறவு பற்றி முற்றிலும் புதியதொரு விளக்கத்தைத் தர வேண்டியிருந்தது. வழிவழியாக
வந்துகொண்டிருக்கும் ஆண்-பெண் உறவுகளின் முன்னே ஒரு கேள்விக்குறி எழுப்ப வேண்டியிருந்தது.
அவற்றில் சில உறவுகளின் எல்லைகளை இனம் கண்டு கொண்டு முன்னேற வேண்டியிருந்தது.
பெயரில்லாத புதிய உறவுகளைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டியிருந்தது.
அமிருதா பிரீதம் எழுதிய புதினங்கள்,இப்புதிய யுகத்தின்
விழிப்புணர்வு பெற்ற பெண்ணை ஆணின் நிலையிலிருந்தும், சம்பிரதாய முறைகளுக்கு சவால்
விடுவது போல், புதிய விழிப்புணர்வை நடை முறைக்குக் கொண்டுவரும் புதிய யுகத்து
ஆண்மகனை ஒரு பெண்ணின் நிலையிலிருந்தும் புரிந்துகொள்ள முயற்சிக்கின்றன.