பதிவு செய்த நாள்

03 ஆக் 2018
17:11
ஈரோடு புத்தகத் திருவிழா - 2018

ருடம்தோறும் மக்கள் சிந்தனைப் பேரவை ஈரோட்டில் புத்தகத் திருவிழா நடத்தி வருகிறது. இந்த வருடம், 14வது ஈரோடு புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 14 வரை நடைபெறவுள்ளது.

துவக்க நாளான இன்றைய நிகழ்வில்,  மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.பிரபாகர் தலைமை வகிக்கிறார். ஸ்டாலின் குணசேகரன் அறிமுகவுரையாற்ற, புத்தக அரங்கினைத் திறந்துவைத்து சிறப்புரையாற்றுகிறார் விஞ்ஞானி சிவதாணு பிள்ளை. நிகழ்வின் இறுதியாக உலகத்தமிழர் படைப்பரங்கினைத் திறந்துவைத்து சிறப்புரையாற்றுகிறார் பள்ளிக்கல்வித்துறை அரசுச் செயலாளர் உதயச்சந்திரன்.

பத்து நாட்களுக்கும் மேல் நடைபெற இருக்கும் இத்திருவிழா ஈரோடு வ.உ.சி பூங்கா மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தினமும் காலை 11 மணியில் இருந்து இரவு 9.30 மணி வரைக்கும் வாசகர்களின் வருகைக்காக அரங்குகள் திறந்துவைக்கப்பட்டிருக்கும்.



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)