பதிவு செய்த நாள்

06 ஆக் 2018
16:50

 


  நீள்கோட்டுச் சாலையில் 
ஒரு புள்ளியில் 
நிற்கவைத்துவிட்டது 
அவளழகு 

எனக்கு முன்னால் போய்க்கொண்டிருந்த 
ஆடுகள்... 
திரும்பிப் பார்த்த மந்தைக்காரி 
ஆடுகளுக்காக 
தன் ஜீவனைக் கொடுப்பவளாகத் தெரிந்தாள் 

இதழ் குவித்து 
அவள் ஊதிய ஒலியில்
ஆடுகள் 
அலைபோல ஒதுங்கி வழிவிட்ட தருணம் 
அவளது ஆடு 
மரம் 
இலை
பூ 
கல் 
சுவடு 
ஏதேனும் ஒன்றுக்கு 
அல்லது எல்லாவற்றுக்கும் 
முத்தமிடத் தோன்றியது 

அப்போது 
என்மீது உதிர்ந்த இலையில் 
ஆடுகளின் நறுமணம் 

- பழநிபாரதி



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)