பதிவு செய்த நாள்

07 ஆக் 2018
13:08

ஞ்சையில், பாரத் கல்வி குழுமம் மற்றும் வாசகசாலை இணைந்து வழங்கும் சிறுகதைக் கொண்டாட்ட ‘மாதாந்திர தொடா் கலந்துரையாடல்’ நிகழ்வுகளின் முதல் நிகழ்வு, கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி பாரத் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. அந்நிகழ்வில் புதுமைப்பித்தனின் ‘பொன்னகரம்’, பிரபஞ்சனின் ‘தியாகி’ மற்றும் சந்தோஷ் ஏச்சிகானத்தின் ‘பிரியாணி’ ஆகிய மூன்று சிறுகதைகள் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. வாசகப்பார்வையில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்வில் பாரத்கல்விக்குழுமத்தின் செயலாளா் புனிதா கணேசன் தலைமை தாங்கினார். எழுத்தாளர் பவாசெல்லதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

புதுமைப்பித்தனின் பொன்னகரம் குறித்து மாணவி ஜே.நித்யா பேசினார். “அன்றும் சரி இன்றும் சரி பெண்கள் தியாகம் செய்யத்தான் பிறந்தவா்களாக இருக்கிறார்கள்” என்ற கதையின் மையத்தை மேற்கோள்காட்டி தன்னுடைய உரையை முடித்தார் மாணவி.

நிகழ்வில்...
நிகழ்வில்...

பிரபஞ்சனின் தியாகி குறித்த வாசக பார்வையில் மாணவா் ராஜேஷ்வா் பேசினார். கதையின் ஒரு வசனத்தை எடுத்துக்  கூறி பெண்கள்தான் தியாகிகள் என்று சொன்னதும் பொருத்தமாக அமைந்தது.

வாசக பார்வையின் நிறைவாக, சந்தோஷ் ஏச்சிகானத்தின் ‘பிரியாணி’ சிறுகதை குறித்து தனது பார்வையைப் பகிர்ந்து கொண்டார் மாணவி மங்கள நாயகி.  அவருடைய பார்வை முற்றிலும் வேறு கோணத்தில் இருந்தது. கதையின் சில இடங்களில் தனக்கு முரண்பாடு இருப்பதாக கூறிய மங்கள நாயகி, கதையின் முடிவைப் பற்றி பேசும் போது, தயவு செய்து யாரும் உணவை வீணாக்காதீா்கள் என்று உணர்ச்சிவசப்பட்டார்.

வாசகபார்வை அமா்விற்கு அடுத்ததாக சிறப்புரையாற்றிய எழுத்தாளா் பவா செல்லதுரை, ஒரு கதையை எப்படி அணுக வேண்டும்? எப்படி வாசிக்க வேண்டும்? எப்படிப் பகிர வேண்டும் என்று வாசக பார்வை முன்வைத்த மாணவர்களிடம் சுருக்கமாக கருத்துரை வழங்கினார்.

“இவ்வளவு முரண்பாடான ஒரு சமூகத்தில்  இவ்வளவு ஏற்றத்தாழ்வுள்ள ஒரு சமூகத்தில் நாம் வாழ நேர்ந்திருக்கிறது.  இந்த வாழ்க்கை இதற்குள்ளாக இருக்கிறது. இதுக்கு போய் எதுக்கு சார் கதை, இதுக்கு போய் எதுக்கு சார் புத்தகம், இதுக்கு போய் எதுக்கு சார் அப்படின்னா ஏதோ ஒரு வகையில் புத்தகங்களும் கதைகளும் நம்முடைய ஆன்மாவை தொடுகின்றன” என்று உணர்வு மேலிடப் பேசினார்.  பிரியாணியில் தொடங்கி, பிரபஞ்சனின் தியாகியை பற்றி பேசி பால் சக்காரியாவின் ஏசு கதைகள் பற்றி விவரித்து, தேன் என்ற தலைப்பில் தான் மொழிப்பெயா்த்த பால் சக்காரியாவின் கதையை வேடிக்கையாக சொன்னபோது அரங்கு முழுவதும் சிரிப்பலை.

அடுத்ததாக ஜெயமோகனின் ‘தேவகி சித்தியின் டைரி’ சிறுகதை குறித்துப் பேசினார். பிறகு கந்தா்வனின்  ‘தான்’ சிறுகதை என பல்வேறு சிறுகதைகளையும் படைப்பாளர்களையும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். நிகழ்வின் இறுதியாக முனைவா் தி.ஹேமலதா நன்றியுரையாற்றினார்.

தினேஷ் பழனி ராஜ்,
வாசக சாலை, தஞ்சை.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)