பதிவு செய்த நாள்

07 ஆக் 2018
15:58

 


ஸ்விட்ர்சார்லாந்தைச் சேர்ந்த யுங் ஃப்ராய்டிற்குப் பின்னர் உளவியல் ஆய்வில் மிக முக்கியமான திருப்புமுனையாகக் கருதப்படுகிறார் ஃப்ராய்டின் மாணவராகத் தோன்றிய யுங் விரைவில் அவரது கோட்பாடுகளிலிருந்து முரண்பட்டு தன் தனிக்கொள்கைகளை உருவாக்கினார். மொத்தமாக அவை analytical psychology என அழைக்கப்படுகிறது. அறிவுத்தளத்திலும் மருத்துவத்துறையிலும் பயன்படுத்தப்படும் (collevtive, unconscious, archetype, extrovert, introvert, persona,anima) போன்ற பல சொற்கள் யுங்கின் பிரயோகங்கள். யுங்கிய உளவியலின் மையக் கருத்தாக்கம் தற்கனிவு (individuation) எனலாம். தன்னறிவு, ஞானம், சுயதேடல் எனவெல்லாம் ஆரம்பகால தத்துவவாதிகள் தொட்டே வழக்கிலிருந்து வரும் இக்கருத்தை ஒரு உயிரியல் மற்றும் உளவியல் உண்மையாக முன்வைத்தார் யுங். அதன் மூலம் வாழ்வெனும் நிகழ்வுக்கு ஓர் அர்த்தம் கிடைக்கும் என்று எண்ணினார். புத்தெழுச்சிக்கால பகுத்தறிவு மனமாகக் கொள்ள முடியாது இவரை. ஒருவிதத்தில் மத்தியகாலத்தைச் சேர்ந்த மறைதேடல்வாதி(mystic)யாகவே வகுக்கமுடியும். அதே நேரத்தில் அவரே விரும்புவதைப்போல ஒரு மனநோய் மருத்துவனாகவும். கீழைத்தேய ஆன்மிக வழிகளில் பேரார்வம் கொண்ட அவரது பங்களிப்பு மானுடவியல், தத்துவம், கலை, மதம், மீஉளவியல் என பல தளங்களிலும் தாக்கம் செலுத்துபவை. தன்னை ஐரோப்பிய மரபின் வழித்தோன்றலாக ஒத்துக்கொண்டாலும் பலவிதங்களில் அதன் நம்பிக்கையோடும் பண்பாட்டோடும் கசப்புற்ற புறநடையாளனாகவே உணர்ந்து வந்தார். அதனாலேயே மெக்ஸிக செவ்விந்திய குடியிருப்புகளுக்கும் கிழக்காப்பிரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் நீண்ட பயணாங்களை மேற்கொண்டு அதனுடானான தொடர்பை வாழ்நாள் முழுதும் பேணி வந்தார்.

தன் வாழ்வில் ஆயிரக்கணக்கான நோயாளிகளைக் கண்ட யுங் மரணித்தபோது அவர் சொந்த ஊரான குஸ்நாக்டில் நடந்த அடக்கச்சடங்கில் ஓர் உள்ளூர் பாதிரி கூறினார்: ‘ஆன்மாவை மீண்டும் ஏற்றுக்கொள்ளும் துணிவை மனிதருக்கு வழங்கியுள்ளார் இவர். தொடர்புறுத்த ஒரு தனிமனிதனை அனுமதிக்கும் வாழ்வின் அணிக்கோவையில் ஊடுருவிகின்றான்.

இந்த participation mystique நிலையின் ஆழ்தலில் தான் படைப்பாக்கம் மற்றும் அம்மகத்தான படைப்பு நம்மீது செலுத்தும் தாக்கம் ஆகியவற்றுக்கான ரகசியம் உள்ளது. ஏனெனில் அவ்வனுபவதளத்தில் தனிநபரின் தீதும் நன்றும் அன்றி மானுட அனுபவக் கூட்டிருப்பின் வாழ்வே பெறுமானம் கொள்கிறது. ஆகையால் தான் எல்லா மகத்தான கலைப்படைப்புகளும் புறவயமானதும் சுயசாயை அற்றும் உள்ளது. இருந்தபோதும் நம்மொவ்வொருவரையும் வலுவாகச் சலனிக்க வைக்கிறது. இதே காரணத்தால் தான் கலைஞனின் சொந்த வாழ்க்கையை அவனது கலையின் இன்றியமையாத ஒன்றாகக் கொள்ளமுடியாது. உச்சபட்சமாக ஒரு உபகாரம் அல்லது அவனது கலைத் தொழிலுக்கான ஒரு உபத்திரவம் என்று வேண்டுமானால் கொள்ளலாம். அவன் பிலிஸ்டைனாகவோ, நற்குடிமனாகவோ, முட்டாளாகவோ, குற்றவாளியாகவோ வாழலாம் அவனது சொந்த பணிவாழ்வு தவிர்க்க முடியாததாகவும் ஆர்வமூட்டுவதாகவும் இருக்கலாம் ஆயினும் அவை எதுவும் அவனது கலையை விளக்குவதில்லை.

-சபரிநாதன்

                 வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)