தலைப்பு | : | காற்றாய் வருபவள் |
ஆசிரியர் | : | இ.எஸ்.லலிதாமதி |
பதிப்பகம் | : | தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் |
விலை | : | 60/- |
கடவுள் இருக்கிறார் என்பவர்களுக்கு இருக்கிறார். இல்லை என்று நாத்திகம் பேசுவோர்க்கு இல்லை. பேயும் அப்படித்தான். இருக்கிறதா? இல்லையா? என்பது அவரவர் அனுபவத்தைப் பொறுத்தது. ஆனால், உலகம் முழுக்க பேய் பற்றிய கதைகளும், அதைப் பற்றிய ஆய்வுகளும் தொடர்ந்த வண்ணம்தான் இருக்கின்றன.
சங்க இலக்கியத்தில் ‘பேய் மகள் இளவெயினி’ என்றொரு பெண்பாற்புலவர் இருந்திருக்கிறார். அச்சம் மிகுந்த இடங்களில் வாழும் மக்களுக்குப் பேய் பற்றிய பயம், நம்பிக்கை அதிகம் இருந்திருக்கிறது.
பேய் என்ற சொல்லுக்கு அச்சம் என்ற பொருளையே தருகிறது தமிழகராதி. அலகை, கழுது, கடி, கூளி என்னும் சொற்கள் பேய் என்னும் பொருளையே தருகின்றன. போரில் அடிபட்டு குற்றுயிராய் கிடக்கும் ஒருவனை விலங்கினங்கள் தின்னாமல் அருகிருந்து அவன் இறக்கும் வரை பேய் காத்ததாக தொல்காப்பிய நூற்பா தெரிவிக்கிறது.
நல்வினை தீவினைகளின் அடிப்படையில் நமக்கு ஆறு பிறப்புகள் உள்ளதென்றும் அவை, மக்கள், தேவர், பிரமர், நரகர், விலங்கு, பேய் என்பதாக மணிமேகலை கூறுகிறது. ஆக பிறப்பின் கடைசி நிலை பேயாகும். பேய் விகாரமிக்க, பெரிய உருவத்தினை உடையது என்று இலக்கிய சான்றுகள் காட்டுகின்றன.
நக்கீரர் குறுந்தொகையில் (80) ‘காய்ந்த மயிர், அகன்ற வாய், பிறழ்ந்த பற்கள், சுழலும் விழிகள், பாம்பும் கூகையும் கூடித் திரியும் காதினையும், பருத்த உடலினையும் பெருத்த வயிற்றினையும் கண்டார்க்கு அச்சம் தரும் நடையினையுடையதாக’ பேயைக் காட்டுகிறார்.
லலிதாமதி எழுதியிருக்கும் ‘காற்றாய் வருபவள்’ என்ற இந்தக் கதையில் காதல் இருக்கிறது, குடும்ப செண்டிமெண்ட் இருக்கிறது, கூடவே பேயும் இருக்கிறது, அந்தப் பேய் யார்? எப்படிப்பட்டது? நல்லது செய்கிறதா? கெட்டது செய்கிறதா? என்பதை நாவலைப் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
- பதிப்புரை
புத்தகத்தைப் வாங்க
தொடர்புக்கு : சென்னை - 9597800485, புதுச்சேரி - 9597800487, கோவை - 9597800415, மதுரை - 9597800452, சேலம் - 9600969301.