பதிவு செய்த நாள்

10 ஆக் 2018
12:38

  பிராமணர்களின் வானவியல் பற்றிச் சில குறிப்புகள் - 7
(ஜான் ப்ளேஃபெயர், ஏ.எம். எஃப்.ஆர்.எஸ். எடின்பர்க் (கிபி.1790)

ஆசிரியர் : தரம்பால்
தமிழில்     : B.R.மகாதேவன்

24. கலியுகத்தின் தொடக்கத்தில் (அதாவது பனாரஸ் பகுதியில் கிறிஸ்து பிறப்பதற்கு 3102 ஆண்டுகளுக்கு முன் பிப்ரவரி 17-18 தேதிகளுக்கு இடைப்பட்ட நடு இரவு) நிலவின் கற்பித இடமானது மேயரின் அட்டவணையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் நிலவின் இயக்கம் எப்படி இருந்ததோ அதுபோலவே எப்போதும் இருந்திருக்கும் என்ற யூகத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கணக்கீட்டின்படி நிலவின் இருப்பிடம் அன்று 10ண், 0யி, 51’, 16‘.

ஆனால், மேயர் நிலவின் நகர்வு பற்றி என்ன சொல்லியிருக்கிறாரென்றால், நிலவின் சுழற்சி வேகமானது சிறிய அளவில் ஆனால், சீராக அதிகரித்துவருகிறது என்று கூறியிருக்கிறார். அதாவது நிலவின் கோண நகர்வானது ஒரு நூற்றாண்டுக்கு ஒருமுறை முந்தையதைவிட முந்தையதைவிட 9‘ அதிகரித்துக்கொண்டே வரும். எனவே இந்த 4801 ஆண்டு இடைவெளியில் 5யி, 45’, 44‘ அதிகரித்திருக்கும். நிலவின் சரியான கற்பித இடத்தைக் கணக்கிட கலியுகத்தின் போது நிலவு இருந்த இடமாக இந்திய அட்டவணை குறிப்பிடுவதனுடன் இதையும் சேர்த்துக் கணக்கிடவேண்டும். அப்படியானால் அதனுடைய அந்த நேரத்தைய கற்பித இடம் 10ண், 6யி, 37’ ஆக இருக்கும். அதே இடமானது திருவள்ளூர் அட்டவணையின்படிப் பார்த்தால் 10ண், 6யி, 0’. இரண்டுக்குமான வித்தியாசம் ஒரு டிகிரியில் மூன்றில் இரண்டு பங்குக்கும் குறைவு. பன்னெடுங்காலத்து வானவியல் கணிப்பைப் பொறுத்தவரையில் இவ்வளவு ஒத்திசைவுடன் இருக்கிறதென்றால் அது நிச்சயமாக அன்று அவர்கள் தமது கண்ணால் பார்த்துக் குறித்து வைத்ததாகவே இருக்கவேண்டும்.


25. இந்த முடிவை உறுதிப்படுத்த எம். பெய்லி அதே யுகத்தில் நிலவின் இடத்தை இந்திய வானவியலாளர்களுக்கு அந்தக் காலத்தில் கிடைத்திருக்க வாய்ப்புள்ள பிற நாட்டு அட்டவணைகளில் இருந்து கணக்கிட்டு ஒப்பிட்டும் பார்த்திருக்கிறார்.  தாலமியின் ஆய்வுகளை முதலில் எடுத்துக்கொண்டிருக்கிறார். பாபிலோனிய அரசர் நபோன்ஸரின் யுகத்தில் இருந்து கலியுகம் வரையான காலகட்டத்தை எடுத்துக்கொண்டு இந்திய எகிப்திய வருடங்களின் கால அளவு, அலெக்ஸாண்டிரியாவுக்கும் திருவள்ளூருக்கும் இடையிலான மெரிடியனில் இருக்கும் வித்தியாசம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு பார்த்தால் இந்திய அட்டவணைகளில் இப்போது குறிப்பிடப்பட்டிருப்பதில் இருந்து சூரியனின் தீர்க்கரேகை 10யி, 21’, 15‘ அதிகமாகவும் நிலவின் தீர்க்கரேகை 11யி, 52’, 7‘ இருப்பதைப் பார்க்கமுடிகிறது.

3000 ஆண்டுகள் என்ற நீண்ட நெடிய காலகட்டம் அல்லாமல் குறைவான காலகட்டத்துக்குக் கூட பின்னோக்கி வானவியல் நட்சத்திரங்கள், கிரகங்களின் இருப்பிடத்தைக் கணிப்பது மிகவும் சிரமமான பணிதான். இதிலிருந்து இந்திய வானவியல் அட்டவணைகள் தாலமியின் ஆய்வுகளில் இருந்து எதுவும் இடம்பெறவில்லை என்பது உறுதிப்படுகிறது.

தைமூரிய அரசரும் வானவியலாளருமான உலுக் பேக்கின் வானவியல் அட்டவணைகள் எகிப்திய அட்டவணைகளைவிட மிகவும் துல்லியமாக இருக்கின்றன. இந்தியாவில் இருந்து அவ்வளவு தொலைவில் இல்லாத நாடுக் கூட கிருஷ்ணாபுரத்து அட்டவணைகளின் காலகட்டமான 1491க்கு ஒரு சில வருடங்கள்தான் முந்தையது. அவர்களுடைய அட்டவணையின் மூல ஆதாரக் காலம் ஜூலை, 4, மதியம், 1437, சாமர்கந்த். எனினும் மேலே குறிப்பிட்டிருக்கும் 1491 காலகட்டத்திலும் கூட இவை இந்திய அட்டவணைகளுடன் ஒத்திசைவு பெற்றிருக்கவில்லை. ஆனால், கிறிஸ்து பிறப்பதற்கு 3102 ஆண்டுகளுக்கு முந்தைய கலியுக காலகட்டத்திய வானவியல் அட்ட்வணையில் சூரியனின் இருப்பிடம் 1யி, 30’ வித்தியாசத்துடனும் நிலவின் இருப்பிடம் 6யி வித்தியாசத்துடனும் காணப்படுகின்றன. இதனால், இந்தியப் பழங்கால வானவியல் அட்டவணைகளானது  தார்தாரியர்களிடம் இருந்தும் பெறப்பட்டதல்ல என்பது நிரூபணமாகிறது.

அரேபியர்கள் தமது வானவியல் அட்டவணைகளில் தாலமி குறிப்பிட்டிருப்பது போன்ற சூரிய, சந்திரனின் கற்பித இடங்களையே குறிப்பிட்டிருந்தனர். மிகப் பழங்காலத்திய சிரிஸோகோகா மற்றும் பிந்தைய நஸிரிதேன் அட்டவணைகளில் பாரசீகர்களும் அவ்விதமே குறிப்பிட்டிருக்கின்றனர். எனவே, பிராமணர்களின் வானவியல் அட்டவணைகள் கிரேக்கர்களிடமிருந்தோ அராபியர்க்ளிடமிருந்தோ பாரசீகர்களிடமிருந்தோ தார்தாரியர்களிடமிருந்தோ பெறப்பட்டதல்ல என்பது இதில் இருந்து நிரூபணமாகிறது.

சியாம் அட்டவணைகளை மட்டுமே காஸினி  ஆராய்ந்து பார்த்திருந்தார். இந்திய வானவியல் அட்டவணைகளின் தனித்தன்மையான அம்சங்கள் பற்றிப் பெரிதாக எதுவும் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. எனினும் அவர் தனக்குக் கிடைத்த சொற்ப தரவுகளை வைத்தே இந்திய வானவியல் ஆய்வுகள் கிரேக்க தாலமியையோ பாரசீகர்களையோ யாரையும் சார்ந்திருக்கவில்லை என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். இந்திய வானவியல் அட்டவணைகள் கலியுக காலத்தில் குறிப்பிடும் சூரிய, சந்திரனின் அதி விலகல் புள்ளி, சூரியனுடைய மைய விலகல் சமன்பாடு இவையெல்லாம் கிரேக்க, பாரசீக அட்டவணைகளில் இருந்து மிகவும் மாறுபட்டதாகவே இருக்கின்றன என்று குறிப்பிட்டிருக்கிறார்.

26. இப்போது நிலவின் நகர்வில் இருக்கும் வேக மாறுபாடு பற்றிப் பார்ப்போம். திருவள்ளூர் அட்டவணைகள் போன்ற பழங்கால அட்டவணைகள் நிலவின் வேகத்தை இப்போது இருப்பதைவிடக் குறைவாக இருப்பதாகவே கணித்திருக்கும். அந்த அடிப்படையில் பார்த்தால், 4383 ஆண்டுகள் 94 நாட்களில் நிலவின் இடமானது கலியுகத்தின் மாறும் ராசிமண்டலத்தில் இருந்து 7ண், 2யி, 0’, 7‘, ணிணூ 9ண், 7யி, 45’, 1‘ விலகிக் காணப்படும். மேயரின் ஆய்வுகளின்படி கணக்கிட்டுப் பார்த்தால் அதே காலகட்டத்துக்கான கற்பித நகர்வானது இதைவிட 2யி, 42’, 4‘ அதிகமாக இருக்கும்.  நிலவின் வேகம் கூடிக் கொண்டுவருகிறது என்று மேயர் குறிப்பிட்டிருக்கிறார். அந்த வேகத்தின் அடிப்படையில் பார்க்கும்போது நிலவின் இடமானது வெகுவாகப் பின் தங்கியதாகவே தெரிகிறது. பிற அட்டவணைகளைப் பொறுத்தவரை இது உண்மையல்ல. ஏனென்றால், நிலவின் 4383 ஆண்டுகள் 93 நாட்கள் நகர்வு தொடர்பாக திருவள்ளூரில் இருந்து கிடைத்த அட்டவணையில் இருந்து கிருஷ்ணாபுரத்தில் இருந்து கிடைத்த வானவியல் அட்டவணையில் நிலவின் நகர்வானது 3யி, 2’, 10‘ குறைவாக இருக்கிறது. இவற்றின் அடிப்படையில் எம். பெய்லி முந்தைய அட்டவணையானது பிந்தைய பகுதி அட்டவணையைவிட மிகவும் பழமையானது என்ற முடிவுக்கு வருகிறார். மேலும் கிருஷ்ணாபுர வானவியல் அட்டவணைகளின் படி நிலவின் நகர்வானது மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் கால அளவில் மேயரின் அட்டவணையைவிட 5யி, 44’, 14‘ குறைவானது. இதுவே அவர்களைப் பொறுத்தவரை நிலவின் வேகத்தில் ஏற்பட்ட மாறுபாடு.

27. இப்போது இதையே மேயரின் அட்டவணைப்படிக் கணக்கிட்டுப் பார்த்தால்  அதாவது கலியுகத் தொடக்கத்தில் இருந்து 4383 ஆண்டுகள் 94 நாட்களில் நிலவின் சுழற்சி சீரானதாக இருந்தால் அதன் கோண நகர்வு எவ்வளவு குறைவாக இருக்கும்  என்று கணக்கிட்டபோது அது 5யி, 43’, 7‘ என்று தெரியவந்திருக்கிறது. முந்தையதைவிட 1’, 7‘ அளவு குறைவு. அப்படியாக கிருஷ்ணாபுரத்து வானவியல் அட்டவணைகளில் நாலாயிரம் ஆண்டுகளுக்கு மேலான நகர்வு தொடர்பாக 1’, 7‘ வேகம் சார்ந்த திருத்தம் செய்துகொண்டாலே மேயரின் வானவியல் கணிப்புகளுடன் ஒத்துப்போகின்றன. இவ்வளவு துல்லியமாகக் கணிக்கப்பட்டிருப்பதால் இந்த அட்டவணைக்கு ஆதாரமாக அமைந்த வானவியல் ஆராய்ச்சியானது கலியுக காலத்தைவிடப் பழமையானதாக இருக்க முடியாது என்பதற்கு மிக அதிக சாத்தியக்கூறு இருக்கிறது. கணிதவியல் வளர்ச்சியின் அடிப்படையில் பார்த்தால் அந்தக் காலகட்டத்தைக்குப் பிந்தையதாக அதுவும் கிறிஸ்து பிறப்புக்கு 2000 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கவும் முடியாது என்றும் தோன்றுகிறது.

28. இந்திய  ஐரோப்பிய வானவியல் கண்டுபிடிப்புகளில் இருக்கும் பல ஒற்றுமைகளில் இதுவும் ஒன்று. அந்த ஒப்புமைகளை ஆராய்ந்து சொல்லியிருக்கும் வரலாற்றாய்வாளர்கள் நிலவின் நகர்வின் வேக மாற்றத்தின் அடிப்படையில் இதைச் சொல்லியிருப்பதால் மிகவும் தீர்மானகரமான முடிவாகவே இதை எடுத்துக்கொள்ளலாம். ஏனென்றால் அந்த வேக மாற்றமானது நவீன கால வான் ஆராய்ச்சிகளின் முடிவுகளுடன் பழங்கால ஆராய்ச்சியை ஒத்திசைவு பெறவைக்கச் செய்யப்பட்ட கணக்கியல் சமன்பாட்டு அலகு அல்ல. ஈதரின் தடை அல்லது புவியிர்ப்பு விசை சென்றடையத் தேவையான கால அளவு என்பது போன்ற கற்பிதமான கணிப்பும் அல்ல. எம்.தெ லாவின் புவீஈர்ப்பு தொடர்பான கோட்பாட்டின் மூலமும்  எம்.தெ லா க்ரான்ஜே கண்டிபிடித்த பூமியின் சுற்றுப்பாதையின் நீள்வட்ட வடிவம் தொடர்பான சமன்பாடு ஆகியவற்றின் அடிப்படையிலும் கண்டுசொல்லப்பட்ட விஞ்ஞானபூர்வமான கணிப்பு. அப்படியாக நிலவின் சுழற்சி வேகமானது கிரகங்களின் நகர்வுகளினால் மறைமுகமாக பாதிக்கப்பட்டு அதிகரித்திருக்கிறது. அந்த வேகமானது நிலவானது நீள்வட்டப் பாதையில் சுழல்வதால் மாறி மாறிக் கூடிக் குறைந்து வருகிறது. பூமியைச் சுற்றிய நிலவின் நகர்வை சூரியனானது கோணங்களில் ஏற்படும் கூடிக் குறைவுக்கு ஏற்ப பாதிக்கிறது. நீண்ட காலகட்டத்தை எடுத்துப் பார்க்கும்போது இந்த மாற்றமானது நிலவின் சுழற்சி வேகத்தில் ஏற்பட்ட அதிகரிப்பு போல் இறுதிவிளைவாகத் தோன்றக்கூடும். ஆனால், இந்த மாற்றம் மிக மிக குறைவாக மிக மிக மெதுவாக நடந்து வந்திருக்கிறது. 

வரலாறு தொடரும்...வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)