தலைப்பு : காவல் நிலையம்
ஆசிரியர் : க.விஜயகுமார்
பதிப்பகம் : தாமரை பப்ளிஷர்ஸ்
விலை : 60/-

பதிவு செய்த நாள்

11 ஆக் 2018
15:45

 சிறந்த பத்திரிக்கையாளர் நண்பர் திரு. க.விஜயகுமார் எழுதியுள்ள, ‘காவல் நிலையம் – மக்களின் உரிமைகள்’ எனும் இந்நூல் சாமானிய மக்களின் சந்தேகங்களுக்கு, அனுபவம் மிக்க குற்றவியல் வழக்கறிஞர் எவ்வாறான விளக்கங்களை அளிப்பாரோ, அது போன்று அமைந்திருக்கிறது.

சட்ட நடைமுறைகளைப் பட்ட பயின்றவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும் என்ற மாயையை இந்நூல் தகர்க்கிறது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் முக்கிய அம்சங்களை பாமர ஜனங்களும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் மிக எளிய முறையில் எழுதப்பட்டிருக்கிறது; இதுபோன்ற நூல் தமிழில் வெளியாவது அரிது! சட்டம் காவல்துறை என்றாலே ஒருவித அச்சத்துடன் விலகிச்செல்லும் மக்களின் எதிர்மறை எண்ண ஓட்டத்தை மாற்றி அமைக்கும் வகையில், மிகச்சிறந்த வழிகாட்டியாக இந்த நூல் திகழும் என்பதில் சந்தேகமில்லை.

இந்நூல் மாணவர்கள் காவல்துறை நண்பர்கள், பத்திரிக்கையாளர்கள், தன்னார்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், இளம் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட சகல தரப்பினருக்கும் மிகுந்த பயனளிக்கக் கூடியது; இது ஒவ்வொருவர் கரங்களிலும் கட்டாயம் இருக்க வேண்டிய பொக்கிஷம்!

 -முனைவர் ஏ.பி.ஜெயச்சந்திரன்

மேலும்



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)