தமிழ்நூல் வெளியீடு மற்றும் விற்பனை மேம்பாட்டுக் குழுமம் வருடம்தோறும் நடத்தும் சென்னை புத்தகத் திருவிழா நாளை தொடங்குகிறது. நான்காவது வருடமாக இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஆகஸ்ட் 17 முதல் 27 வரை புத்தகத் திருவிழா நடைபெற இருக்கிறது. 200க்கும் அதிகமான அரங்குகளுடன் லட்சக்கணக்கான புத்தகங்கள் வாசகர்களுக்காக காத்திருக்கிறது.
தினமும் மாலையில் விழா அரங்கில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன. முதல்நாளான நாளை திரைப்பட நடிகை ரோகிணியின் கவிதை வாசிப்பு நிகழ்வு நடைபெற இருக்கிறது.