பதிவு செய்த நாள்

18 ஆக் 2018
14:05
1084ன் அம்மா - மகாஸ்வேதா தேவி

ங்கமொழியில் மகாஸ்வேதா தேவி எழுதிய Mother of 1084 என்ற நாவலை தமிழில் மொழிபெயர்த்துள்ளார் சு.கிருஷ்ணமூர்த்தி. பழைய மூடத்தனமான சாஸ்திர சம்பிரதாயங்களும், வேண்டாத வறட்டுக் கெளரவங்களும் கொண்ட மேல்தட்டு குடும்பத்து தாய், அந்த மூடச் சம்பிரதாயங்களையும், வரட்டு கெளரவங்களையும் வெறுத்து கீழ்த்தட்டு மக்களையும், அவர்களுக்கான சுதந்திரத்தையும் பெற போராடும் போராளியான மகன் என்ற இருவர்களுக்கிடையிலான உறவையும் பிணைப்பையும் கூறும் உளவியல் மற்றும் உறவியல் ரீதியில் கன பரிமாணங்களுடன் எழுதப்பட்ட நாவல்.

ஆங்கிலம், இந்தி, மராத்தி, அசாமி, பஞ்சாபி, கன்னட, தெலுங்கு, தமிழ், மலையாள மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வங்கத்தில் 12 பதிப்புகள் வந்துள்ள இந்நாவல் இந்தியில் பிரபல இயக்குநர் கோவிந்த் நிகலானியின் இயக்கத்தில் ‘ஹஜார் செளராஸிகீமா’ என்ற தலைப்பில் திரைப்படமாக்கப்பட்டுள்ளது.

புத்தகத்தை வாங்க,
தொடர்புக்கு - 9382853646

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)