நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகளுடன் சென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில்
புத்தகத்திருவிழா நடைபெற்று வருகிறது. ஏராளமான புத்தகங்கள், பல்வேறு பதிப்பகங்கள்
என அனைத்து தரப்பு வாசகர்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
தீவிர இலக்கிய வாசகர்கள் தவறவிடக் கூடாத பதிப்பகங்கள் பல இதில்
இடம்பெற்றுள்ளன. அத்தகைய ஒர் அரங்காக திகழ்கிறது இப்புத்தகத் திருவிழாவின் 144ம்
எண் அரங்கு. புதுப்புனல் பதிப்பகமான இந்த அரங்கில் வாசகர்களுக்கான சிறப்புச்
சலுகையாக தங்கள் பதிப்பக புத்தகங்களுக்கு 20 சதவீதம் கழிவு தரப்படுகிறது.
கழிவு மட்டுமின்றி ஓ.ஹென்றி, எட்கர் ஆலன் போ, அலெக்சாண்டிரா கொலண்டை போன்ற அரிதான
மொழிபெயர்ப்பு நூல்களும் கிடைக்கின்றன. இவை மட்டுமில்லாது கோ.பிரேம்குமார், க.நா.சு
ஆகியோரின் புத்தகங்களும் இங்கே கிடைக்கிறது. மேலும் க.நா.சு மொழிபெயர்த்த ‘மதகுரு’ நாவல் இவ்வரங்கில் மட்டுமே கிடைக்கிறது. மேலும் ஆய்வு மாணவர்களுக்கான ஆய்வு நூல்களும்
புதுப்புனல் வெளியீடாக கிடைக்கிறது.
இது மட்டுமின்றி புதுப்புனல் என்னும் மாத ஏட்டை பத்து
ஆண்டுகளாக தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள். இது இலக்கியத்துடன் ஆய்வு
மாணவர்களுக்கான நல்ல பயிற்சிக் களமாகவும் விளங்குவது குறிப்பிடதக்கது. கவிதைகள்,கட்டுரைகள்
மட்டுமின்றி மொழிபெயர்ப்புக்கும் முக்கியத்துவமளிக்கும் பதிப்பகமாக ’புதுப்புனல்’ திகழ்கிறது.