தலைப்பு : கொங்கை குறுநாவல்
ஆசிரியர் : அண்டனூர் சுரா
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
விலை : 70/-

பதிவு செய்த நாள்

19 ஆக் 2018
12:07

 ண்டனூர் சுரா எழுதிய ‘கொங்கை’ குறுநாவல் நேற்று சென்னைப் புத்தகத் திருவிழா அரங்கு எண் 71ல் (பாரதி புத்தகாலயம்) வெளியிடப்பட்டது. நடிகரும் கவிஞருமான ரோகினி நூலினை வெளியிட பேராசிரியர் சங்கீதா பெற்றுக்கொண்டார். அடுத்தடுத்த பிரதிகளை கவிஞர் வெய்யில், ஆர்.நீலா,  மு.கீதா, கவிஞர் ச.விஜயலெட்சுமி, மாலதி , மனுஷி , உமா மோகன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

முதலாவதாகப் பேசிய பேராசிரியர் சங்கீதா, “நாவலின் பெயரே அதிரும்படியாக இருக்கிறது. இந்நாவலில் வரும் கதாபாத்திரங்கள் சிலர் நிஜாத்திலும் இருக்கலாம் என்றே நினைக்கிறேன்.  சுராவிடம் பேசும்போது சொன்னார், ‘இந்நாவலில் வரும் விஜி கதாபாத்திரம் எனக்கும் மிகவும் பிடிக்கும்’ என்று. இன்றைய பெண்ணியப் பார்வையை அழகாகப் பதிவு செய்திருக்கிறார். ‘கொங்கை’ நாவல் இன்னும் சில காலங்களில் தமிழ் இலக்கிய உலகில் ஒரு பெரிய அதிர்வலையை உருவாக்கும் என்று நினைக்கிறேன்.” என்றார்.

மு.கீதா பேசுகையில், “இவர் எழுதியிருக்கிற விதம் படிப்பதற்கு மிகவும் எளிதாக இருக்கிறது. பெண்களின் வலியை ஆண்கள் எழுதுவதை வரவேற்கிறோம். இதுபோன்று எல்லா ஆண்களும் பெண்களின் வலியைப் புரிந்துகொண்டால் மகிழ்ச்சியாக இருக்கும்.” என்றார்.

“ஆரம்பத்தில் சுராவை சிறுகதை படைப்பாளராகத்தான் பார்த்தேன். நிறைய வெகுஜன இதழ்களில்  அவருடைய சிறுகதைகள் வெளியாகிக்கொண்டே இருக்கும். இடைவிடாது ஓர் எழுத்துப் போராளி அவர். அதேபோல அவருடைய முதல் நாவலான முத்தன் பள்ளம் புத்தகத்திற்கு அடுத்து இப்போது ‘கொங்கை’ நூலை வெளியிட்டிருக்கிறார். இந்நாவலின் பெயரைக் கேட்டாளே ‘அதிருது’. ஏனென்றால் ஏற்கனவே கவிஞர் குட்டி ரேவதி இதுபோன்ற ஒரு பெயரை வைத்து வெளியிட்ட கவிதை தொகுப்பின் சர்ச்சையே இன்னும் முடியவில்லை. இப்போது கொங்கை என்ன சர்ச்சையை சந்திக்கப் போகிறது என்று தெரியவில்லை. அவருடைய இந்நாவல் நல்ல பெயரையும் நிறைய விருதுகளையும் பெற வாழ்த்துகிறேன்.” என்றார்  நீலா.

கவிஞர் வெய்யில் பேசும்போது, “இப்போதுதான் புத்தகம் கையில் கிடைத்தது. முன்னுரை மட்டும்தான் படித்தேன். தற்போது, வரலாற்று ஆவணங்களினுடைய காலம் என்றே நினைக்கிறேன். வரலாறும் ஆவணங்களும் தான் புனைவுகளாக வெளிவருகிறது. அது அவசியமும் கூட. ஆண்களின் பிரதி அதிகமாக உலகம் முழுக்க பேசப்படுகிறது. பெண்களின் கதை பேசப்படுவதை முக்கியமானதாக பார்க்கிறேன். முதலில் இந்நாவலுக்கு முலை என்று பெயர் வைத்து பிறகு கொங்கை என்று மாற்றியதாக சொன்னார் சுரா. இரண்டுமே அரசியல்பூர்வமாகதான் இருக்கிறது. ஒரு பெண்ணின் கதையை ஆண் எழுதியிருப்பதால், இப்புத்தகத்தை வாசிக்க ஆர்வமாக இருக்கிறேன்.” என்றார்.

“பெண்ணின் கதையை ஆண் எழுதியிருக்கிறார். எப்படி எந்த கோணத்தில் எழுதியிருக்கிறார் என்று தெரிந்துகொள்ள ஆவளாக இருக்கிறேன்.” என்று இறுதியாகப் பேசினார் நடிகர் ரோகினி.

ஏற்புரையாற்றிய அண்டனூர் சுரா, “நிகழ்விற்கு வருகைதந்து நாவலினை வெளியிட்ட அனைவருக்கும் நன்றி. இந்த நாவலைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், ‘நான் ஒரு பெண்ணாகப் பிறந்தால்’ என்பதன் வெளிப்பாடுதான் இந்நாவல். நான் இந்த நாவலுக்கு முதலில் வைத்த பெயர் ‘முலை’. எனது துணைவியார் தான் என் படைப்புகளுக்கு முதல் வாசகர். அவர் இந்தப் பெயரைப் பார்த்து சற்று முகம் சுளிக்கவே, ‘கொங்கை’ என்று பெயர் மாற்றினேன்.

முலை என்று வைக்கின்ற போது அவருடைய முகம் மாறியது. கொங்கை என்று மாற்றிய போது ஒரு புத்துணர்ச்சி அவர் முகத்தில் தெரிந்தது. அப்படியென்றால் முலைக்கும் கொங்கைக்கும் என்ன வித்யாசத்தை உணர்ந்திருக்கின்றார் என்று தெரியவில்லை. ஆனால் முலைக்கும் கொங்கைக்கும் இடையே ஒரு வர்க்க வித்யாசம் இருக்கிறது. இந்நாவலில் அந்த வர்க்க வித்யாசமும் பெண்கள் படுகின்ற அவளமும், ஆண்களின் முற்போக்கு மற்றும் பிற்போக்குப் பார்வையில் உள்ள உளவியல் சிக்கலையும் இந்நாவலில் பதிவு செய்திருக்கிறேன்.” என்றார்.

- கவிமணிவாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)