சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வரும் நான்காவது புத்தகத் திருவிழாவில் ‘சிறந்து புத்தகங்களை’த் தேர்வுச் செய்து பரிசுகள் வழங்கப்பட இருக்கின்றன. 2017 - 18ம் ஆண்டில் வெளியான புத்தகங்களைத் தேர்வு செய்து இந்தப் பரிசு வழங்கப்பட இருக்கிறது. புத்தகத் திருழாவின் இறுதி நாளான ஆகஸ்ட் 27ம் தேதி மாலை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இப்பரிசுகளை வழங்குகிறார். பரிசு பெறுபவர் சார்பாக ஆயிஷா இரா.நடராசன் ஏற்புரையாற்றுவார்.
பரிசு பெரும் நூல்களின் பட்டியல்...
நாவல்
குணா கவியழகனின் கர்ப்ப நிலம் - அகல் வெளியீடு
சிறுவர் இலக்கியம்
யெஸ்.பாலபாரதியின் புதையல் டைரி - புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு
சிறுகதை
மனோஜின் அப்சரஸ் - உயிர்மை பதிப்பகம் வெளியீடு
கவிதை
வெய்யிலின் மகிழ்ச்சியான பன்றிக்குட்டி - கொம்பு பதிப்பகம் வெளியீடு
கட்டுரை
ஆ.திருநீலகண்டனின் ‘நீடாமங்கலம் சாதிய கொடுமையும் திராவிட இயக்கமும்’ - காலச்சுவடு பதிப்பகம் வெளியீடு
சூழலியல்”
ந.வினோத் குமாரின் ‘வேட்டைக்கார ஆந்தையின் தரிசனம்’ - தமிழ் இந்து வெளியீடு
மொழிபெயர்ப்பு
லியோ ஜோசப்பின் ‘இந்திய மொழிச் சிறுகதைகள்’ - ஸ்ரீசெண்பகா பதிக்கபம் வெளியீடு
பெண்ணியம்
அ.வெண்ணிலாவின் ‘எங்கிருந்து தொடங்குவது’ - அகநி வெளியீடு
கல்வி
ஆயிஷா. இரா.நடசானனின் இந்திய கல்விப் போராளிகள் - புக்ஸ் ஃபார் சில்ரன்
வரலாறு
ந.முத்துமோகனின் ‘இந்தியத் தத்துவங்களூம் தமிழின் தடங்களும்’ - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.