சில மாதங்களுக்கு முன்பு தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுக்க மாணவர்களின் அன்பினால் பிரபலம் ஆனவர் ஆசிரியர் பகவான். திருவள்ளூர் மாவட்டம் வெளியகரம் அரசு பள்ளி ஆசிரியான பவானை பணியிட, மாற்றம் செய்யக்கூடாது என்று மாணவர்கள் கண்ணீர்மல்க அவரைக் கட்டிணைத்துப் போராடினர்.
அந்த வீடியோ வெளியானதில், மாணவர் - ஆசிரியரின் அன்புப் போராட்டத்தைப் பார்த்து தமிழகமே வியந்தது...
தற்போது அதே பள்ளியில் பணியாற்றி வருகிறார் பகவான். மாணவர்களுக்குப் பிடித்த ஆசிரியர் என்பதைக் கடந்து, கவிஞர் எழுத்தாளர் என்கிற இன்னொரு முகமும் அவருக்கு இருக்கிறது.
அவருடைய எழுத்து மற்றும் இலக்கிய அனுபவங்களை நூல்வெளி வாசர்களுடன் பகிர்ந்துகொள்ளும் சிறப்பு நேர்காணல்...