தென் தமிழகத்தின் மிகப்பெரிய புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 31ம் தேதி துவங்கியிருக்கிறது. தென் இந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் தொடர்ந்து பத்து வருடங்களாக தமுக்கம் மைதானத்தில் இந்தப் புத்தகத் திருவிழாவை நடத்தி வருகிறது.
செப்டம்பர் 10ம் தேதி வரைக்கும் நடைபெற இருக்கும் புத்தகத் திருவிழாவை மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமர் திறந்துவைத்து சிறப்புரையாற்றினார்.
கிட்டத்தட்ட 150க்கும் அதிகமான புத்தக விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தக கண்காட்சி நடைபெறும். தினமும் மாலை 4 மணி முதல் பல்வேறு இலக்கிய நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது.