பதிவு செய்த நாள்

02 செப் 2018
18:54

துரை புத்தகத் திருவிழா சக்தி கோவிந்தன் கலை அரங்கில் மதுரையை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 50  மாணவர்கள் பாரதி புத்தகாலயத்தின் குழந்தைகளுக்கான புதிய நூல்கள் ஐம்பதினை வெளியிட்டு அறிமுகப் படுத்தினர்.

மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்த 10 மாணவர்கள், அய்யங்கோட்டை ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப்பள்ளியை சேர்ந்த 4 மாணவர்கள் , பூலாம்குளம் ஊராட்சி ஒன் றியம் துவக்கப் பள்ளி   சேர்ந்த 8 குழந்தைகள் , டாக்டர் டி. திருஞானம் துவக்கப் பள்ளியை சேர்ந்த 21 மாணவர்கள் மற்றும் மதுரை கல்லூரி மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் என 50 மாணவர்கள் பங்கு கொண்டனர்.

மிளகாய் பட்டணம், கண்ணாமூச்சி , ஓடி வா ஓடி வா சின்னக்குட்டி , சீருடை, சுப்பிரமணி கொப்பரை தேங்காய் , பனி அரசன், பச்சைக்கிளி, சிட்டுக்குருவியின் கெட்டித்தனம், எட்டாம் வகுப்பு சி பிரிவு, சாயாவனம், கடும்காப்பி போன்ற புத்தகங்கள் வெளியிடப்பட்டு குழந்தைகளால் அறிமுகப்படுத்தப்பட்டன.


பாரதி புத்தகாலயத்தின் நாகராஜன் , கலகல வகுப்பறை ரெ.சிவா , டாக்டர் டி. திருஞானம் துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் க.சரவணன் விழா ஏற்பாட்டினை செய்தனர். அறிவியல் இயக்கம் பாண்டியராஜன், தமுஎசக ஸ்ரீரசா , ஆசிரியரகள் ஷிலா, செந்தாமரை, தங்கலீலா, ராணி குணசீலி, இந்திரா மற்றும் பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டனர்.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)