பதிவு செய்த நாள்

06 செப் 2018
19:17

  மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் மற்றும் இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் எழுதுவதன் மூலம் தனது இலக்கியப் பயணத்தை துவக்கினார் சுனில் கிருஷ்ணன். காந்தியம் சார்ந்த அவருடைய கட்டுரைகள் மிருந்த வரவேற்பைப் பெற்றன. அதேபோல, இலக்கியத் தடம் பதிக்க, பதாகை என்கிற இணைய இதழையும் நடத்தி வருகிறார்.

சமீபத்தில் அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பான அம்புப் படுக்கை நூலுக்கு சாகித்ய அகாடமியின் யுவ புரஷ்கார் விருது அறிவிக்கப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக 'அன்புள்ள புல் புல்' என்கிற கட்டுரைத் தொகுப்பையும் அவருடைய வாசகர்களுக்கு அளித்துள்ளார்.

ஆயுர்வேத மருத்துவரான சுனில் கிருஷ்ணன், எதார்த்த கதாபாத்திரங்களை தன்னுடைய புனைவு உலகத்தில் புகுத்தி புதுமையான படைப்புகளை தமிழ் இலக்கிய உலகிற்கு வழங்கி வருகிறார்.

அவருடைய படைப்புகள் மற்றும் நவீன இலக்கியம் சார்ந்த அனுபவங்களை நூல்வெளி வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்...வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)