பதிவு செய்த நாள்

07 செப் 2018
11:40

லையாள எழுத்தாளர் ஹரீஷ், மாத்ருபூமி இதழில் ஒரு நாவலை தொடராக எழுதி வந்தார். சில வாரங்கள் அந்த தொடர் வெளியானதும், அதில் சில பகுதிகளை மட்டும் எடுத்து சமூகவலைதளங்களில் பரப்பி, ‘இந்த நாவல் இந்துக்களை புண்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது’ என்று சர்ச்சைகளை கிளப்பினர் இந்து அமைப்புகள். மேலும் எழுத்தாளரின் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

இதனால், அந்தத் தொடரை பாதியிலேயே நிறுத்துவதாக தெரிவித்தார் ஹரீஷ். பிறகு அந்த நாவலை முழுவதுமாக எழுதி முடித்து, ‘மீஷா’ என்கிற தலைப்பில் புத்தகமாக வெளியிட தயாராக இருந்தார். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் ‘மீஷா’ நாவல் இந்து மதத்தையும், இந்து மதத்தை பின்பற்றுபவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளதாகவும், அதனை தடை செய்ய வேண்டும் என்று மனு அளித்திருந்தார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அதில், “எழுத்தாளர்களுக்கு கற்பனை செய்வதற்கான சிந்தனை அவசியம். ஒரு வரைமுறைக்குள் உட்பட்டு தன் கற்பனைகள் இருக்க வேண்டும் என்று சொல்ல முடியாது. எழுத்தாளர்களின் சிந்தனை, கற்பனை சுதந்திரமானது. அதை கட்டுப்படுத்த முயன்றால் புதிய சிந்தனைகள் உருவாகாது. அதனால் ‘மீஷா’ மலையாள நாவலுக்கு தடைக்கோரும் மனுவை தள்ளுபடி செய்கிறேன்” என தீர்ப்பளித்தார்.



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)