பதிவு செய்த நாள்

12 செப் 2018
12:27
காலச்சுவடு செப்டம்பர் இதழ்

தேவி மகாத்மியம் - சுகுமாரன் கவிதை

தெய்வமானாலும் பெண் என்பதால்
செங்ஙன்னூர் பகவதி
எல்லா மாதமும் தீண்டாரி ஆகிறாள்

ஈரேழு உலகங்களையும் அடக்கும்
அவள் அடிவயிறு
வலியால் ஒடுங்குகிறது; கனன்று எரிகிறது

விடாய்த் தினங்களில் விடும் பெருமூச்சு
யுகங்களாக வேரூன்றிய
விருட்சங்களை உலுக்குகிறது.

தொடை பிளக்கும் வேதனையில்
அவள் எழுப்பும் தீனக்குரலில்
திசைகள் எட்டும் அதிர்கின்றன

எரிமலைக் குழம்புபோலப் பொங்கி
யோனியிலிருந்து வழியும் குருதித் தாரையில்
நதிகள் சிவந்து புரள்கின்றன.

விலக்கப்பட்ட உதிரத்தை ஒற்றிய வெண்பட்டு
புனிதச் செம்பட்டாகிறது
அண்டமெங்கும் தெறித்த செந்நீர்த் துளிகள்
உலர்ந்து குங்குமமாகிறது

எந்தத் தேவி இந்தப் பூமியைப் புரக்கிறாளோ
அவளே ஆற்றல் என்று
விண் முழங்குகிறது.
மண் எதிரொலிக்கிறது.

செங்ஙன்னூர் பகவதி தேவியானது
தெய்வம் என்பதால் அல்ல
பெண்ணாக இருந்ததால்.
(மனுஷ்யபுத்திரனுக்கு)

மேலும் பல்வேறு படைப்புகளுடன் இந்த மாத காலச்சுவடு இதழ்...

திரை
வெள்ளை அமெரிக்கா

கதை
கோதைமங்கலம்
இல்லாமல் போவது

அஞ்சலி
குல்தீப் நய்யார் (1924-2018)
வி.எஸ். நைபால் (1932-2018) பின்காலனிய உலகின் வீடற்ற மனிதன்

கவிதைகள்
இசை

மதிப்புரை
துயரத்தின் சின்னம்

பதிவு
ஓய்வற்ற இயக்கம்

கட்டுரை
கலைஞர் நினைவுகள் இனியவையும் இன்னாதவையும்
வரலாறு விடுதலை செய்யும்
தலித்துகளுக்கும் திராவிட அரசியலுக்குமான கடைசிக் கண்ணி
திரை எனும் கொல்லிப்பாவை
அசோகமித்திரனின் மானுடப்பக்கம்
1924 – காவிரி பெருவெள்ளமும் பேரழிவும்
அமெரிக்கக் கல்வி- ஆசிய மாணவர்கள் ஒதுக்கப்படுகிறார்களா?

நன்றி : காலச்சுவடு இதழ்

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)