பதிவு செய்த நாள்

14 செப் 2018
13:05

 ஞ்சை வாசகசாலையின் ஐந்தாம் நிகழ்வு தஞ்சை பெசன்ட் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் எழுத்தாளர் சி.எம்.முத்துவின் கறிச்சோறு நாவல் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.

நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக இரா.எட்வின் மற்றும் வாசகப்பார்வையில் முனைவர் தி.ஹேமலாதா ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்களுடன் நாவலாசிரியர் சி.எம்.முத்துவும் நிகழ்வில் பங்கேற்றார்.

நிகழ்வில்
நிகழ்வில்

முதலாவதாக வாசகபார்வையில் பேசிய முனைவா் தி.ஹேமலதா கனகச்சிதமாக தனது பார்வையை முன் வைத்தார். அதற்கடுத்ததாக சிறப்புரையாற்றிட வந்த எழுத்தாளா் இரா. எட்வின், கறிச்சோறு நாவலை பற்றியும், அது பேசிய சாதிக்குள் இருக்கிற சாதிய அரசியலையும், அந்த அரசியலை  எழுத்தின் மூலமாக பேசிய எழுத்தாளா் சி.எம்.முத்துவையும், சமகால சாதியப் பிரச்சனைகளையும், அதன் அரசியலையும், சாதிக்குள் சாதி பார்த்து நடத்தப்படுகிற பிழைப்புவாதத்தையும் தனது பாணியில் உணர்ச்சிப்பூா்வமாக சொன்னதில் நேரத்தை யாருமே கவனித்ததாகத் தெரியவில்லை.

இறுதியாக  ஏற்புரையாற்றிட வந்த எழுத்தாளா் சி.எம். முத்து, ஜெயகாந்தனின் பாடலோடு உரையை தொடங்கினார். மேலும் தனது எழுத்து அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

தினேஷ்பழனி ராஜ்,
வாசக சாலை.



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)