ஏறு தழுவுதல் - மகாராசன்

பொருளியல் சுரண்டலை நோக்கமாகக் கொண்ட உலகமய, ஒற்றைப் பண்பாட்டு மேலாதிக்கச் செயல்பாடுகளின் வழியாக, நிலம்சார்ந்த அடையாளங்கள் பலவும் அழிக்கப்பட்டு வருகின்றன. அதன் இன்னொரு பரிமாணம் தான் ஏறுதழுவல் மீதான பண்பாட்டுத் தடை. இந்திய ஒன்றியத்தின் துணையோடு விலங்குநலம் பேணுவதாகத் தெரிவித்துக்கொண்ட அமைப்புகள் இத்தடையின்பின்னணியாகச்

மேலும்

மதில்கள் - வைக்கம் முகமது பஷீர்

- வைக்கம் முகமது பஷீர், தமிழில் : சுகுமாரன்

மலையாள நவீன இலக்கியத்தில் மிக அதிகம் சிலாகிக்கப்பட்டவரும் மிக அதிகம் விமர்சிக்கப்பட்டவரும் வைக்கம் முகம்மது பஷீராக இருக்கக்கூடும். இந்த இரண்டு நிலைகளையும் கடந்து இன்று இலக்கிய படிமமாக கொண்டாடப்படுகிறார். அவருடைய இலக்கியத்திற்கு அவர் தான் மூலப் பொருள், படைப்பு எல்லாம். அவர் எழுதியது தன் சொந்த வாழ்க்கையின் அனுபவம்

மேலும்

“தன் வெளிப்பாடு – சுநீல் கங்கோபாத்தியாய்”

 சுநீல் கங்கோபாத்யாய் எழுத்தில் வெளியான ’தன் வெளிப்பாடு’ (Atmaprakash) நாவல், சுநீல் கங்குலியின் வாக்குமூலங்களை 194 பக்கங்களுக்கு விவரிக்கிறது. மது, கஞ்சா, எல்.எஸ்.டி, செக்ஸ் என ஒருவகைக் கலாச்சாரத்தைப் பதிவு செய்கிறது என்றால் மற்றொரு பக்கம் கிழக்குப் பாகிஸ்தான் பிரிவினையால் சிதைந்த குடும்பங்களின் வாழ்வை அதே வலியோடு நாடகீயமாகவன்றி

மேலும்

தீப்பற்றிய பாதங்கள் - டி.ஆர்.நாகராஜ்

- டி.ஆர்.நாகராஜ்

 டி.ஆர்.நாகராஜ் எனப்படும் தோட்டபள்ளப்பூர் ராமைய்யா நாகராஜ் என்ற இலக்கியக் கோட்பாட்டாளரை கன்னட எல்லை தாண்டி லேசாக அறியத் தொடங்கியபோது, அவர் தனது 44வது வயதில் இறந்தும் போனார்.  யு.ஆர்.அனந்த மூர்த்தியை துரோணாச்சாரியாராகவும் தன்னை அவருடைய சீடனாகவும் சொல்லிக்கொண்டவர். ஆதி சூத்திரர் என்றும் இடதுசாரி காந்தியவாதி என்றும் தன்னை

மேலும்

இயக்குநர் சீனு ராமசாமியின் “காற்றால் நடந்தேன்”

- சீனு ராமசாமி

“நவீன கவிதை உலகில் ஒரு புதிய கவிஞராக சீனுராமசாமியின் கவிதைகள் ஓர் உணர்ச்சிகரமான சூழலை கவித்துவமாக விவரிப்பவை. அவ்வகையில் காற்றால் நடந்தேன் நூலின் ஒவ்வொரு கவிதையும் ஒப்பீட்டளவில் தனித்தன்மை கொண்டவை. ஆழ்மன உணர்வில் மழலைத்துவம் மீறாமல் வெளிப்படுகிற அப்பா, மகள், தாத்தா கவிதைகள் இந்நூலின் சிறந்த கவிதைகளாக மிளிர்கின்றன. முன்பாக

மேலும்

உனது பேரரசும் எனது மக்களும் -கோர்கோ சட்டர்ஜி

- கோர்கோ சட்டர்ஜி

 சித்தாந்த கருத்துருவாக்கங்களுக்கு எதிரானச் செயல்பாடுகளால் இந்திய அளவில் கவனிக்கப்பட்ட எழுத்தாளர் கோர்கோ சட்டர்ஜி. தன்னுடைய எழுத்துகளின் மூலம் மறுக்கமுடியாத வாதங்களை முன்வைக்கும் சட்டர்ஜி மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர். இந்தியா ஒரு தேசமாக அன்றி எவ்வாறு ஒரு பேரரசுபோலச் செயல்படுகிறது என்பதைத் தன்னுடைய “உனது பேரரசும் எனது

மேலும்

பாலகுமாரன் எழுதிய மகாபாரதம்

- பாலகுமாரன்

  நம் ஐம்புலன்கள் தான் பஞ்சபாண்டவர்கள், மனிதரின் மூலாதார உயிர்ச்சக்தி திரெளபதி. அந்த உயிர்ச்சக்தி வெளிப்பார்வைக்கு பஞ்ச பூதங்களுக்கு அடங்கியது போல் தோன்றினாலும், பஞ்ச பூதங்களை அதுவே கட்டுக்குள் வைத்திருக்கிறது. குருஷேத்திரம் என்பது ஓர் ஊர் அல்ல. அது நம் உடல். இடையறாது மனிதரின் உடம்பின் உள்ளே குருஷேத்திரப் போர் நடந்து கொண்டே

மேலும்

சட்ட வல்லுநர் திருவள்ளுவர் - முனைவர். மு.ராஜேந்திரன். இ.ஆ.ப.,

- முனைவர்.மு.ராஜேந்திரன். இ.ஆ.ப.,

 உலகமெங்கும் அறக்கருத்துக்கள் தான் அந்தந்த நாடுகளின் சட்டங்களுக்கு முன்னோடியாக இருந்துள்ளன. திருக்குறள் அந்தவகையில் தமிழர்களின் மிகச்சிறந்த அறநூல். மேல்நாட்டவர்கள் நம் நாட்டின் சட்ட திட்டங்களை வடிவமைத்ததாக ஒரு கருத்து உள்ளது. அது தவறு. இன்றைய சட்டங்களுக்கு ஆதாரமாக உள்ள அறக்கருத்துகள் மட்டுமின்றி நீதிமன்ற நடைமுறைகளும்

மேலும்

புலிநகக் கொன்றை - பி.ஏ.கிருஷ்ணன்

ஒரு குடும்பத்தின் ஐந்து தலைமுறையை சேர்ந்தவர்களை பற்றிய கதை புலிநகக் கொன்றை. பொன்னா என்னும் ஒரு பாட்டியின் இறுதி நாட்களில் ஆரம்பிக்கும் கதை, முன்னும் பின்னும் பயணிக்கிறது. பொன்னா நாவலின் மையமாக இருக்கிறார். பொன்னாவின் தாத்தாவிடமிருந்து ஆரம்பித்து எள்ளு பேத்தி பிறக்கும் வரை நீளுகிறது. மிகப்பெரிய நாவலாக போயிருக்க கூடிய அபாயம்

மேலும்

சஞ்சீவி மாமா - கொ.ம.கோ. இளங்கோ

- கொ.ம.கோ. இளங்கோ

சில புத்தகங்கள் மட்டுமே எடுத்தவுடன் வாசித்து முடித்தே மூடிவிட வேண்டும் என தோன்றும். அப்படியான ஒரு புத்தகம் இது. தொடரும் சாதி ஆணவக் கொலைகள், சாதிய படுகொலைகள் பின்னணியில் இந்த புத்தகம் ஆகச் சிறந்த வரவு. பள்ளிகளிலும் மாணவர்கள் (புதுச்சேரியில்) கையில் அவர்கள் சாதி படிநிலையை சொல்லும் கயிறினை கையில் கட்டி வரும் அவலம் இப்போதெல்லாம்

மேலும்