இந்திய ஓவியங்கள்

- ஸுபா

     இடிவிழுந்து தீப்பற்றிய மரத்திலிருந்து நெருப்பைக் கண்டுணர்ந்த ஆதிமனிதன் முதன்முதலில் பயந்துபோனாலும், பின்வந்த நாட்களில் அதனைப் பக்குவப்படுத்தக் கற்றுக்கொண்டான். அதன் வெளிச்சத்தைக் கொண்டு தன் குகைகளை ஒளிர்வித்தான். எரிதழலின் வெம்மையில் தான் வேட்டையாடின இறைச்சித் துண்டங்களை வாட்டி பசிதீர்த்துக்

மேலும்

டேஞ்சரஸ் க்ளிட்டர் - ஒளிரும் அபாயம்!

- பழயெடுத்துப் பரம்பன்

முகலாயர் படையெடுப்புக்குப் பயந்து, தன்னுடைய தங்க ஆபரணங்கள், சேமிப்புகள் ஆகியவற்றை பொக்கிஷமாக தன்னுடைய பாளையங்களில் ஒளித்து வைக்கிறார் மதுரை ராணி மங்கம்மாள். சிவகிரி, அழகாபுரி என இரண்டு பாளையங்களில் அப்படி பதுக்கின தங்கத்தை ஒரு குகையில் வைத்து பாதுகாக்கிறார்கள். இந்த இரண்டு பாளையங்களுக்கும் பொதுவான மலைக்கு இருபுறங்களிலும்

மேலும்

இருமுனை - தூயன்

- தூயன்

சமகால உளவியல், சரித்திரப் புனைவு, சிறுவர்களின் கதை உலகம், பெண் மனம், சிறுதெய்வ சரித்திரம், என்றுவிதவிதவிதமான ஏழு சிறுகதைகளும் ஒரு குறுநாவலும் கொண்ட தொகுப்பு.தொகுப்பின் தலைப்பான இருமுனை 'பைபோலார் டிஸார்டர்' என்னும் உளவியல் நோயை மைய இழையாகக் கொண்டு இரண்டிரண்டாக நகர்கிறது. பலருக்கும் இயல்பாக நகரும் அன்றாட வாழ்க்கையைப் பெரும்

மேலும்

கோபி கிருஷ்ணன் படைப்புகள்- ஒரு பார்வை!

- கோபி கிருஷ்ணன்

கோபி கிருஷ்ணன் படைப்புகள் உளவியல் சார்ந்த தனி மனிதனின் சிக்கல்கள், பொருளாதாரம் சுமத்தும் வாழ்வியல் பிரச்சனைகள், சமூகம் சார்ந்த பிரச்சனைகள் தனி மனிதன் மீது ஏற்படுத்தும் தாக்குதல்கள், ஒடுக்கப்பட்ட பாலியல் ஏற்படுத்தும் மனிதனிடம் ஏற்படுத்தும் தாக்கங்கள் என்று உளவியலை மையமாக வைத்து எழுதிய கிட்டத்தட்ட 90 சிறுகதைகள், 4 நாவல்கள்,

மேலும்

பெருங்கடல் போடுகிறேன் - அனார்

   காலம் என்பது எப்போதுமே கைப்பிடிக்குள் அடக்க முடியா காற்றினைப் போலத்தான் கரைந்து சென்றுகொண்டே இருக்கிறது. கடக்கின்றோமா? கடந்து செல்கின்றதா? எனப் புரியாத பல கேள்விகளைச் சுமந்துகொண்டேதான் கழிந்தன பால்யங்களும், நடந்து கொண்டிருக்கும் இன்றும், எதிர்வரும் நாளையும். தக்கவைத்துக்கொள்ள இயலாத பல அசாத்தியங்களை கலைஞன் என்பவன்,

மேலும்

இந்திய பயணக் கடிதங்கள் - எலிஸா ஃபே

- எலிஸா ஃபே, தமிழில் : அக்களூர் இரவி

18ம் நூற்றாண்டின் இறுதியில் கடல்வழியாகவும், தரைவழியாகவும் நீண்ட பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எலிசாவுக்குக் கிடைக்கிறது. ஆங்கிலேய பாரிஸ்டரான தன் கணவர் ஃபேயுடன்  தொடங்கும் தன் பயணத்தை குறிப்புகளாகவும், கடிதங்களாகவும் எழுதத் தொடங்குகிறார் எலிசா.சின்னஞ்சிறு நிகழ்வுகள், எளிய சித்தரிப்புகள்,

மேலும்

​கிழக்கிந்திய கம்பெனி : ஒரு வரலாறு - நிக் ராபின்ஸ்

- நிக் ராபின்ஸ்( தமிழில் : ராமன் ராஜா)

            கிழக்கிந்தியக் கம்பெனியின் 400வருட கார்ப்பரேட் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் மூன்று அடிப்படையான தவறுகளைச் செய்திருக்கிறார்கள். ஒன்று மார்கெட் முழுவதையும் தானே பைக்குள் போட்டுக்கொள்ளவேண்டும் என்கிற ஏகபோகப் பேராசை. இரண்டு அதிகாரிகளுக்கும் முதலாளிகளுக்கும் இருந்த சூதாட்ட இச்சை. மூன்றாவதாக கம்பெனி

மேலும்

மாயி-சான் : டோஷி மாருகி

- டோஷி மாருகி தமிழில், கோ.மா.கோ.இளங்கோ

இரண்டாம் உலகப் போரின் எண்ணற்றச் சுவடுகள் இன்னும் இந்த பூமியில் இருந்து மறையவில்லை. அதிலும் மனதை பதைபதைக்கச் வைத்த பல ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்த ஹிரோஷிமா - நாகசாகி அணுகுண்டுத் தாக்குதலை, வரும் எந்த நூற்றாண்டிலும் மறந்துவிட முடியாது. இன்றும் அதன் பாதிப்புகளை மக்கள் அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதில்

மேலும்

முத்தங்களின் கடவுள் - மனுஷி

- மனுஷி

அழகியல் தாண்டி ஆங்காங்கே வெளிப்படும் உணர்வுகளுக்குள் உறைந்துகிடக்கும் இருளும் வெளிச்சமும் தான் மனுஷியின் கவிதைகள். காதலென்ற பெயரில் நிகழ்த்தப்படும் நாடக பாத்திரங்களை பீங்கான் சிற்பம் போல போட்டுடைக்கிறார் போகிறபோக்கில். உடைந்து சிதறிய மொத்த உருவங்களாக விளங்கும் கடவுளை முத்தங்களின் கடவுள் என்று

மேலும்

இராசேந்திர சோழன் அரிய தகவல்கள் 1001 - அறம் கிருஷ்ணன்

- அறம் கிருஷ்ணன்

 ஐம்பது வயதில் மன்னனாக முடிசூட்டி, அறுபதுவயதுக்குமேல் கங்கை, கடாரம் பகுதிகளில் படையெடுத்து தெற்காசியா முழுக்க வெற்றியை நிலைநாட்டி,  கீழைக்கடல் முழுக்கப்பயணம் செய்து உலகில் யாராலும் வெல்லமுடியாத வீரனாய் வலம் வந்தவர் இராஜேந்திர சோழன். வீரசோழன், விக்கிரமசோழன், வீரராசேந்திரன், நிருபதிவாகரன், உதாரவிடங்கன், பராக்கிரமசோழன்

மேலும்

புத்துமண் - சுப்ரபாரதிமணியன்

- சுப்ரபாரதிமணியன்

ஒரு வரியில் சொல்லவேண்டுமென்றால் ஒரு பிழைக்கத் தெரியாதவனின் கதைதான் புத்துமண். அப்படியான பிழைக்கத் தெரியாதவனின் கதையைப் படிப்பதில் என்ன பெரிய ஆர்வம் கிளர்ந்துவிடப் போகிறது எனத் தோன்றலாம். இந்த ‘சோ கால்டு’ பிழைக்கத் தெரியாதவனுக்கு இன்னொரு பெயர் சூட்டினால் என்ன?. சரி போராளி என்று சூட்டிடலாமா?. அந்தப் போராளிகள் அப்படியொன்றும்

மேலும்