கிளி எழுபது -புரதான வடஇந்தியக் கதைகள்

- தமிழில்: ராஜ் கௌதமன்

 நாட்டுப்புறவியலும் செவ்வியலும் மிகப் புராதனமான புனைவியல் சகோதரிகள். இருவரும் தனித்தனி ஸ்திரிகள் என்றாலும் ஒருத்தியின் ஆடையை மற்றவள் உடுத்தி விளையாட்டயர்வது சர்வசாதாரணம். ஒருத்தியின் வேஷத்தைக் களைத்தால் மற்றவள் இருப்பாள். கிளி எழுபதில் இவர்களது மாறுவேஷங்களைக் கண்டு மகிழலாம். வடஇந்தியாவில் வாய்மொழிக் காமியக் கதைகளாக

மேலும்

ஆடிப்பாவை போல - நூல் ஆய்வு.

- தமிழவன்

  தமிழவன் படைப்புகள் பொதுவாக, நவீனத்துவம் சார்ந்தனவாய் அமைவன. மேனாட்டு இலக்கிய உத்திகளை அறிந்து வைத்திருக்கிற அவர், தாம் படைக்கும் படைப்புகளில், அத்தகைய உத்திகளை அறிமுகப்படுத்துவதில், ஆர்வம் கொண்டிருப்பவர். பின் நவீனத்துவ வாசிப்பினுாடே, புதிய பரிமாணங்களில் நவீனத்தை மையப்படுத்தி, எழுதி வரும் அவர், பரிசோதனை முயற்சியாகப்

மேலும்

ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை - ஜெயமோகன்

- ஜெயமோகன்

 ஈழ இலக்கிய முன்னோடிகள் அறுவரின் படைப்புகளைத் தன் விசால விமர்சனப் பார்வையால் படம் பிடித்துக் காட்டியுள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன்.மு.தளைய சிங்கத்தின் தத்துவமும், மெய்யியலும் பற்றி விவரித்து, தளைய சிங்கத்தின் சிறுகதைகளை (கோட்டை, தொழுகை, தேடல்...) தமிழின் மிகச் சிறந்த, 50 கதைகளின் பட்டியலில் சேர்க்கலாம். ஈழத்தின் படைப்பிலக்கியவாதி

மேலும்

'விசும்பின் துளி' ஒரு தமிழ்த் தேன் பலா! - எஸ்.குரு

- நாஞ்சில் நாடன்

 நாஞ்சில் நாடன் பன்முகம் கொண்ட படைப்பாளி. கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள் என்று, 40 புத்தகங்களுக்கு மேல் எழுதிக் குவித்து இருக்கிறார்.இது அவரது, 13வது கட்டுரை நூல். அவரது முந்தைய கட்டுரை நூல்களில் பெரும்பாலானவை பல பதிப்புகள் கண்டவை. எட்டு பதிப்புகள் கண்டவையும் இரண்டு நூல்கள் உண்டு!தமிழ் இலக்கியப் பயணத்தில்

மேலும்

கேசம் - ஒரு விரிவான விமர்சனம்

சமகால தமிழ் இலக்கியச் சூழல் பெரும்பாலும் சிறுகதைகளைக் கொண்டே மதிப்பிடப்படுகிறது. என்னதான் எண்ணிக்கை அளவில் கவிதைகள் அதிகமாக எழுதப்பட்டாலும், பிரதான இடம் சிறுகதைகளுக்குத்தான். பொதுஜன வாசிப்பை ஒப்பிடுகையில், இலக்கிய வாசகர்கள் மத்தியில் ஓரளவு அதிகமாக வாசிக்கப்பட்டும், விவாதிக்கப்பட்டும் வரும் வடிவமும் சிறுகதை தான். பழைய

மேலும்

ஆதாளி கதைகள்

 புனைவுக்காக தமிழ்ச்சூழலில் இன்று கட்டமைக்கப்படும் மொழியும் காட்டப்படும் வடிவங்களும் மிக அந்நியமாகவுள்ளன. அவை ஒரு வகைமை மட்டுமே என்பதை அழித்து அவற்றில் மட்டுமே அறிவுத்துவம் நிரம்புவதாக மொழியப்படும் பண்ணைத்தனம் நமக்கு பழகிவிட்டது. இந்நிலையிலிருந்து வாசிக்கும் போது ஆதாளியின் கதைகளை புனைவல்ல என புறந்தள்ளிட எவ்வித

மேலும்

’எழுத்தும் நடையும்’ - சி.மணி

     ’எழுத்து’ பட்டறையில் இயங்கிய அனைத்து படைப்பாளிகளும் குறிப்பிடும்படியான தனித்துவ எழுத்தை கைகொண்டனர். அதிலிருந்து தன் பாதையை துவக்கியவர் எழுத்தாளர் சி.மணி. பயின்ற கல்வி ஆங்கில இலக்கியம் என்றாலும் எழுத்து தொடர்பிலிருந்து புதுக்கவிதை வளர்ச்சியில் பங்கெடுத்தார். டி.எஸ்.எலியட்டின் எழுத்தால் மிகவும் கவரப்பட்டார். சி.மணி

மேலும்

மரணத்துக்கு முன் உன் வாழ்வை திரும்பி பார்

 எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய, 'இடக்கை' என்ற நாவலை சமீபத்தில் படித்தேன். உயிர்மை பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. அவுரங்கசீப் பற்றிய நாவல் என உணர்ந்தாலும், அதையும் தாண்டி பல்வேறு விஷயங்கள் இந்நாவலில் உள்ளன. ஒரு பேரரசனின் எழுச்சியும், வீழ்ச்சியும், எப்படி ஒரு சாமானியனோடு தொடர்பு கொள்கிறது என்பதை நாவல் சொல்கிறது.ஒரு நாவலை

மேலும்

52 ஆயிரம் பேர் படிக்க விரும்பிய நூல்

- தமிழில்: ப.கு.ராஜன்

 'லத்தீன் அமெரிக்காவின் வெட்டுண்ட ரத்த நாளங்கள்' என்ற நூலை சமீபத்தில் படித்தேன். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு, ப.கு.ராஜன் மொழிபெயர்த்துள்ளார். பாரதி புத்தகாலயம் வெளியிட்டு உள்ளது. இந்நூல், உருகுவே நாட்டின் பத்திரிகையாளர் எட்வர்டோ காலியானோ, ஆங்கிலத்தில் எழுதி, 1971ல் வெளியானது. பத்திரிகையாளரான அவர், லத்தீன் அமெரிக்க நாடுகளின்

மேலும்

பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் - ஜெயமோகன்

உலக அளவில் சொல்லப்படும், எழுதப்படும் கதைகளில் கணிசமானவை பேய், பிசாசு, தேவதைக் கதைகளே. வாழ்க்கையின் புதிர்களை வாழ்க்கைக்குள் வைத்து விளங்கிக் கொள்ள இயலாது போகும்போது அவற்றை வாழ்க்கைக்கு அப்பால் கொண்டு சென்று விளங்கிக்கொள்ள முயன்ற தொல்மனத்தின் முயற்சிகள் இவை. உலக இலக்கியத்தின் பெரும் படைப்பாளிகள் பலரும் பேய்க் கதைகளை

மேலும்

‘இடமும் இருப்பும்’ - மனுஷ்ய புத்திரன்

 மாறிக்கொண்டேயிருப்பது காலத்தின் மிக முக்கிய தன்மை. சில மாற்றங்கள் பதியப்பட வேண்டியது அவசியமுமாகும். இந்த குறிப்பிட்டு சொல்லப்படவேண்டிய அவசியம் மனுஷ்யபுத்திரனின் ’இடமும் இருப்பும்’ என்னும் கவிதை தொகுப்பிற்கு உண்டென கருதுகிறேன். ஒரு சில தொகுப்புகளுக்கு பின் எழுதுதலின் போக்கு மடைமாற்றம் பெறும். அத்தகைய தொகுப்புகள் மிக

மேலும்