“கொரங்கி” வாசிப்பனுபவம் -ரத்தினசாமி பரமசிவன்

- மு.வெங்கடேஷ்

   திருநெல்வேலியில் இருந்து மற்றுமொரு எழுத்தாளர் மு. வெங்கடேஷ். இவருடைய சிறுகதைத் தொகுப்பு “கொரங்கி” என்ற தலைப்பில் ஜீவா படைப்பகம் வெளியீட்டு உள்ளது. இந்த சிறுகதைகள் அறிமுகப்படுத்தும் பெரும்பான்மை கதாபாத்திரங்கள் நம் அன்றாட வாழ்வில் கலந்து இருப்பவர்களாகவே இருக்கிறார்கள். ஆகவே நாம் வாசிக்கும் பொது உணர்ந்து கொள்வதில்

மேலும்

பிம்பச்சிறை - மருதன் ஆய்வுரை

 எம்.எஸ்.எஸ். பாண்டியனின் The Image Trap : M.G. Ramachandran in Film and Politics புத்தகம் வெளிவந்தது 1992ம் ஆண்டில். பூ.கொ. சரவணனின் மொழிபெயர்ப்பில் பிம்பச் சிறை என்னும் தலைப்பில் இந்நூல் பிரக்ஞை வெளியீடாகத் தமிழில் வெளிவந்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இருந்தும், இந்தப் புத்தகத்தை முன்வைத்து ஒரு திறனாய்வு கூட்டம் இன்று நடைபெறுவது முக்கியம் என்று நான்

மேலும்

6174 அறிவியல் புனைகதை நாவல் - இந்திரா

- க.சுதாகர்

      “நீங்கள் சாகப்போகிறீர்கள்“ என்பதற்கும் “நீங்கள் இன்னும் 48 மணிநேரத்தில் சாகப்போகிறீர்கள்“ என்பதற்கும் இருக்கும் பதற்றத்தின் மைக்ரோ வேறுபாட்டை உங்களால் உணர முடிகிறதா?விண்கல் ஒன்று வானத்தில் தெரிகிறது என்பதைவிட விண்கல் ஒன்று, இரண்டு நாட்களில் பூமியைத் தாக்கப்போகிறது எனும்போது கூடுதல் பரபரப்பு தொற்றிக்கொள்ளும்

மேலும்

ஆடாத நடனம் - ஆத்மார்த்தி

- ஆத்மார்த்தி

  14 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. மதுரை மாவட்டத்தைச் சுற்றி உள்ள இடங்களே பெரும்பாலான கதைக்களங்கள். 'பைத்திய நிசப்தம்', மதுரையின் இருண்ட பக்கமான போதை, உடல் ஒத்தாசை செய்யும் பெண்களின் வாழ்க்கை போன்ற நிகழ்வுகளைக் கிருட்ணன், வாணி, ஆஷா, ராமநாதன் போன்றவர்களின் பார்வையில் விவரிக்கிறது. 'கூரை' - உடலை விற்கும் பெண்தானே என்று ஏளனமாய்

மேலும்

அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள் -சுரேஷ் பிரதீப்

   அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள் நாவலின் கதை அல்லது “கரு” என்ன என்று அந்த நாவலைப் பற்றி சொல்லப்போய் யாரும் என்னிடம் கேட்டுவிடக் கூடாது என்பதற்காக அந்நாவல் குறித்து  எழுதி  விடலாம்  என்று  முடிவு  செய்து  கொண்ட பின்  எழுதுகிறேன். விரைவாக  வாசிப்பவர்கள்  அரைநாளில்  வாசித்துவிடக்  கூடிய அளவிற்கான சிறிய

மேலும்

மறுவாசிப்பில் மரபிலக்கியம் சங்க இலக்கியம் முதல் பாரதிதாசன் வரை

- ந.முருகேச பாண்டியன்

 மறுவாசிப்பில் மரபிலக்கியங்கள் சங்க இலக்கியம் முதல் பாரதிசாசன் வரை என்ற நூல் மரபிலக்கியங்களைப் புதிய சிந்தனைமரபுகளின் தொடர்ச்சியாக எவ்வாறு அணுகுவது என்பதைக் கூறுவதாக உள்ளது. இருபதாம் நூற்றாண்டின் கருத்துப் பின்னணியில் ந.முருகேச பாண்டியன் இந்நூலை எழுதியுள்ளார். மரபிலக்கியங்களின் மரபான அழகியல் வாசிப்பிலிருந்து சமுக

மேலும்

கருத்த லெப்பை - கீரனூர் ஜாஹிர் ராஜா

  சமூகத்தில் தங்களுடைய இடம் இதுதான் என்று ஒத்துக் கொண்டும் வாழும் லெப்பைகளுக்கு மத்தியில் கருத்த லெப்பை மட்டும் விதிவிலக்காக உள்ளான். அக்கா ருக்கையா, கொடிக்கால் மாமு, சின்ன பேச்சி தவிர மற்ற எவர் மீதும் லெப்பை என்பதற்காக அவன் நல்லெண்ணம் கொண்டிருக்கவில்லை. லெப்பை என்ற காரணத்தினால் புத்தி சுவாதீனமற்றவனுக்கு தெரிந்தே

மேலும்

ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி

- ம.செந்தமிழன்

 இயற்கையைச் சீரழித்து வளர்ச்சி காணுதல் என்பதன் உண்மையான பொருள், மனிதகுலம் தன்னைத்தானே அழித்துக்கொள்வதுதான். ஏனெனில், மனிதர்களும் இயற்கையின் அங்கங்கள்தான். 'இயற்கை வேறு, மனிதன் வேறு' என்ற மயக்கத்தை நவீன அறிவியல் நிலைநாட்டியுள்ளது. நமது மண்ணின் மரபு, கலாசாரம், பண்பாடு, மூல ஆதாரங்கள், பண்டைய பழக்கவழக்கங்களுள் மறைந்துபோன மரபுகளை

மேலும்

இந்தியாவின் இருண்ட காலம் - சசி தரூர், தமிழில் : ஜே.கே.இராஜசேகரன்

- சசி தரூர், தமிழில் : ஜே.கே.இராஜசேகரன்

 பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின்மூலம் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள நன்மைகளை வியந்தோதும் நூல்கள் நம்மிடம் ஏராளம் உள்ளன. அவற்றில் பலவற்றை இந்தியர்களே எழுதியும் இருக்கிறார்கள். ஆனால் காலனியாதிக்கம் இந்தியாவை எப்படிச் சீரழித்தது என்பதையும் எப்படி இந்தத் தேசத்தைப் பின்னோக்கி இழுத்துச் சென்றது என்பதையும் விரிவாக

மேலும்

பான் கி மூனின் ருவாண்டா - அகரமுதல்வன்

- அகரமுதல்வன்

 இந்தப் புத்தகத்தின் தலைப்பு உலகம் முழுமையும் புகழ் பெற்ற ஒரு சொல்லாடல். மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள ‘றுவாண்டா’ நாட்டில், ஹூடு, டுட்சி இனத்தாருக்கு இடையில் நடைபெற்ற மோதல்களில் அரசு ஆதரவோடு எட்டு இலட்சம் மக்கள், சுட்டும் வெட்டியும் படுகொலைசெய்யப்பட்டபோது ஐ.நா. பொதுச்செயலாளராக இருந்தவர் பான் கி மூன். அந்த நாட்டில் இன பேதத்தை

மேலும்

ஜெயகாந்தனும் நானும் - தேவபாரதி

   தேவபாரதி எழுதிய, 'ஜெயகாந்தனும் நானும்' என்ற நூலை சமீபத்தில் படித்தேன். கலைஞன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ஜெயகாந்தன் என்ற ஆளுமை, தமிழ் எழுத்துலகில் மிக முக்கியமானவர். அவர், மற்றவர்களை போல அல்லாமல், அரசியல் வாதியாக, இயக்குனராக, பேச்சாளராக, எழுத்தாளராக புகழ் பெற்றவர்.  தேவிபாரதி, ஜெயகாந்தனுடன் பழகியபோது

மேலும்