ஜெயகாந்தனும் நானும் - தேவபாரதி

   தேவபாரதி எழுதிய, 'ஜெயகாந்தனும் நானும்' என்ற நூலை சமீபத்தில் படித்தேன். கலைஞன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ஜெயகாந்தன் என்ற ஆளுமை, தமிழ் எழுத்துலகில் மிக முக்கியமானவர். அவர், மற்றவர்களை போல அல்லாமல், அரசியல் வாதியாக, இயக்குனராக, பேச்சாளராக, எழுத்தாளராக புகழ் பெற்றவர்.  தேவிபாரதி, ஜெயகாந்தனுடன் பழகியபோது

மேலும்

இனி நான் உறங்கட்டும் - பி.கே. பாலகிருஷ்ணன்

- ஆ. மாதவன் (தமிழில்)

 எவ்வளவு முறை படித்தாலும் புதிதாக ஏதோ ஒன்று மஹாபாரதத்தில் இருந்து கொண்டேதான் இருக்கிறது. எந்தக் காலக் கட்டத்திலும் / எத்தனை முறை படித்தாலும் அதை முழுமையாகப் புரிந்துகொண்டுவிட முடியும் என்று தோன்றவில்லை.“எனக்கு ஓய்வே தராத வகையில் ஸ்லோகங்கள் சொல்லப்பட வேண்டும்” விநாயகர். “அப்படியே ஆகட்டும். ஆனால் சொல்லப்படும் ஸ்லோகங்களின்

மேலும்

ஆட்டோபயோகிராஃபி ஆஃப் ஜான் ஸ்டூவர்ட் மில்

 மேற்கத்திய தத்துவ உலகில் மிகப்பெரிய மேதை. குழந்தைப்பருவத்திலிருந்தே அவருக்கு கிரேக்கம்,இலக்கியம்,தத்துவம்... போன்ற அறிவார்ந்த விஷயங்கள் பெற்றோர்களால் வலுக்கட்டாயமாகக் கற்றுக்கொடுக்கப்பட்டிருக்கிறது; திணிக்கப்பட்டிருக்கிறது.வயதுக்கு மிஞ்சிய அறிவுடன் படு சுட்டியாக வளர்கிறார். ஆனால், ஒரு போதும் அவரால் மகிழ்ச்சியை சுவைக்க

மேலும்

பிருந்தாசாரதியின் மீன்கள் உறங்கும் குளம்

 மிட்சுபிஷி, சுசிகி, சோனி இப்படி ஜப்பானியத் தயாரிப்புகளே இல்லாத வீடுகளைப் பார்க்க முடியாது. ஆனால், இவை வருவதற்கு முன்பே தமிழ்நாட்டுக்கு ஹைக்கூவை தனது சுதேசமித்திரன் இதழ் (1916) வாயிலாக அறிமுகப்படுத்தியவர் பாரதி.தமிழக் கவிதை வரலாறு கி.முவிலேயே தொடங்கிவிடுகிறது. ஜப்பானும் ஒரளவு பழைய மொழிதான், என்றாலும் அதன் சோக்கா வடிவ கவிதைகள் கிபி

மேலும்

அகம் புறம் அந்தப்புரம் : இந்திய சமஸ்தானங்களின் வரலாறு

- முகில்

மாட மாளிகை, கூட கோபுரம், பளிங்கு பிரதேசங்கள், பரவச நந்தவனங்கள், இந்தப் புறம் அந்தப்புரம், எந்தப் புறமும் எழில் கன்னிகைகள், எத்தனை எத்தனை இன்பமடா என்று வாழ்ந்து தீர்த்த இந்திய மகாராஜாக்கள் ஏராளம். பிரிட்டிஷாரிடம் இந்தியா அடிமைப்பட்டதற்கு முக்கியக் காரணமான இந்த ‘முந்தைய அத்தியாயம்’ ஒரு புதைபொருள். அதுவே இந்தப் புத்தகம். ஹைதராபாத்,

மேலும்

“குறத்தியாறு - ஜிப்ஸிகளின் கதைப்பாடல்” - கோணங்கி

- கௌதம சன்னா

குறத்தியாறு நாவலில் வரும் அத்தியாயங்கள் சில சுழன்றுகொண்டிருக்கும் ஏழு நிறங்கொண்ட குறிவட்டை நோக்கி பாயும் அம்புகளுக்குக் குணத்தொனி செய்து ரெட் ஸ்பாட்டில் அடிக்கக்கூடிய சரங்கள் 1.பஞ்சசுரம் 2.மாவறிப்பாலை 3.பிடிசாபம் 4.உகுநீரோடை 5.எல்லிசோதி 6.நரகவாடை 7.கெடுஊழ்குறிகள். குறத்தியாறை வில்லாக ஏந்தி ஒவ்வொரு கன்னியும் நாண் திறம் அதிர்ந்த

மேலும்

பாகிஸ்தான் போகும் ரயில் - குஷ்வந்த் சிங்

- குஷ்வந்த் சிங், தமிழில் : ராமன் ராஜா

இந்திய பிரிவினை பற்றி எழுதப்பட்ட படைப்புகளில் குறிப்பிடத் தகுந்த படைப்பு இது. பிரிவினை வன்முறை வெறியாட்டங்கள் இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தலைவிரித்தாடத் தொடங்கிய காலம். பஞ்சாபில் ஒரு கிராமம் மட்டும் அமைதியாக இருக்கிறது. அப்படி அந்த கிராமத்து முஸ்லிம்களும் சீக்கியர்களும் மட்டும் அமைதியாக இருந்துவிட முடியுமா என்ன?

மேலும்

மறக்க முடியாத மனிதர்கள் - வண்ணநிலவன்

- வண்ணநிலவன்

நாகர்கோவில் போனால் உமாபதியைப் பார்க்கலாம், அவருக்கு எப்படியும் சுந்தர ராமசாமியைத் தெரிந்திருக்கும், சுந்தர ராமசாமியைப் பார்த்துவிட்டு இரவே ஊருக்குத் திரும்பிவிடலாம் என்று நினைத்து, ஒரு நாள் காலை நாகர்கோவிலுக்குப் பஸ் ஏறினேன். பதினொன்றரை மணி சுமாருக்கெல்லாம் நாகர்கோவில் போய்ச் சேர்ந்துவிட்டேன்.நாகர்கோவில் மணிக்கூண்டுக்கு

மேலும்

அம்மா வந்தாள் - தி.ஜானகிராமன்

- தி.ஜானகிராமன்

  ஒரு கட்டுடைப்பிற்கு பின்னால் ஆணித்தனமாக தனிமனித விருப்பம் இருந்தே வருகின்றன. தனிமனித விருப்பு வெறுப்பிற்கு புரம்பாக கட்டமைப்பானது நெருக்கும் பொழுது கட்டுடைப்பானது நிகழ்ந்திடவும் செய்கின்றது. ஒரு பெண்ணிற்கு ஏற்படும் காதலில் இருந்து திருமணத்திற்கு பிறகான காதல், அம்மா ஸ்தானம் அடைவதற்கு பின்னாலான காதல் எல்லாம் கௌரவம்

மேலும்

கொல்லனின் ஆறு பெண்மக்கள் –கோணங்கி

- கோணங்கி

    ஏறக்குறைய நாற்பதாண்டுகளாக தமிழ் எழுத்துச் சூழலில் தொடர்ந்து இயங்கிவரும் கோணங்கியை தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் ஐந்தாயிரம் பேராவது வாசித்திருப்பார்களா?  ஐம்பதாண்டுகள் தொடர்ந்து எழுதியும் ஐந்தாயிரம் வாசகர்களைத் தாண்ட முடியவில்லை என்ற அங்கலாய்ப்பு கடைசி வரை சுந்தர ராமசாமிக்கு இருந்தது. கோணங்கியை வாசிக்க அவரின்

மேலும்

தென்னிந்திய கிராம தெய்வங்கள் -ஹென்றி ஒயிட்ஹெட்

- ஹென்றி ஒயிட்ஹெட் (தமிழில். வேட்டைS.கண்ணன்)

  தமிழ்ச் சமூகம் போன்ற நீண்ட நெடிய பண்பாட்டு வரலாற்றைக் கொண்ட மக்களின், விழாக்கள், சடங்கு சம்பிரதாயங்கள், இன்னபிற நிகழ்த்துதல்கள் அனைத்தும் அவர்தம் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை சமூகக் கூட்டு எடுத்துரைப்பாகும். காலங்காலமான சமூக நினைவுகளைக் கூட்டாக வெளிப்படுத்தும் அம்சம். இவற்றினூடாகவே ஒரு தொன்மையான சமூகத்தின்

மேலும்