40 நூல்கள் வெளியீட்டு விழா

பேராசிரியர் முனைவர் மரியதெரசா எழுதிய 40 நூல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுகிறது. வருகிற மார்ச் 4ம் தேதி எழும்பூர் இக்சா மையத்தில் நடைபெற இருக்கும் இவ்விழாவில் நூல்களை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார் மா.பாண்டியராஜன், விஜயராகவன் (தமிழ்வளர்ச்சித் துறை) தலைமை வகிக்கிறார்.மரியதெரசா எழுதிய புத்துக்கவிதைகள் குறித்து

மேலும்

சிங்கப்பூர் வாசகர் வட்டம் ஆண்டு விழா!

 வருடம்தோறும் சிங்கப்பூர் வாசகர் வட்டம் சார்பாக ஆண்டுவிழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வருடங்களில் எழுத்தாளர் ஜெயமோகன், ஜோ டி குருஸ், நாஞ்சில்நாடன் மற்றும் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.@Image@இந்த வருடம் நடைபெற இருக்கும் ஆண்டு விழாவில் எழுத்தாளர் சாரு நிவேதிதா சிறப்பு விருந்தினராக

மேலும்

ஈகைத் தமிழன் அப்துல் ரவூப் நினைவு விருது

 இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் ஒருங்கிணைக்கும் ஒடுக்கப்பட்டவர்களின் பெருங்கனவு பழனிபாபா வாழ்வும் போராட்டமும் நூல் வெளியீட்டு விழா மற்றும் சமூக செயல்பாட்டாளர்களுக்கு விருது வழங்கும் விழா இன்று சென்னை கவிக்கோ அரங்கில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் ஈகைத் தமிழன் அப்துல் ரவூப் நினைவாக எழுத்தாளர் வாசு

மேலும்

வட்டெழுத்து கல்வெட்டு பயிற்சி வகுப்பு

தமிழ் கல்வெட்டு வட்டெழுத்து பயிற்சி வகுப்பு சென்னை திருவான்மியூர் பனுவல் புத்தக நிலையத்தில் இன்று நடைபெற்றது. பேராசிரியர் பத்மாவதி ஆனையப்பன் மற்றும் சசிகலா இருவரும் தமிழ் வட்டெழுத்துகளின் வடிவம், வாசிக்கும் முறை, பண்டைய கல்வெட்டுகள்  அதன் காலகட்டம் குறித்து இவ்வகுப்பில்

மேலும்

தாழ்வாரம் நவீன கலை இலக்கியக் களம் துவக்கவிழா -கும்பகோணம்

 தாழ்வாரம் நவீன கலை இலக்கியக் களம் துவக்கவிழா கும்பகோணம், ஹோட்டல் ராயாஸ் க்ரீன்லேண்ட் அரங்கில் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. நிகழ்வை எழுத்தாளர் கண்மணி குணசேகரன் மற்றும் பாடலாசிரியர் ஏகாதசி இருவரும் துவக்கிவைத்துச் சிறப்புரை ஆற்றுகிறார்கள். கவிஞர் கனிமொழி.ஜி, ஓவியர் தனசீலன், கவிஞர் மு.அய்யூப்கான், எழுத்தாளர். புலியூர்

மேலும்

ரோட்டரி தமிழ் இலக்கிய விருதுகள்

 ரோட்டரி இலக்கிய விருதுகள் வழங்கும் விழா நாளை பகல் 10 மணிக்கு சென்னை அசோக் நகர் கோகுலம் பார்க் அரங்கில் நடைபெறவுள்ளது. எழுத்தாளர் யூமா வாசுகி, தமிழ்மகன் மற்றும் கவிஞர் சல்மா, தனிக்கொடி ஆகியோர்க்கு இவ்விருதுகள் வழங்கப்பட உள்ளன. எழுத்தாளர் பிரபஞ்சன் மற்றும் கவிஞர் மு.மேத்தா இரிவரும் ரோட்டரி இலக்கிய விருதுகளை வழங்கி சிறப்புரை

மேலும்

“அன்பின் பெருவெளி ஆண்டாள்” தமிழ் நாடகம்

தமிழ் பக்தி இலக்கியப் பரப்பில் ஆண்டாள் தவிர்க்க முடியாத ஆளுமை. தோழியர், கூட்டுணர்வு, ரகசியம், காதல், காமம், கிளர்ச்சி, விடுதலை உரையாடல் என அவர் காலத்தில் எடுத்தெழுதிய தீவிரங்களை ஆண்டாளின் பாடல்கள் ஒலிக்கின்றன. அவரது பாசுரங்களை நாடகவடிவில் வழங்கும் நிகழ்ச்சியை நாடகக் கலைஞர் வெளி.ரங்கராஜன் மற்றும் பகுர்தீன் (உதவி)

மேலும்

நாகர்கோவில் புத்தகத் திருவிழா -2018

  இரண்டாம் ஆண்டு நாகர்கோவில் புத்தகத் திருவிழா இன்று  துவங்கவிருக்கிறது. மக்கள் வாசிப்பு இயக்கம், முன்னேற்றப் பதிப்பகம் மற்றும் திரிவேணி இலக்கிய சங்கமம் இணைந்து  ஒருங்கிணைக்கும் இப்புத்தகக் கண்காட்சியை நீதிபதி ஜான்.ஆர்.டி.சந்தோஷம் திறந்து வைக்கிறார். நாகர்கோவில் நகராட்சி ஆணையாளர் சரவணக்குமார் முதல் விற்பனையைத்

மேலும்

பவா செல்லதுரை சொல்லும் வேலாவின் கதைகள்

இராமநாதபுரத்தின் வறண்ட மண்ணையும், ஈரமுள்ள மனிதர்களையும் தன் எழுத்தில் உயிர்ப்பிக்கும் வேல.ராமமூர்த்தி எழுதிய சிறுகதைகளை முன்வைத்து  பவா.செல்லதுரை கதைசொல்லும் நிகழ்வு திருவண்ணாமலை குவா வாடீஸ் மையத்தில் இன்று மாலை நடைபெற உள்ளது. இடம் : குவா வாடீஸ் மையம், செங்கம் சாலை, சேஷாத்ரி ஆசிரமம் எதிரில், திருவண்ணாமலை. தொடர்புக்கு : 9443105633,

மேலும்

ஓவிய சிற்பக் கண்காட்சி

  பல்லவ ஓவியர் கிராமம் ஒருங்கிணைக்கும் ஓவிய மற்றும் சிற்பக் கண்காட்சி நாளை (பிப்ரவரி 24) நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியை தமிழக ஆளுநரின் செயலர் காயத்ரி. ஐ.ஏ.எஸ் துவங்கி வைக்க, துணை ஆணையாளர் ஈஸ்வரன் ஐபிஎஸ், குமரன் சில்க்ஸ் அதிபர் குமரன், ஆர்.எம்.கே.வி. அதிபர் சிவகுமார் , தஞ்சாவூர் கவிராயர் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். சிறப்பு

மேலும்

உலகத் தாய்மொழி நாள் விழா

 திருவண்ணாமலைத் தமிழ்ச் சங்கம் நாளை (பிப்ரவரி 23ம் தேதி) உலக தாய்மொழி நாள் விழாவைக் கொண்டாடுகிறது. ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் நடைபெற இருக்கும் இவ்விழாவில் கவிஞர் காசி ஆனந்தன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

மேலும்