ரோஜாவும் மயங்கும்!

ரோஜாவும் வண்டும் பேசிக் கொள்கின்றன.“ஏய், நீ வண்டா... வாண்டா? எதுக்கு எப்பப் பார்த்தாலும் என்னையே சுத்திச் சுத்தி வர?”“அதுவா... எனக்கு ரோஜா மேல ஒரு மயக்கம். அதான் எப்பவும் உன்னையே சுத்திச் சுத்தி வரேன்.”“எனக்கெல்லாம் உன்மேல மயக்கம் இல்லை. எனக்குப் பக்கதுல இருக்கு பார் இன்னொரு ரோஜா...அது மேலதான் மயக்கம்.”“சரி பரவால்ல...ரோஜாவுக்கு இன்னொரு

மேலும்

பயணங்களின் திருவிழா - ஸ்வேதா சிவசெல்வி

- ஸ்வேதா சிவசெல்வி, தமிழில் : உதயசங்கர்

                                                                                    1 “என்ன விஷயம் ஸ்டேசி! ஏன் பதற்றமா இருக்கே?” என்று ஜென்னி கேட்டாள்.“ஹூம்...எனக்கு உண்ஐயிலேயே இந்தப் பரீட்சைகளைப் பார்த்தா எரிச்சலா இருக்கு. மூட்டை மாதிரி புத்தகங்களுக்கு முன்னாடி உட்கார்ந்து ஒவ்வொரு பக்கமாத்

மேலும்

காமிக்ஸ் இலக்கணம் - ஓவிய வாசிப்பு

ஓவியங்கள் மூலமாகக் கதையைச் சொல்லும் பாணிக்குப் பெயர்தான் காமிக்ஸ். காமிக்ஸ் ஜாம்பவானாகிய வில் ஐஸ்னர் காமிக்சை sequential Art என்று பெயரிட்டு இதற்கென்று ஒரு வரையறையை எழுதினார்: ”ஓவியங்களையும், வார்த்தைகளையும் ஒரு முறைப்படி ஒழுங்கு செய்து, ஒரு கதையைச் சொல்வதே / ஒரு யோசனையை நாடகப்படுத்துவதே காமிக்ஸ்” என்பது அவரது

மேலும்

‘சேர்ந்தும் பிரிந்தும் பொருள் தரும் எழுத்து’

- மொழி அறக்கட்டளை

 தமிழ் வாக்கியத்தில் ஆங்கில வினைச்சொற்களால் நேரடியாக இயங்க இயலாது. செய்தல் அல்லது பண்ணுதல் போன்ற வார்த்தைகளின் துணைகொண்டே பொருள் தர முடியும். உதாரணமாக, cook எனும் வினைச்சொல்லை தமிழ் வாக்கியத்தில் பயன்படுத்த வேண்டுமென்றால், அவன் நன்றாக cook செய்தான் என்றே எழுத முடியும். ஆனால், சமை என்பது நேரடியாக இணையும். அவன் நன்றாகச் சமைத்தான். 

மேலும்

முல்லா பங்குபோட்ட மீன் துண்டம்

அந்த ஊருக்கு வியாபார விஷயமாக வந்திருந்த செல்வந்தர் ஒருவர் மதிய உணவுக்கு நல்ல உணவகம் தேடி சாலையில் நடந்துகொண்டிருந்தார். அப்போது அவரது எதிரில் முல்லா நடந்துவர, அவரிடம் ‘நல்ல உணவு விடுதி எங்குள்ளது’ என்று கேட்டார். முல்லாவும் அதற்கு பதில் சொல்லிவிட்டு தன் போக்கில் நடக்கலானார்.படிப்பாளியும் செல்வந்தருமான அவருக்குப்

மேலும்

புலி கிலி சிறுவர் கதைகள்

- நீதிமணி

எட்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இப்புத்தகத்தை தாராளமாகக் கொடுக்கலாம். அல்லது இன்னும் பள்ளிக்கே செல்லவில்லை, அதேநேரம் கதை கேட்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள் எனில் அவர்களுக்கான இலகுவான கதைப்புத்தகம் “புலி கிலி கதைகள்” முழுக்க முழுக்க புனைவு மற்றும் நாடோடிக் கதைகளைக் கொண்ட புத்தகம். ஆனால், கொண்டாட்டமானத் தொகுப்பு.

மேலும்

ஆறுதல் நேரம்..!

உமா மிஸ் எங்களோடு உட்கார்ந்து சாப்பிட மாட்டார். ஆசிரியர்களுக்கான அறையில்தான் சாப்பிடுவார். அன்று எங்களோடு, மரத்தடியில் உட்கார்ந்து சாப்பிட்டது மட்டுமல்லாமல், பின்னர் பொறுமையுடன் பேசிக்கொண்டே இருந்தார். மிஸ்ஸின் குரலில் எப்போதுமே ஆதரவு இருக்கும்; நெருக்கம் இருக்கும்.காலையில் ஓவியாவோடு ஒரு சின்ன சண்டை ஏற்பட்டுவிட்டது. என்னோடு

மேலும்

உயிர் எழுத்துகளை ஒலிக்கும் முறைகள்!

உயிர் எழுத்துகள் ஒவ்வொன்றையும் எப்படி ஒலிக்க வேண்டும் என்பதற்கு உரிய பயிற்சிகளும் வழிமுறைகளும் உள்ளன. எல்லா எழுத்துகளையும் எப்படி வேண்டுமானாலும் வாய்க்கு வந்தபடி ஒலித்துச் செல்லக் கூடாது. ஒவ்வோர் எழுத்தும் ஓர் ஒலிப்பின் குறிப்பு வடிவம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். எழுத்தின் வழியே அடையாளங்கண்டு, அவ்வொலியை எழுப்பப் பழக

மேலும்

“குழந்தைகளிடம் ஆதிக்கம் செலுத்தக்கூடாது”

 குழந்தைகள், தாத்தா பாட்டியிடம் கதை கேட்ட காலம் போய், இப்போது அவர்களே தனக்குப் பிடித்த கதைகளைச் சொல்ல ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் சொல்லும் சுவாரசியமான குட்டிக்கதைகளைப் இதழாகக் கொண்டு வருகிற முயற்சியில் உருவானதுதான் ‘பஞ்சு  மிட்டாய்’ சிறுவர் இதழ்.“பெங்களூருவின் துபரஹள்ளியில் இருக்கும் இரண்டு அபார்ட்மெண்ட்களில் வாழும்

மேலும்

வகான்டாவின் கறுப்பு காமிக்ஸ் நாயகன்

 உலகின் முதல் வெள்ளையரல்லாத காமிக்ஸ் சூப்பர் ஹீரோ மார்வல் காமிக்ஸ்சின் பிளாக் பான்த்தர் (Black Panther). 2018 ஃபெப்ரவரியில் MCUவில் (தமிழில், மார்வல் சினிமாட்டிக் யுனிவர்ஸ்) இவரது Stand Alone படம் வர இருக்கிறது. இவரை இந்த ஆண்ட்ராய்ட் தலைமுறைக்கும், இலக்கியம் படிக்கும் புதிய தலைமுறைக்கும் மீள் அறிமுகம் செய்ய, சென்ற ஆண்டு டநஹஷி கோட்ஸை வைத்து ஒரு புதிய

மேலும்

வன்முறையில்லா வகுப்பறை எங்கே நடக்கிறது?

- ஆயிஷா இரா.நடராசன்

  லட்சக்கணக்கான மாணவர்கள், ஆயிரக் கணக்கான ஆசிரியர்கள், நூற்றுக்கணக்கான உளவியல் நூல்கள், உலகளாவிய மாற்றுவழி என்றிருப்பினும் வகுப்பறை வன்முறைக் கூடமாக உருவாகும் நிலையைத் தோலுரித்து, கல்வியாளர்கள் வழியே தண்டனையில்லாத பயிற்று முறையையும், வன்முறையில்லாத வகுப்பறையையும் நோக்கி புதியபாதை அமைக்கிறார் இந்நூலின் வழியாகக்

மேலும்