பேசும் தாடி - உதயசங்கர்

- உதயசங்கர்

ஊரிலிருந்து தாத்தாவும் அம்மாச்சியும் வந்தாச்சு. இனி சுகானாவையும் சூர்யாவையும் கையில் பிடிக்க முடியாது. அக்காவுக்கும் தம்பிக்கும் நேற்றுதான் முழுப்பரீட்சை முடிந்து பள்ளிக்கூடம் லீவு விட்டார்கள்.சொல்லிவைத்த மாதிரி இன்று கிராமத்திலிருந்து அவர்களுடைய அம்மாச்சியும் தாத்தாவும் வந்துவிட்டார்கள். அவர்களுடன் இருந்தால் பொழுது

மேலும்

அணிலும் வேப்ப மரமும்..!

கோவில் தோட்டத்தின் மூலையிலிருந்த வேப்பமரத்தடியில் புத்தகப் பையை எறிந்துவிட்டு, சீனு உட்கார்ந்தான். இன்று கணக்குப் பரீட்சை. பள்ளிக்கூடம் நெருங்க நெருங்க பரீட்சை பயம் மனதில் பூதாகரமாக வளர்ந்தது. ஒரு வாரம் கழித்து ஸைபர் மார்க்கு வாங்கிய பேப்பரைக் கணக்கு வாத்தியாரிடம் பெற்றுக்கொள்ளும் காட்சியை கற்பனை செய்து பார்த்தான்.

மேலும்

அச்சம் தவிர்..!

அந்தக் காட்டில் வாழ்ந்துவந்த முயல்கள் எல்லாம் ஒன்றுகூடி கூட்டம் ஒன்றை நடத்தின. இளவயது முயல்கள் சுற்றிலும் அமர்ந்திருக்க, வயது முதிர்ந்த முயல்கள் எல்லாம் நடுநாயகமாக அமர்ந்திருந்தன.“இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் நாம் பயந்து பயந்து வாழ்வது?”“எங்கேயும் நிம்மதியாக வாழ முடியவில்லை”“சிங்கம் தாக்குமோ, புலி தாக்குமோ, நரி தாக்குமோ

மேலும்

மாலுவின் டயரி - ஞானி

- ஞானி

தினமலர் பட்டம் மாணவர் பதிப்பு மற்றும் சுட்டி விகடனில் எழுத்தாளர் ஞானி எழுதிய கட்டுரைகள், ‘மாலுவின் டயரி’ என்ற தொகுப்பாக வெளியாகியிருக்கிறது. மாலு, பாலு, வாலு தான் கதையின் நாயகர்கள். கேள்வியைக் கேட்பது மட்டுமல்லாமல், அதற்கான பதிலையும் தேடி குழந்தைகளைச் சிந்திக்க வைக்கிறது ‘மாலுவின் டயரி’...தொடர்புக்கு : 94440

மேலும்

தமிழின் மயக்கம்!

     ‘அந்த அறையில் அரைவாசி நிரம்பியிருந்தது.’‘ஆற்றங்கரையில் கறைபடிந்த வேட்டி காய்கிறது.’‘பனியில் பணி செய்யாதே.’‘ஆனி மாதம் அடித்த ஆணி.’‘கழைக்கூத்தாடி தன்னுடைய கலையை நிகழ்த்திவிட்டுக் களைத்து அமர்ந்தார்.’இந்த வாசகங்களில் ஒரு சுவையான ஒற்றுமை இருக்கிறது. கவனித்தீர்களா?இவை ஒவ்வொன்றிலும் இரண்டு அல்லது மூன்று சொற்கள்

மேலும்

சொல்லில் புதுமை புகுத்துவோம்!

 யாதும் ஊரே, யாவரும் கேளிர். புறநானூற்றில் கணியன்பூங்குன்றனார் எழுதிய சொற்றொடர் இது. இதன் பொருள், '(உலகில்) எல்லாமே நம்முடைய ஊர்தான். (உலக மக்கள்) எல்லாரும் நம் உறவினர்கள்தான்.'கணியன்பூங்குன்றனார், இதை ஒருமுறைதான் எழுதினார். ஆனால், அதன் பிறகு எண்ணற்ற கட்டுரைகள், மேடைப்பேச்சுகளில் இந்தச் சொற்றொடர் திரும்பத்திரும்பப்

மேலும்

சிவப்புக்கோள் மனிதர்கள் - க.சரவணன்

- க.சரவணன்

 “டேய் அருண் உண்மையாவா சொல்ற? இப்ப இருக்கிற உங்க வீட்டில் கரண்ட் இல்லையா?”“நிஜமாத்தான் சொல்றேன். எங்க வீட்டில் மட்டும் இல்லை. எங்க ஏரியாவிலேயே கரண்ட் கிடையாது. அடுத்த வாரம்தான் செளராஸ்டிராபுரம் போறோம். நீ வேணும்னா இந்த வாரம் வெள்ளிக்கிழமை எங்க வீட்டுக்கு வாயேன். ஒருநாள் தங்கலாம்.”“எங்கம்மா கிட்ட கேட்டு எப்படியும் வந்திடுறேன்.

மேலும்

பழமொழிகளைப் பழகுவோம்!

 நாம் பிறரோடு உரையாடும்போது, நம் கருத்துகளை வலிமையாகவும் மற்றவர்க்கு எளிதில் விளங்கும்படியாகவும் கூற வேண்டும். அவ்வாறு கூறினால், எதிரில் உள்ளவர்க்கு நம்முடைய கருத்துகள் இன்னும் தெளிவாகப் புரியும். அதற்குத் துணை செய்கின்றவை பழமொழிகள்.முற்காலத்தில் அனுபவப் பாடத்தின் மூலம் ஒவ்வொன்றாய்க் கற்றுக்கொண்ட நம் முன்னோர்கள், அவற்றை

மேலும்

இருட்டு எனக்குப் பிடிக்கும் - ரமேஷ் வைத்யா

- ரமேஷ் வைத்யா

  பெரும்பாலும், குழந்தைகளுக்கான இலக்கியமாக, கார்ட்டூன் கதைகளும், மாயமந்திரக் கதைகளுமே வெளியாகிக் கொண்டிருக்கும் சூழலில், இயற்கைச் சூழல் சார்ந்து நாவலாக வெளியாகியிருக்கிறது ‘இருட்டு எனக்குப் பிடிக்கும்’.ஒருநாள் சுற்றுலாவுக்காக கண்ணன், ரவி, ராகினி, குமார், ஷீலு, ஜோ ஆகிய ஆறு சிறுவர்களும் மேகமலைக்குப் போகிறார்கள். அவர்கள்

மேலும்

தகுதியற்ற செயல் - ஈசாப் கதை

ஒரு கழுகு, வானத்தில் வட்டமிட்டுக்கொண்டு இருந்தது. அதை ஒரு காகம், மரக் கிளையின் மீது உட்கார்ந்து பார்த்துக்கொண்டு இருந்தது. அந்தக் கழுகு என்னதான் செய்கிறது என்று பார்க்க காகத்துக்கு ஆசையாக இருந்தது. தரையில் ஓர் ஆட்டுக்குட்டி இருந்தது. அதைக் கண்டதும் கழுகு பாய்ந்து தன் கால்களால் ஆட்டுக்குட்டியைப் பிடித்து தூக்கிகொண்டு

மேலும்

மீனாட்சி சொக்கன் கவிதைகள்

  நிறை பீடித்த சொல்லொன்றின் வெளிச்சத்தில் பூரண மிகுதியில் நகர்தலுற்ற சுருங்குதசையின் வாய் மண்ணளவே மனம்கடைசி மின்னலென்றில்லாத மழை வழிந்தசிற்றெனக் கருகா ஓர் சயனப் பெரு வெள்ளக் கடைத்தேறஆறெனப் பரவும் மெல்லிய நினைவுப் பொத்தல்கனரும் இரவுடலின் மெய்மறந்தக் கலப்பில்ஊடுபாவி உடல் தின்கிறமோகம்

மேலும்