ஈரோடு புத்தத் திருவிழா - புதிய வெளியீடுகள்.

- வாஸ்தோ

ஈரோடு புத்தகத் திருவிழாவை முன்னிட்டு நடுகல் பதிப்பதிகத்தின் புதிய வெளியீடுகள்...பின்னட்டையில்:பரந்துபட்ட வாசிப்பிற்கான கதவு திறக்கப்பட்டிருக்கிறது. ஒன்றைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்து மற்றொன்றைப் பற்றி அழுத்தமாய் பேசுவதும், சொல்ல வந்ததைப் பற்றி நேரம் கிடைத்ஹ்டால் பேசுவோமே! என்கிற நகர்வுகளும் நமக்கான தேடலை கூட்டுகின்றன. நீங்கள்

மேலும்

பொன்கொன்றை பூக்க வந்த பேய்மழை - கவிதை தொகுப்பு

- ஸ்ரீவள்ளி

 சமீபத்தில் வெளியான கவிதை தொகுப்பு. ஸ்ரீவள்ளி (எ) பெருந்தேவியின் கவிதைகள் முகநூலில் பகிரப்பட்ட பொழுதே பெரிதும் விரும்பி  வாசிக்கப்பட்டன. ஸ்ரீவள்ளியின் கவிதைகள் முற்றிலும் காதல் சார்ந்தவை. பிற காதல் கவிதைகளின் இருந்து அவற்றை வேறுபடுத்துவது அவை வெளிக் கொண்டு வரும் சங்க கவிதைகளின் நீட்சி. ஸ்ரீவள்ளியின் எந்தக்கவிதையும்

மேலும்

கலியுகக் கிழவியும் ஓநாய்க் குட்டிகளும் - புதுவரவு

- தமிழில்: பா.ஜெய்கணேஷ்

 நூல் குறித்து எழுத்தாளர் சல்மா...வரலாறு என்பது பெண்களுக்கு என்றுமே கடினமானதாகவும், வலியும் போராட்டமும் நிறைந்ததுமாகவே இருந்து வருகிறது. அனைத்துக் கால கட்டங்களிலும், பெண்களின் வாழ்வு கண்காணிப்பின் கீழும், பாதுகாப்பின் பிடியிலும் இன்றுவரை உள்ளது. அதிகாரத்தின் குறியீடாகவும் போராட்டங்களின் அடையாளாமாகவும் பெண்களின்

மேலும்

மணல்வீடு - சிற்றிதழ்

  தமிழின் சிறுபத்திரிக்கை சூழலில் தொடர்ந்து பத்து வருடங்களாக காலாண்டு இதழாக வெளிவருகிறது ‘மணல்வீடு’ இதழ். அச்சு தரத்துடனும் சிறந்த வடிவமைப்புடனும் கொண்டு வரப்படும் சிற்றிதழ்கள் தமிழில் மிகமிகச் சிலவே. அவ்வகையில் பதிப்பு தரத்திலும் கவனம் செலுத்தி வெளியாகிறது இவ்விதழ். இதன் ஆசிரியர் மு.ஹரிகிருஷ்ணன்.இலக்கிய கலை

மேலும்

மக்கள் தெய்வங்கள் - கோ.பழனி

  வெவ்வேறு சாதியைச் சார்ந்த ஆணும் பெண்ணும் காதல் செய்வதை எதிர்ப்பது, அவர்களைப் பிரிப்பது, முடியவில்லையென்றால் கொலைசெய்து, அவர்களைத் தெய்வங்களாக்கிவிடுவது என்கிற போக்கில் பல தெய்வங்கள் உருப்பெற்றுள்ளன.நம்பிக்கைகளையும் சடங்குகளையும் பிரித்தெடுக்க முடியாப் பண்பாட்டுவெளியில், வாய்மொழியாகச் சொல்லப்பட்டு நிலங்களெங்கும்

மேலும்

காலச்சுவடு ஜூலை - 2018 இதழ்

 என் ஆசிரியர் தங்கப்பா - பாவண்ணன்புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரியில் 1975ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கணிதப்பிரிவில் (பட்டப்படிப்பு) நான் சேர்ந்தேன். கணிதப் பாடங்கள் தனிவகுப்பிலும் மொழிப்பாடங்கள் பொதுவகுப்பிலும் நடத்தப்பட்டன. கணிதப்பிரிவு மாணவர்களோடு விலங்கியல், தாவரவியல் பிரிவைச் சேர்ந்தவர்களும் மொழிப்பாடவேளையில்

மேலும்

கல்குதிரை - கார்கால இதழ்

   வருடத்திற்கு இரு பருவகால இதழ்களாக வெளியாகிறது கல்குதிரை சிற்றிதழ். தீவிர இலக்கிய வாசகர்களிடையே ஒரு எதிர்பார்ப்பையும் இலக்கிய உரையாடலையும் உருவாக்குவதில் கல்குதிரை இதழுக்கு தனி இடமுண்டு. எந்த மாதத்தில் வெளியாகிறதோ அதற்கேற்றாற்போல்  வேனிற்கால இதழ், கார்கால இதழ்  என பெயர் தாங்கி வெளியிடப்படுகிறது. சிற்றிதழை

மேலும்

அற்றவைகளால் நிரம்பியவள் - பிரியா விஜயராகவன்

நான் இலக்கிய வாசகனில்லை. புனைகதைகளை அதிகமாகப் படிப்பவனில்லை. கடைசியாகப் பார்த்த இங்கிலீஷ் படம் ‘ஷோலே’ என்ற அளவில்தான் இருக்கிறது என்னுடைய இலக்கிய வாசிப்பு.ஆனால், சமீபத்தில் நான் படித்து வியந்த, எனக்கு நல்லதொரு வாசிப்பனுபவத்தைக் கொடுத்த நூல், ‘அற்றவைகளால் நிரம்பியவள்’. மருத்துவர் பிரியா விஜயராகவன் எழுதியுள்ள நாவல். இரயில்

மேலும்

இன்னும் பிறக்காத தலைமுறைக்காக - சு. தியடோர் பாஸ்கரன்

சு. தியடோர் பாஸ்கரனின் இந்நூல், சுற்றுச்சூழல் மற்றும் காட்டுயிர் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகள் பற்றிய அபூர்வமான தகவல்களை சுயமான பார்வையுடன் முன் வைக்கிறது. இயற்கைக்கெதிரான மனிதர்களின் குற்றங்கள் குறித்த கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. வன உயிர்கள், தாவரங்களின்அழிவு தொடர்பாக தியடோர் பாஸ்கரன் முன்வைக்கும் எச்சரிக்கைகள்

மேலும்

அழியா முத்திரை - இ.பி.ஸ்ரீகுமார்

- இ.பி.ஸ்ரீகுமார், தமிழில் : குளச்சல் மு.யூசுப்

நவீன மலையாளப் படைப்பிலக்கியத்தில் கருத்து சார்ந்தும் வடிவம் சார்ந்தும் அதிர்வுகளை உருவாக்கிய நாவல் இ.பி.ஸ்ரீகுமாரின் ‘அழியா முத்திரை’. பொருளாதார நிலையில் உச்சத்திலிருக்கும் உபரி வர்க்கத்தினர், உடலுழைப்பால் துவண்டுபோகும் தொழிலாளிகள், நித்ய கர்மம் போல் அலைந்து திரிய விதிக்கப்பட்ட ‘தொழில் பிச்சைக்கார்’ களை மையமாகக்கொண்ட இந்த

மேலும்

சூழலியர்கள் குறித்த அறிமுக நூல்

- ஏற்காடு இளங்கோ

  உலகம் முழுவதிலும் இன்று பேசப்படும் முக்கியமான விஷயம் சூழலியல். மனிதகுலம் வளர, வளர நீர் நிலைகள், காடுகள், மண் வளம் என எல்லாவற்றிலும் தங்களது ஆதிக்கதைச் செலுத்தத்தொடங்கியது. குற்ற உணர்வு இல்லாமல் இயற்கையைச் சுரண்டத்தொடங்கிவிட்டது. இயற்கை அழிந்தால், மனிதனும் அழிவான் என்பது தெரிந்திருந்தாலும், மாற்றுவழிகளில்

மேலும்