உயிர் எழுத்து -சிற்றிதழ்

 டிசம்பர் மாத 'உயிர் எழுத்து' இதழில் சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் மேலாண்மை. பொன்னுச்சாமி அவர்களது நினைவுகளையும், படைப்புகளையும்  முன்வைத்து எழுத்தாளர் அண்டனூர் சுரா எழுதிய கட்டுரையும், சுரேஷ் மான்யாவின் 'கல் நாகம்' சிறுகதை  இடம்பெற்றுள்ளது.  

மேலும்

செண்டிமீட்டர் அளவில் தூண்டப்படும் கடல் - கே.பாக்யா

- கே.பாக்யா

 சாதி, மதம் என கட்டமைக்கப்பட்ட அத்தனை புனிதங்களையும் கேள்விக்குள்ளாக்கும் கவிஞர் கே.பாக்யாவின் கவிதை நூல், ‘செண்டிமீட்டர் அளவில் தூண்டப்படும் கடல்’ இவ்வாண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் டிஸ்கவரி புக்ஸ் வெளியீடாக வர இருக்கிறது. 

மேலும்

காலச்சுவடு டிசம்பர் - 2017 இதழ்

 ஆண்மைமிக்க எழுத்துக்கு ஞானபீடம்! இன்று எழுத்தும் எழுத்தாளர்களும் எதிர் கொள்ளும் சவால்களைக் கருத்தில் கொள்ளும் போது எழுத்தாளர்களைவிட எழுத்தே எப்போதும் மேன்மையானது என்று உறுதியாகச் சொல்ல முடியும். எழுத்தையும்விட மேன்மையானது எல்லா தடைகளையும் கடந்து தம்மை நிலை நிறுத்திக்கொள்ளத் தொடர்ந்து போராடும் மனித குலத்தின்

மேலும்

எழுத்தாளர் இரா.முருகவேளின் புதிய நாவல் - ‘செம்புலம்’

- இரா. முருகவேள்

   மூன்று மாதங்களுக்கு முன்பாக நூல்வெளி.காம்-ற்கு அளித்த நேர்காணலில் தான் எழுதிக் கொண்டிருக்கும் புதிய நாவல் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்த எழுத்தாளர் இரா.முருகவேள் தற்போது அந்நாவலை எழுதி முடித்து வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கிறார். ஒரு குற்றத்தை  காவல்துறை, மனித உரிமை ஆணையங்கள், நீதிபரிபாலனம் பண்ணுகிறவர்கள்

மேலும்

பெருந்திணைக்காரன் நூல் வெளியீடு

- கணேசகுமாரன்

  எழுத்தாளர் கணேசகுமாரனின் பெருந்திணைக்காரன் சிறுகதைத் தொகுப்பின் வெளியீட்டு நிகழ்ச்சி வரும் 17-12-2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10மணி அளவில் சென்னை, டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் நடைபெற உள்ளது. நூலினை எழுத்தாளர் யூமா வாசுகி வெளியிட மேகா பதிப்பக நிறுவனர் அருணாச்சலம் பெற்றுக்கொள்கிறார். பெருந்திணைக்காரன் சிறுகதை நூல் குறித்து

மேலும்

ஜெப்னா பேக்கரி - நூல் அறிமுகம்

- வாசு முருகவேல்

இலங்கைத் தீவிலிருந்து இந்திய ராணுவம் வெளியேறுவதற்கு முன்பாக ஊர்க்காவல் படை என்ற பெயரில் இஸ்லாமிய இளைஞர்களைக் கொண்டு ஒரு தனிப்படை அமைத்து அவர்களுக்கென அதிகாரம் கொடுத்தது. தமிழர் - இஸ்லாமியர் வெறுப்பின் குழப்பமான சூழல் தீவிரமடைந்தது இங்கிருந்துதான். அதன்பிற்பாடு நடந்த பெரும்பாலான வன்முறைகளுக்கான துவக்கத்தை இந்திய அமைதிப்படை

மேலும்

Independent People - Halldor Laxness

 நல்ல, சிறந்த, மகத்தான நாவல் வெறுமனே எழுதப் படுவதில்லை. மாறாக படைக்கப்படுகிறது. அந்த நாவல் எழுதியவனின் படைப்பாற்றல் படித்த புத்தகத்திலிருந்தும்,கேட்டறிந்த தகவல்களில் இருந்தும் பிறப்பதில்லை. அது அவனின் உண்மையான ஆன்ம வெளிப்பாட்டில் இருந்தும், எண்ணங்களில் இருந்தும், பிறந்து வளர்ந்து ஓடியாடி விளையாடி மறைந்து போகும் மண்ணின் மீதான

மேலும்

‘பெர்ஃப்யூம் - சிறுகதைகள்’

- ரமேஷ் ரக்‌சன்

  ரமேஷ் ரக்சனின் மூன்றாவது புத்தகமாக வெளியாக இருக்கிறது, ‘பெர்ஃப்யூம்’ சிறுகதைத் தொகுப்பு. இரவு, பெண்கள், தனிமை, காமம் என்று பயணிக்கும் இந்தக் கதைகளில் பெரும்பாலானவை எந்த இதழிலும் பிரசுரமாகாதவை.“வாசனையைப் பரப்பி இல்லாமல் போகும். ஒவ்வொரு இரவும் ஒரு பெர்ஃயூம்தான். அது ஒவ்வொரு நாளும் உயிர்களின் வாசனையைப் பரப்பிக்கொண்டே

மேலும்

மழைக்கால இரவு - தமிழினி ஜெயக்குமரன்

  வாசக சாலை ஒருங்கிணைத்து, சென்னை டிஸ்கவரி புத்தக நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஈழத் தமிழ் எழுத்தாளர்கள் வரிசை நிகழ்வில், தமிழினி ஜெயக்குமரனின், ‘மழைக்கால இரவு’ சிறுகதை நூல் குறித்த அறிமுகம் நடைபெற்றது. இந்நிகழ்வில், புத்தகம் குறித்து வாசகர் பார்வையில் பேசிய அருந்தமிழ் யாழினி, சிறுகதைகளின் தன்மை குறித்தும் அவை

மேலும்

புதிய புத்தகம் பேசுது நவம்பர் மாத இதழ்

 சிறையில் சிறுகதை எழுதியவர்..!பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி. அமெரிக்காவில் உள்ள ஒரு வங்கியில் ஏதோ முறைகேடுகள் நடந்தன. இதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில், அந்த வங்கியில் பணிபுரிந்த வில்லியம் ஸிட்னி போர்ட்டர் என்பவரை காவலர்கல் கைது செய்தார்கள்.ஆனால் வில்லியம், இந்த விஷயத்தில் தான் நிரபராதி என்றும் வேறொரு ஊழியர் தன்னைச்

மேலும்

அவன்=அது=அவள் - யெஸ். பால பாரதி

- யெஸ். பால பாரதி

  ‘அவன்’ மெதுமெதுவாய் தன் உடல் மாற்றங்களை உணர்ந்து, குடும்பத்திலிருந்து பிரிந்துவந்து, தன்போல் இருப்பவர்களுடன் சேர்ந்து, பலவித கஷ்டங்களை அனுபவித்து, ஆணுறுப்பை இழந்து கடைசியில் “அவள்“ என மாறுவதாக கதை பயணிக்கிறது. திருநங்கைகளுக்கே உரிய அவமானங்கள், ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள், கஷ்டங்கள், சலிப்புகள்.. என ஒவ்வொரு உணர்வுகளையும்

மேலும்