பிறந்தது செவக்காட்டில், எழுதினது கரிசலை - கழனியூரன்

 கரிசல் நாட்டார் கதைகள், வசவுச்சொற்கள், விடுகதைகள், சொலவடைகள், பாலியல் சேகரிப்புகள், சிறுவர் கதைகள் என்று தேடிச் சேகரித்து ஆவணப்படுத்தியவர் எழுத்தாளர் கழனியூரன். தொடக்கப் பள்ளி ஆசிரியராகத் தொடங்கியவர்  நாட்டுப்புற வழக்காற்றியலில் தொட்டலைந்த தூரங்கள் அளப்பரியவை. தன்னுடைய இறுதிக்காலம் வரை நாட்டுப்புற ஆய்வுகளிலே

மேலும்

வேல்கம்பும் ரத்தமும் மட்டுமல்ல எனது படைப்புகள்! –வேல.ராமமூர்த்தி

காய்ந்தால் புழுதி, பேய்ந்தால் சகதி  என்று தங்கள் சொந்தபிரதேசத்தின் வறட்சியைப் பற்றி அங்கலாய்ப்பவர்கள் ராமநாதபுரத்து மக்கள்.  இந்தியத் துணைக்கண்டத்தில் வறட்சியை மட்டுமே தன் அடையாளமாகக் கொண்ட  கடைக்கோடி கிராமத்தின் வாழ்வை ரத்தமும் சதையுமாகத் தன் எழுத்தில் பதிவு செய்தவர் எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி.. நூல்வெளி தளத்திற்காக

மேலும்

நான் தீவிர வாசகனல்ல..? - இயக்குனர் வெங்கடேஷ்

 தீவிர கமர்ஷியல் சினிமா இயக்குனரான  வெங்கடேஷுக்கு இன்னொரு முகம் இருக்கிறது. இலக்கிய வாசிப்பில் ஆர்வம் கொண்டவர். தன்னுடைய அனைத்து திரைப்படங்களுக்கும் வசனம் எழுத, உடன் ஓர் எழுத்தாளரை வைத்திருப்பார். எழுத்தாளர்களை தேடித் தேடி சந்திக்கவும், அவர்களின் படைப்புகளை வாசிக்கவும் ஆர்வம் காட்டுபவர். இவருடைய நிஜப் பெயர் விக்னேஷ்வரன்.

மேலும்

‘‘நான் முற்போக்காளன் அல்ல’’ - ‘ஆட்டோ’ சந்திரகுமார்

 கோவை மாநகர சாலைகளில் சாதாரண ஆட்டோக்காரராக மக்களோடு மக்களாக வளம் வந்து கொண்டு இருப்பவர் ஆட்டோ சந்திரன் என்கிற மு.சந்திரகுமார். இவர் ஒரு சிறந்த எழுத்தாளர் என்றும், இலக்கியவாதி என்றும் கோவை வாசிகளுக்கு தெரியாது. அவரும் தன்னை ஒரு படைப்பாளி என்று  யாருரிடமும் வெளிப்படுத்திக் கொள்வதில்லை. நாவல், சிறுகதை, கட்டுரை, என

மேலும்

இங்கே விஷுவல் தொழில்நுட்ப அறிவில்லை - ஓவியர் ட்ராட்ஸ்கி மருது

   ‘இனிவரும் காலத்தில் உலகம் முழுமைக்கும் காண்பியல் தொழில் நுட்பம்தான் அடுத்தக்கட்ட வளர்ச்சி. புத்தகங்கள் தான் நம்மை உருவாக்கின. அதேநேரம் அடுத்தக் கட்ட டிஜிட்டல் நகர்வுக்கும் தயாராக வேண்டிய தேவையை நாம் உணரவேண்டும்’  என்று தொடக்கத்திலே தன் சாட்டையைச் சுழற்றிவிட்டு நேர்காணலுக்குத் தயாரானார் தமிழ் இலக்கியப் பரப்பில் மிக

மேலும்

காட்டாற்று வெள்ளத்தை நதியாக மாற்றியவர் வைரமுத்து - மரபின் மைந்தன் முத்தையா

கவிநயமான பேச்சில் தன்னம்பிக்கை நிறைந்த வார்த்தகள் உதிர்வதைப் பார்க்க முடிகிறது கவிஞர் மரபின் மைந்தன் முத்தையாவிடம். நமது நம்பிக்கை என்ற வெகுஜன பத்திரிகை நடத்திக் கொண்டே...தீவிர இலக்கிய வட்டத்திலும் இயங்குபவர். தன்னம்பிக்கை, இலக்கியம். ஆன்மிகம் என எதைப் பற்றி பேசினாலும் அழுத்தமான பதில் அவரிடம் இருந்து கிடைக்கிறது...இதோ அவருடன்

மேலும்

எழுத்தாளனுக்கு வாழ்க்கையும் குறைவு அனுபவமும் குறைவு. - அசோகமித்திரன்

 நவீன தமிழ் படைப்பிலக்கிய தளத்தில் மிகமுக்கியமான எழுத்தாளர் அசோகமித்திரன். கடந்த அரை நூற்றாண்டுகாலமாக சிறுகதைகள், நாவல்கள் மற்றும் கட்டுரைகள் என பல்வேறு தளங்களிலும் இயங்கிய ஆளுமை. மொழிப்பெயர்ப்பு நூல்களிலும் தனிமுத்திரை பதித்த. அசோகமித்திரனின் படைப்புகள் ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பிறமொழிகளிலும் வெளியாகியுள்ளன. தனது

மேலும்