அர்ஷியா எனும் படைப்பின் குரல் - அகரன்

 மதுரை பண்டைய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நகரம். இஸ்லாமியர்களின் படைபெடுப்பிற்குப் பிறகு இங்கே நிகழ்ந்த பண்பாட்டுக் கலாச்சார மாற்றங்களை தனது எழுத்துகளின் மூலம் பதிவு செய்தவர் எழுத்தாளர் அர்ஷியா. இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தனது எழுத்துகளில் இஸ்லாமிய தாக்கம் இல்லாமல், வரலாற்றை வரலாறாக பதிவு செய்வதில்

மேலும்

தமிழில் கலந்துள்ள வட சொற்கள்

ஒரு மொழியானது தனக்குள்ளாகவே சொல்வளம் மிகுந்திருப்பது. அதிலும் நம் தமிழைப்போன்ற தொன்மையான மொழியில் சொற்களுக்குப் பஞ்சமே இல்லை. தமிழில் மூன்று இலட்சம் முதல் ஆறு இலட்சம் வரையிலான சொற்கள் இருந்தன என்கிறார்கள். ஆனால், தமிழ் மொழியகராதிகளில்கூட அறுபதாயிரம் முதல் ஒரு இலட்சம் வரையிலான சொற்கள்தாம் பட்டியலிடப்பட்டுள்ளன. இன்றைக்கு

மேலும்

கவிதை மொழியில் கதைகளை எழுதியவர்

லா.ச.ராமாமிர்தம் பிறப்பு: 1916 -அக்டோபர் 29,  லால்குடி, திருச்சி மாவட்டம்  இறப்பு: 2007 -அக்டோபர் 29. ஓர் எழுத்தாளர் அவர். எப்போதும் எழுதிக்கொண்டேயிருப்பார். சிந்தனையோ சொல்லோ, விருப்பமோ தடைப்பட்டால், அந்த இடத்திலேயே பேனாவை வைத்துவிட்டு அவர் பாட்டுக்குப் போய்க்கொண்டேயிருப்பார். பிறகு நாள், மாதம், ஆண்டுகள் கடந்த பின்பு, தடைப்பட்ட சொல், அவர்

மேலும்

தமிழுக்குத் தொண்டாற்றிய தனிநாயகம் அடிகளார்

தமிழ்நாட்டில் தமிழுக்கு சேவை செய்த தமிழறிஞர்கள் பலரைப் பற்றி இங்கே படித்திருக்கிறோம். ஆனால், தமிழர்களின் இன்னொரு தாயகமாக இருக்கிற ஈழத்தில் இருந்த ஒருவர் தமிழுக்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை உருவாக்கி தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்திருக்கிறார். அவர்தான் தனிநாயகம் அடிகளார். இலங்கை தீவில் உள்ள யாழ்பாணத்தில் பிறந்த

மேலும்

நாட்குறிப்பில் கிடைத்த வரலாறு!

 பதினெட்டாம் நூற்றாண்டு நிகழ்வுகளை அறிந்துகொள்ள, ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகளைப் படித்தால் போதும்! அந்த அளவுக்கு அவற்றை வரலாற்றுப்பூர்வமாக எழுதி வைத்துள்ளார். தமிழ்மொழிதவிர இதர மொழிகளையும் அறிந்தவர். அதனால், புதுச்சேரியை ஆண்ட பிரெஞ்சுக்காரர்கள் இவரை, திவானாக அமர்த்திக் கொண்டனர். ஜோதிடவியல், வானவியல் மட்டுமன்றி

மேலும்

வேப்பமர ஸ்டாப் வளைவு - முத்துராசா குமார்

  வினோத்தை அவனது போனில் பிடிப்பது என்பதே கொஞ்சநாட்களாக கடினமாகி விட்டது. நேற்றிரவு ஒன்பது மணி போல வினோத்தின் மொபைல் எண் சுவிட்ச் ஆஃப்பில் இருக்க, வேறொருவரிடம் எனது போன் நம்பரை சொல்லி கூப்பிடச் சொல்லியிருக்கிறான்.ரிங்க் கேட்பதற்குள் வண்டியில் வந்த ஒருவன் வினோத்தை அழைக்க, எனக்கு வினோத்திடம் இருந்து வரவேண்டிய கால் வரவில்லை.

மேலும்

எழுதாதது இன்னும் நிறைய இருக்கு - கி.ராஜநாராயணன்

 காதல்னு சொல்றாங்க இல்லையா.... ஒரு காலத்துல ரொம்ப புனிதமாவும், அடேயப்பா அப்படிங்கிற மாதிரியும், நினைச்சு நினைச்சு உருகுற மாதிரியான விஷயமாக இருந்தது வாஸ்வதவம் தான். ஆனா என்னுடைய வாழ்க்கையில அப்படி பெண் சம்பந்தப்பட்ட நிகழ்வு வந்து... வந்து... வந்து போச்சே தவிர... நிக்கலை. கணக்கு வழக்கு இல்லாத பெண்கள் என்னுடைய வாழ்க்கையில் வந்துட்டு

மேலும்

போன்சாய் காடு! - மனுஷ்ய புத்திரன்

நான் முதன்முதலாக என் மேஜை இழுப்பறையை  உங்களுக்குத் திறந்து காட்டுகிறேன் அங்கிருக்கும் என் போன்சாய் காட்டை @Image@நெடுங்காலமாக  உருவாக்கப்பட்டது  இந்த போன்சாய் காடு ஒரு காட்டை உருவாக்குவதற்கான இரத்த ஓட்டமுள்ள மண் எங்குமே இருக்கவில்லை வீடு திரும்பிய குழந்தைகளின் ‘ஷூ’க்கள் உள்ளிருந்து அதைச் சிறுகச்சிறுகச் சேகரித்தேன் எளிய

மேலும்

விநாயகம் - சிறுகதை

 பழங்கால கற்சிலையிலோ இல்லை ஈக்கிகள் மழுங்கிய பனைமரக் கட்டையிலோ தொடர்ந்து வெளக்கெண்ணெய் தேய்க்கையில் ஒரு கறுப்பு நிறம் மின்னும் பாருங்கள் அந்த நிறத்தில்தான் விநாயகம் அண்ணன் இருப்பார்.குண்டாகவும் இல்லாமல் ஒல்லியாகவும் இல்லாமல் முறுக்கேறிய வழுக்குமரம் போலிருக்கும் கறுத்த மேனியில் தோள்பட்டை வரை தலையின் கோரை முடிகள்

மேலும்

ஆன்மன் கவிதைகள்

 @Image@மதில்களும் கம்பிகளும் காவலுமில்லாத சுதந்திரச்சிறையில் விண்மீன்களும் நிலவும் சூரியனும் வெக்கையும் குளிரும் அதிசுதந்திரமாக வந்துபோகின்றதால் நாட்காட்டியின் தாள்கள் நாள் தவறாமல்  கிழிபட்டுக்கொண்டே போகின்றன கடலற்ற இந்நிலத்தில் மீட்பருக்காக காத்திருப்பது முட்டாள்தனமெனினும் ஒரு கோடை மழையின் துளி தீண்டலில்

மேலும்

கவிஞர் விக்ரமாதித்யன் கவிதைகள்

 மணவழகன்சிட்டுக்குருவிகள் பற்றியே  சிந்தைகொண்டிருக்கிறான் புறாக்கள் குறித்தே பேசுகிறான் மனசு பூராவும் செண்பகப்பூக்கள் மகிழம்பூக்கள் கடம்பு / தேக்கு குல்மொஹர் / போகன்வில்லாவெனில் கொண்டாட்டம்தான் அவனுக்கு கன்றுகளை / செடிகளை கையிலேந்திக்கொள்வதில் மிகுந்த விருப்பம் முல்லைக்கொடி படரக் கொழுகொம்பில்லையென்றால் உள்ளம்

மேலும்