கவிஞர் விக்ரமாதித்யன் கவிதைகள்

 மணவழகன்சிட்டுக்குருவிகள் பற்றியே  சிந்தைகொண்டிருக்கிறான் புறாக்கள் குறித்தே பேசுகிறான் மனசு பூராவும் செண்பகப்பூக்கள் மகிழம்பூக்கள் கடம்பு / தேக்கு குல்மொஹர் / போகன்வில்லாவெனில் கொண்டாட்டம்தான் அவனுக்கு கன்றுகளை / செடிகளை கையிலேந்திக்கொள்வதில் மிகுந்த விருப்பம் முல்லைக்கொடி படரக் கொழுகொம்பில்லையென்றால் உள்ளம்

மேலும்

விருத்தப்பாக்களால் அமைந்த முதல் காப்பியம்

தமிழின் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சீவகசிந்தாமணி.ஐம்பெரும் காப்பியங்களில் முழுமையாகக் கிடைத்தவை மூன்று. சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணிவிருத்தப்பா என்னும் பா வகையால் எழுதப்பட்ட முதல் காப்பியம் சீவகசிந்தாமணிவடமொழியில் உள்ள சீவகன் என்னும் அரசனின் கதையைப் பின்பற்றித் தமிழில் பாடப்பட்டது இந்நூல்.சிந்தாமணி

மேலும்

தேசிக விநாயகத்தின் கவிப்பெருமை!

 இருபதாம் நூற்றாண்டில் பாரதியாருக்கு இணையாக பல கவிஞர்கள் வாழ்ந்தனர். அவர்களில் பலர் அந்தக் காலத்தில் பெரிதாக பேசப்பட்டாலும் பாரதியாருக்கு இணையாக இன்று போற்றப்படுவது இல்லை. அத்தகைய கவிஞர்களில் ஒருவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.தேசிக விநாயகம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த தேரூரில் 1876 சூலை 27-ம் நாள்

மேலும்

வரலாற்றுச்செம்மல் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி

 இந்திய வரலாற்றாய்வாளரும், சிறந்த படைப்பாளியுமான கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சி என்ற ஊரில் பிறந்தார் (1892). கல்லிடைக்குறிச்சி அய்யா நீலகண்ட சாஸ்திரி என்பது இவரது முழுப் பெயர். சொந்த ஊரில் பள்ளிப் படிப்பு முடிந்த பிறகு, நெல்லை ம.தி.தா. இந்துக் கல்லூரியில் இடைநிலை வகுப்பை முடித்தார். சென்னை

மேலும்

போரும், சிறு நாடுகளும்! - கலீல் ஜிப்ரான்

மலையுச்சியில், ஒரு ஆடும், அதன் சிறு குட்டியும் மேய்ந்துகொண்டிருந்தன. வானத்தில் பறந்துகொண்டிருந்த ஒரு கழுகு, அந்த ஆட்டுக்குட்டியைப் பார்த்தது, ஏற்கெனவே பயங்கர பசியிலிருந்த அந்தக் கழுகுக்கு, இந்த ஆட்டுக்குட்டியைக் கண்டதும், நாக்கில் எச்சில் ஊறியது!உடனடியாக, அந்த ஆட்டுக்குட்டியைப் பிடித்துத் தின்றுவிடுகிற எண்ணத்துடன், தரையை

மேலும்

'ஆகிய, போன்ற' எங்கு வரும்?

ரோஜா, மல்லிகை, சாமந்தி -ஆகிய பூக்களைக்கொண்டு, இந்த மாலை தொடுக்கப்பட்டுள்ளது. ரோஜா, மல்லிகை, சாமந்தி -போன்ற பூக்களைக்கொண்டு, இந்த மாலை தொடுக்கப்பட்டுள்ளது. மேலுள்ள இரண்டு தொடர்களுக்கும் உள்ள வித்தியாசம் 'ஆகிய, போன்ற' என்னும் சொற்கள். முதல் தொடரில் 'ஆகிய' என்னும் சொல் வருகிறது. அதாவது- ரோஜா, மல்லிகை, சாமந்தி இந்த மூன்று பூக்களை

மேலும்

மாயச்சேலை - சிறுகதை வாசிப்பனுபவம்

இம்மாத உயிர்மையில், சைலபதி அவர்களின் சிறுகதையொன்றை வாசித்தேன். துச்சாதனனின் துகிலுரிப்புச் சம்பவத்தில் இப்படி ஒரு கோணம் இருப்பதை உணர்த்தும் விதமான கதை. கோயிலொன்றில், மிகப் பொருத்தமான வண்ணத்தில் உடையணிந்து அம்மன் சிலை கணக்கா வடிவாகவும் தெய்வீகமாகவும் தெரிந்த ஒரு பெண்மணியைக் கண்டு, ”அரக்கு கலர் பட்டுப்புடவைல எப்படிப் பாந்தமா

மேலும்

அன்பே ஆயுதம் - மெய்யெழுத்துக் கதைகள்

 முன்னொரு காலத்தில் சிம்ம வனம் என்றொரு அடர்ந்த வனம் இருந்து வந்தது. அவ்வனத்தில் பொம்மன் என்ற வேடன் வாழ்ந்து வந்தான். அவன் தினமும் காலை தன் வில்லயும், அம்பையும் எடுத்துக்கொண்டு காட்டுக்குள் வேட்டையாடச் செல்வான்.  அவனுடன் அவனது தம்பி திம்மனும் செல்வான். ஒருநாள் காலை இருவரும் சேர்ந்து செல்லும்போது ஏதோ சத்தம் வரவே அத்திக்கைப்

மேலும்

யார் கொன்றது அந்தப் பழங்குடி மனிதனை? இரா.முருகவேள் பதிவும் போகன் சங்கர் எதிர்வினையும்

     @Image@ கேரளாவில் அரிசிதிருடியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு பொதுமக்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த மது என்னும் பழங்குடி மனிதர் குறித்து நாடு முழுமைக்குமான விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. எழுத்தாளர் இரா.முருகவேள் தனது சமூக வலைதளப் பதிவில் பழங்குடியினர் வாழும் பகுதிகளைப் பீடித்திருக்கும் வறுமை, பட்டினிச் சாவுகள் குறித்து

மேலும்

நான் யார்? - கவிஞர் விக்ரமாதித்யன்

 @Image@இந்த பிரபஞ்சம் பற்றி  எனக்குத் தெரிந்ததெல்லாம் வெறும் தகவல்கள் இந்த உலகம் குறித்து எனக்கு தெரிந்ததும் புஸ்தகப் படிப்பு இந்த நாடு பற்றி நான் அறிந்தவையெல்லாம் கல்வி கேள்வி எங்கள் ஊர் எங்கள் தெருபற்றியெல்லாம் அனுபவம் கொஞ்சம் கொஞ்சம்தான் எங்கள் வீடு குறித்தே என் அனுபவத்தில் புரிந்து கொண்டது கொஞ்சம் தான்  இவ்வளவு எதுக்கு

மேலும்

இந்தியாவின் கரிசக்காட்டுப்பூ - கமலா தாஸ்

 “இந்தியாவின் கரிசக்காட்டுப்பூ” என்றழைக்கப்பட்ட பெண் எழுத்தாளர் யார் தெரியுமா என்று வழக்கம்போல நேற்றைய உரையாடலுக்கான தலைப்பை அப்படி முன்னால் தூக்கிப் போட்டார் நண்பர் பாஸ்கர்.“கமலா தாஸ் தானே?” என்றேன் நான்.“பரவாயில்லையே மலையாள இலக்கியத்தையும் தெரிந்து வைத்திருக்கிறீர்களே” என்றார் அவர்.“அடைமொழியில் இருக்கிற கரிசல்

மேலும்