தகனம் - கனன்று எரியும் மயானத்தின் நெருப்பு

- ஆண்டாள் பிரியதர்ஷினி

 ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்களின் தகனம் நாவல் வாசிக்கக் கிடைத்தது. மயானத்தில் பிணங்களை எரித்தும், புதைத்தும்  தொழில் செய்யும் வாழ்வியல் குறித்துப் பேசும் காத்திரமான புதினம். நூலுக்கு அணிந்துரை எழுதியிருந்தவர் கி.ராஜநாராயணன். நாவலின் மையக் கருத்தியலான மயானத் தொழிலாளர்களின் வாழ்க்கை குறித்து கொஞ்சம் விரிவாகவே

மேலும்

எது தமிழின் முதல் நாவல்?

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான தமிழ் புதினங்கள் லண்டனிலுள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் வாசிக்கக் கிடைக்கின்றன.  அவற்றிலிருந்து சில சுவாரஸ்யமான தகவல்களைப் பெற முடிகிறது. அன்றைய நாவல்களில் அதன் ஆசிரியர்கள் தாங்கள் நாவலை எழுதியதற்கான காரணங்கள் மற்றும் சூழ்நிலையை முன்னுரையில்

மேலும்

புத்தக தானம்!

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் எனது அண்ணன் நகர்புற நூலகத்தில் பகுதி நேர நூலகராக பணியாற்றினார். அப்போது அவருக்கு அடிக்கடி ஓர் அலைப்பேசி அழைப்பு வரும். எதிர் முனையில் பேசியவர் தன்னை மோகன் ஜெயராமன் என அறிமுகம் செய்து கொண்டார். அவரிடம் உள்ள புத்தகங்களை நூலகத்திற்கு தருவதாகவும் அவற்றை எடுத்துக்கொண்டு செல்லும்படியும் கூறினார்.

மேலும்

மனந்திறந்து எழுதிய ஜெ., - கட்டுரையாளர் ரஜத்

          ஜெயலலிதா அவர்களை நேர்காணல் செய்து, அவர் பேச்சை டேப்ரிக்கார்டரில் ஆடியோவாக ரெக்கார்ட் செய்தவர் கட்டுரையாளர் ரஜத். குமுதம் நிறுவனர் எஸ்.ஏ.பி அண்ணாமலை அவர்களிடம் ஜெயலலிதாவின் பேச்சை போட்டுக் காண்பித்தார். ஐந்து நிமிடங்களுக்கும் குறைவாக அந்த ஒலிப்பதிவைக் கேட்டவர் கட்டாயம் குமுதத்தில் தொடராக வெளியிடலாம்

மேலும்

இந்தியாவின் முற்காலப் பெருமையும் தற்கால நிலைமையும் - பாரதி சொற்பொழிவு

  பாரதியின் வாழ்க்கைப் பயணம் மிகக் குறுகியது. அந்தக் குறுகிய வாழ்க்கைப் பயணத்திற்குள் அவர் சில ஊர்ப்பயணங்களை மேற்கொண்டிருந்திருக்கின்றார். பாரதி தமிழ்நாடு பற்றிப் பாடியிருந்த போதிலும், அன்று தமிழ்நாடு ஒரு மாநிலமாக உதயமாகவில்லை. தென்னகம் சென்னை மாகாணமாக இருந்தது. தென்னகத்தில் சில கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் அவர் பயணம்

மேலும்

ராஜிநாமா - சிறுகதை

 ரகுராமன் வீட்டிற்க்குள் நுழைந்ததும் கையிலிருந்த பணப்பையை தன் மனைவி மீனாட்சியிடம் கொடுத்தார்.ரகுராமன் கையிலிருந்த பணத்தை எண்ணியவர் “அடடா மறந்து வந்துவிட்டேனே?” என்றார் .“என்னத்த மறந்துட்டீங்க? பாக்கி சில்லரையை வாங்காமல் வந்து விட்டீங்களா?” மனைவி பதற்றமானாள்.“கீரைகாரிக்குக் கொடுக்க வேண்டி ரூபாயை மறந்து போய் கொடுக்காமலே

மேலும்

காலம் கடந்த கலைஞர் “என்.எஸ்.கிருஷ்ணன்” - சோழ.நாகராஜன்.

 தமிழகத்தின் மதுரையில் வசிக்கும் எழுத்தாளர் சோழ. நாகராஜன், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மீதான அளவுகடந்த பற்றின் காரணமாக அவரது பாடல்களையும், அவரது வாழ்வின் செய்திகளையும் தொடர்ந்து பொது மேடைகளில் பாடி, பேசிவருபவர். கலைவாணர் அவர்களின் பிறந்த நாளான இன்று அவருடைய நேர்காணல்... கலைவாணரின் நகைச்சுவை உணர்வுக்கும், சமூதாய அக்கறைக்கும்

மேலும்

‘நெல்’காப்பியங்கள்..!

பழந்தமிழர்கள் பின்பற்றிய வேளாண்மை நுட்பமும், அறிவுத் திறனும் சிறப்பானதாக இன்றளவும் பேசப்படுகிறது. பண்டைக் காலத்தில் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் வரையிலான நெல் வகைகள் இருந்ததாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. தமிழில் இலக்கண நூலான தொல்காப்பியம் பயிர் வகைகளில் நெல்லையும், எண்ணெய் வித்துகளில் எள்ளைப் பற்றியும் குறிப்பிடுகிறது.

மேலும்

அனுபவ அறிவு - ராஜஸ்தானிய நாடோடிக்கதை

இளம் வயதுடைய வியாபாரிகள் எல்லாம் சேர்ந்து, நீண்டதூர வெளியூர் பயணம் மேற்கொண்டிருந்தனர். வழியில் ஒரு வயதான பெரியவர் காட்டைக் கடக்க உதவுமாறு அவர்களிடம் கேட்டார். அவரையும் வண்டியில் ஏற்றிக்கொண்டனர். அந்த அடந்த காட்டிற்குள் நுழையும் முன் அனைவரையும் அழைத்து, “இது விநோதமான காடு. ஆபத்துகள் அதிகமிருக்கும். அதனால், எங்கேயும் நிறுத்தாமல்

மேலும்

தேநீர் கடை - குறுங்கதை

“பொன்ராசு நீ என்ன செய்வியோ எனக்குத் தெரியாது. ஒரு மாசத்துல கடையை காலி செய்தாகணும்” ராமன் கடுமையான சொன்னார்.பொன்ராசுவுக்கு திக்கென்றது. ஏற்கெனவே கடைக்கு இரண்டு மாத வாடகை பாக்கி. வியாபாரம் வேறு படு மந்தம். இந்த சூழ்நிலையில் இப்படியொரு இடியா?“அய்யா, எனக்கு ரெண்டு மாசம் டைம் கொடுங்க. அதுக்குள்ள கடையைக் காலி பண்ணிடறேன். அதோட உங்க

மேலும்

இடைவேளை - சிறுகதை

 ரகுராமன், கார்த்திக்கின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். அவன் முகத்தை படபடப்பாக வைத்துக் கொண்டு சொல்லிக் கொண்டிருந்தான்.கணேஷ் அன்னைக்கு நைட் செகண்ட்ஷோ பிசாசு படம் பாத்துட்டு கிளம்பும்போது ரெண்டு மணியிருக்கும். பார்க்கிங்ல இருந்து சைக்கிள எடுக்கும் போது ஏதோ கனமா இருக்கிற மாதிரி இருந்துச்சு. பஞ்சரான்னு பாத்தான். காத்து

மேலும்