நிறக் குருடு - சுதாகர் கஸ்தூரி

  சில புத்தகங்கள் பல நூறு பக்கங்களுக்கு நீளும். எனினும் படித்து முடித்த பின் அவை ஏற்படுத்தும் தாக்கம் என்று பார்த்தால் சொற்பமே. சில புத்தகங்கள் சில பக்கங்கள் மட்டுமே இருக்கும். அவற்றின் தாக்கம் அளப்பரியதாக இருக்கும். இந்தப் புத்தகம் இரண்டாம் வகையைச் சார்ந்தது. இந்த எழுத்தாளர் இதற்கு முன் இரண்டு நாவல்கள்

மேலும்

தமிழின் சிறந்த நாவல்கள் -50 ஒரு வாசகனின் பரிந்துரை

 வாசிப்பின் நோக்கம் என்ன? என்ற கேள்விக்கு உங்களின் பதிலைப்பொறுத்தே இருக்கிறது இப்பத்தியைத் தொடர்ந்து வாசிப்பதா வாசிக்காமல் கடந்து செல்வதா என்பது. எனக்கு வாசிப்பு என்பது ஒரு பிறவியில் பலபிறவிகளுக்கான வாழ்க்கை அனுபவங்களை அடைதல். விதிக்கப்பட்ட வாழ்வின்மேல் நின்றுகொண்டு என்னைச்சுற்றி இருப்பவர்களின் வாழ்வைப்

மேலும்

நீடாமங்கலம் : சாதியக் கொடுமையும், திராவிட இயக்கமும் -பேராசிரியர் ஆ.திருநீலகண்டன்

- ஆ.திருநீலகண்டன்

பேராசிரியர் ஆ.திருநீலகண்டனின் நீடாமங்கலம் : சாதியக் கொடுமையும், திராவிட இயக்கமும் - ஆய்வு நூலை வாசித்தேன். சுயமரியாதை இயக்கமும், திராவிட இயக்கமும் தாழ்த்தப்பட்டோருக்கு செய்தது என்ன எனும் கேள்விகளுக்கு மிக எளிய முறையில் தனது ஆய்வு அறிக்கை வாயிலாக பேராசிரியர் ஆ.திருநீலகண்டன் பதிலளிக்கிறார்.தென் தஞ்சை ஜில்லா காங்கிரஸின் 3 ஆவது

மேலும்

சொக்கப்பனை -கடங்கநேரியான்.

- கடங்கநேரியான்

   @Image@கடங்கநேரியானின் கவிதைகள் எனக்கு நன்கு பழக்கப்பட்ட திணையில் உதித்தவை. அவரது அதிகாரத்திற்கு எதிர்த்திசையில் பயணிக்கிற கலைமுகமும் எனக்கு ரொம்பப் பரிச்சயமானது. ஆக, இந்த கவிதைகள் மட்டும் அந்நியமாகியா நின்றுவிடும்? ரொம்ப மெனக்கிடாமல், இந்தத் தொகுப்பில் வாசித்து, மனத்துக்கு நெருங்கின கவிதைகள் பற்றி எழுதத் துணியும் போது

மேலும்

‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ வாசிப்பனுபவம்

- தோப்பில் முஹம்மது மீரான்

   @Image@ குடும்ப வீழ்ச்சியை எழுதுவது என்வரையில் புனைவிலக்கியத்தில் மிகச்சாதாரண விசயமாகவே தெரிகிறது. தங்களது முன்னோர்களின் வாழ்க்கைக் கதையைக் கேட்டு வளர்ந்தவர்கள் தங்களது கலாச்சாரம், வட்டார வழக்குக் கொண்டு, குடும்ப உறவுகளுக்குள் இருந்த சிக்கல்கள், பெண்களின் நிலை, வேலைக்காரர்களின் நிலை, குடும்பத்தலைவர்களின் அதிகாரம்

மேலும்

நட்புக் குறிப்பு..! - சிறுகதை

 “நீசிகாமணியின் மகன் ராஜுதானே?” பல வருடங்களுக்குப் பிறகு  அவனைச் சந்தித்த முருகேசன் கேட்டதும், “ஆமாம் அங்கிள்...ராஜுவே தான் எப்படி இருக்கீங்க? வாங்க வாங்க உள்ள வாங்க.” என்று முருகேசனை வரவேற்றான் ராஜூ.வீட்டுக்குள் நுழைந்து அந்தப் பழைய நாற்காலியில் உட்கார்ந்தபோது அங்கிருந்த ஒரே வித்தியாசம், முருகேசனிடம் அன்பொழுகப் பேசும்

மேலும்

வீல் சேர் - கனவுப்பிரியன்

 இந்தியாவில் இருந்து வந்திருந்த, இருபத்தி ஐந்து வயதான அமேஷ் புதிதாக வேலைக்கு சேர்ந்த நேரம் அது. துபாயிலுள்ள அந்த தனியார் மருத்துவமனையில் இருவரும் ரேடியாலஜி டிபார்ட்மென்ட் என்பதால் ஹாஸ்டலில் தங்குமிடத்திலும் ஒரேஅறை கொடுக்கப்பட்டது அமேசுக்கும் ராஜ்குமாருக்கும்.கடந்த எட்டு வருடமாக வெளிநாட்டில் வசிக்கும் ராஜ்குமாருக்கு

மேலும்

11வது நிழல்சாலை - தேன்மொழி தாஸ்

 பாதங்கள் வழியாகச் சிரமங்களும் அவஸ்தைகளும் நழுவ எதிர்ப்படுகிற மனிதர்களில் எத்தனை பேர் காதல் வயப்பட்டிருப்பார்கள்முந்தைய இரவில் மனைவியை அடித்தவனின் எண்ணம்முதுகெலும்புக்குள் இப்போது எப்படி அலையும் வாழைப்பூவின் பிசினிலிருந்து ஒருவனுக்கும் வாழைத்தண்டின் நாரிலிருந்து ஒருவனுக்கும் இந்தக் காலை புறப்படுகிறதே நேற்றிரவு

மேலும்

காடையும் வேடனும்!

வேடன் விரித்த வலையில் மாட்டிக்கொண்ட காடை ஒன்று தன்னை விடுவிக்குமாறு கெஞ்சியது.“நீ என்னைப் போகவிட்டால் நான் உனக்கு நன்றியுடையவனாக இருப்பேன்.”வலையில் சிக்கும் பறவைகளை சந்தையில் விற்றுக் கிடைக்கும் பணத்தில் சமைக்க ஏதாவது வாங்கிச்செல்லலாம் என்று நினைத்திருந்தான். ஆனாலும் காடை கெஞ்சுவதைப் பார்க்கப் பாவமாக இருந்தது.“நான்

மேலும்

அன்று அந்த அறையில் - தேன்மொழி தாஸ்

எழுதுகின்ற நிழல் விரலுக்குப் பக்கத்தில் இருள்மரமாய் ஊர்ந்து வருவதை உணர்ந்தபடி எழுதுகிறேன் யாருமில்லை ஜன்னலுக்கு வெளியே ஒரு மெழுகுத்திரி ஏற்றிவைத்திருக்கிறேன்அதன் வெளிச்சம் மின்விசிறியின் சிறகை ஜன்னல் கம்பிகளை தென்னங்கீற்றின் நுனியைகாய்ந்து கொண்டிருக்கும் துணிகளின் தும்புகளைஅறை முழுவதும் நகர்த்தி வைக்கிறதுஒளிக்குள்

மேலும்

இடலோ கால்வினோவின் இத்தாலிய நாட்டுப்புறக் கதை

    “முன்னொரு காலத்தில் பயமறியா ஜான் என்றொருவன் இருந்தான். எதைக் கண்டும் அஞ்சாதவன் என்பதால் அவனுக்கு இந்தப் பெயர். உலகமெல்லாம் சுற்றித்திரிந்த ஜான் ஒரு விடுதிக்கு வந்து சேர்ந்தான். ”அறை எதுவும் காலியாக இல்லை” என்று கூறிய விடுதி உரிமையாளர், “உங்களுக்குப் பயம் இல்லையென்றால் வேறொரு இடம் சொல்கிறேன், அங்கே போய்த்

மேலும்