நடுநிசி நாய்கள்!

'என்னம்மா இப்புடி பண்றிகளேம்மா’ ’ரிங்டோ’னாய் அலறியதும் திடுக்கிட்டு எழுந்துபார்த்தேன். மணி 2.12. இந்த நேரத்தில் யாராக இருக்கும். பாஸ்கரன்தான் அழைத்திருக்க்கிறான்.‘என்ன பாசு இந்த நேரத்துல..?’‘நாய்.. நாய்..’ என்றான்.‘நாயா.. ஏண்டா நடுராத்திரியில போனப்போட்டு திட்டுற..!’ என்றேன்.‘இல்ல.. மு..முட்டு சந்து.. வண்டி.. தி..திலகர் தெரு..’ அதற்கு மேல்

மேலும்

நெகிழன் கவிதைகள்

    பொழுது சாய்ந்துவிட்டிருந்தபோது மழை பெய்ய ஆரம்பித்தது. அப்போது தலையை முந்தானையால் போர்த்தியபடியே சாவகாசமாய் நடந்துவந்து நானொதுங்கியிருந்த அந்த அங்கன்வாடியின் பட்டாசாலைக்குள் நுழைந்தாள் அப்பெண். ஒருமுறை என்னை பார்த்துவிட்டு தலையை வேறு திசைக்கு திருப்பி கூரையிலிருந்து ஊற்றிக்கொண்டிருந்த மழைக்கு தன் மருதாணிச்

மேலும்

உடுக்கைச் சப்தம்..!

 டம் டம் டம் டுடு டுடு... என லயமும் தாளமும் மாறாத உடுக்கைச் சப்தத்தில் நடு இரவில் தூக்கம் கலைந்து எழுந்தாள் காவ்யா. தொடர்ந்து ஒலித்த சத்தத்தில் அவளது மகள்கள் இருவரும் எழுந்துவிட்டார்கள்.சின்னவள் “ம்மா என்னம்மா சத்தம் அது” என்றாள்.“ஒண்ணுமில்ல பேசாம படுத்துத் தூங்கு” மகளை அதட்டினாலும் படபடப்பாகவேஉணர்ந்தாள் காவ்யா. செல்போனை

மேலும்

பசியும் பாரதியும்..!

 எட்டையபுரம் சின்னச்சாமி என்னும் நூற்பாலை உரிமையாளரின்  மகனே சுப்பிரமணிய பாரதி. தகப்பனார் சின்னச்சாமி தன் பருத்தி அரவை ஆலைத் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடியினால் மனமுடைந்து இறந்துபோனார். வளமையில் பிறந்த பாரதிக்கு வறுமையே வாழ்வானது. வறுமையிலும் வாழ்வித்த தமிழால் வானுயர்ந்த கவிஞன் தான், “வயிற்றுக்குச் சோறிடவேண்டும் இங்கு

மேலும்

சிற்றிதழ் தடத்தின் பொற்கிழி வேந்தன் ’கிருஷ் ராமதாஸ்’

    சிற்றிதழ் ஆர்வலர் ராமதாஸ் பெரம்பலூரைத் தன் சொந்த பிரதேசமாகக் கொண்டவர். கடலூர் மாவட்டம் தொழுதூரில் வசித்துவந்தவர், பணிகளின் காரணமாக துபை நாட்டில் குடிபுகுந்தார். தமிழ் இதழியல் பரப்பில் சிற்றிதழ்கள் மீதான அவரது தனித்த ஈடுபாட்டின் காரணமாக‘சிற்றிதழ்கள் உலகம்’ என்ற பிரத்யேக இதழைத் தானே வெளியிட்டார். அதன்மூலமாக தமிழில்

மேலும்

வண்ணநிலவனின் எஸ்தர் – வாசிப்பனுபவம்

வண்ணநிலவன் மழைக் காதலர் போலும்.  அவரது கதைகளெங்கிலும் மழையின் ஈரம் படர்ந்து கிடக்கிறது. பல சந்தர்ப்பங்களில் மென்மையான சாரல் நம்மையும் தொடுவது போன்ற பிரமை.பெரிய ஜாம்பவான்களெல்லாம் அவரின் எஸ்தரைக் குறிப்பிடுவது குறிப்பிட்ட அந்த எஸ்தர் சிறுகதையைப் பற்றியா அல்லது அந்த முழு கதைத் தொகுப்பைப் பற்றியா என்ற ஐயம் எழுந்தது. காரணம்

மேலும்

களவு புகினும் கற்கை நன்றே..!

வாசிப்பு ஒரு பேரனுபவம். கைக்கொள்ள வேண்டிய வாழ்வியல் கலை. தேடலும், பெரிய மெனக்கெடலும் தேவைப்படாத இன்றைய சூழலில், வாசிப்பு என்பது நுனிப்புல் மேயும் மேலோட்டமான வழக்கமாகவே உள்ளது. நூல்களும், ஏடுகளும் எளிதில் கிடைக்கும் இன்றைய தகவல் மற்றும் இணைய யுகத்தில், வாசிப்பின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்திருக்கிறோமா என்பது

மேலும்

உண்மை மனிதர்களின் கதை - அறம்

 ஜெயமோகனை வாசிப்பதை இதுவரை ஏனோ தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன். காரணம் தெரியவில்லை. அவரைக் குறித்து என் மனதில் எழுப்பபட்டிருந்த ஒரு பிம்பம் கூட காரணமாக இருக்கலாம். அந்த பிம்பம் உண்மையானதாக கூட இருக்கலாம். ஆனால், அதை எல்லாம் அடித்து துவம்சம் செய்துவிட்டது இந்த ’அறம்’. அவரின் அதிதீவிர எதிர்ப்பாளர்கள் கூட இதை கொண்டாடுவார்கள் என்றே

மேலும்

பணமும் மணமும் - சிறுகதை

அலுவலக வேலையாக திருச்சி வரை செல்ல வேண்டியிருந்தது. அதிகாலையிலேயே எழுந்து அவசர அவசரமாக கிளம்பிக்கொண்டிருந்தேன். மேசைமேல் அம்மாவிடமிருந்து வந்திருந்த அந்தக் கடிதம் கிடந்தது. “வேலூர் மாமா, தன் பொண்ணு கலைவாணியை உனக்கே கட்டித் தர வேணுமின்னு தெனமும் கேட்டுகிட்டே இருக்காரு. சீக்கிரம் பதிலைச் சொல்லு. மாமா வசதி குறைவானவர் என்பதைப்

மேலும்

தாயுமானவள்!

 காலையில் நடைபயிற்சி செய்துவிட்டு, அந்த பூங்காவில் இருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தார் கணேசன்.என்ன கணேசன் நல்லாருக்கீங்களா? ரொம்ப வருடங்களுக்கு முன் பரிச்சயமான குரலை, இப்போது மீண்டும் கேட்டபோது தன் கண்களைக் குரல் வந்த திசையில் திருப்பினார். அட! ஆறுமுகம். தன் மகள் கல்லூரிப் படிப்பிற்காக மூன்று வருடங்களுக்கு முன் வெளிநாடு

மேலும்