குணகடல், குடகடல்!

பண்டைய தமிழ்நாட்டுக்குக் கிழக்கேயும் மேற்கேயும் தெற்கேயும் என முப்புறமும் கடல்கள் சூழ்ந்திருந்தன. இன்றுள்ள கேரள மாநிலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தின் ஒரு பகுதியாகத்தான் இருந்தது. எனவே, தமிழகத்தின் மூன்று எல்லைகளாகவும் கடல்களே இருந்தன.இன்றைக்கு அக்கடல்களை நாம் எவ்வாறு அழைக்கிறோம்? கிழக்கே இருக்கும் கடலை 'வங்காள

மேலும்

பழந்தமிழகத்தின் தொழில்நுட்பம்!

உலகை வியக்கவைத்த டமாஸ்கஸ் வாட்கள் (Damascus sword), கி.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்தே அராபியர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தன. மிக மெலிதான, ஆனால் உறுதியான இந்த வாளின் தாயகம் தமிழகம். இரும்பை உருக்கி, மிகவும் வலிமையானதாக ஆக்கும் தொழில்நுட்பம் பழந்தமிழர்களிடம் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கிடைத்த சில

மேலும்

தாய் மொழியில் பேசுங்கள்

  தன்னிடம் இல்லாத, பிற மொழிகளில் உள்ள வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளும் மொழி, அழிவதில்லை; ஆனால், தன்னிடம் இருக்கும் சொற்களை துறந்து, பிற மொழி சொற்களை ஏற்றுக்கொள்ளும் மொழி, விரைவில் அழிந்துவிடும்.எந்த மொழியும், தானாய் வளர்வதும், தேய்வதும் இல்லை; அதை பயன்படுத்துவோரின் சூழலை சார்ந்திருக்கிறது.கடந்த, 2008ம் ஆண்டு, அமெரிக்காவின் அலாஸ்கா

மேலும்

முல்லைப்பாட்டு எனும் நல் இலக்கியம்!

  போர் தொடங்கப்போகிறது. அதற்கான ஏற்பாடுகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. தலைவன் பெரும் வீரன்; தன்னுடைய நாட்டைக் காக்கப் போருக்குப் புறப்படுகிறான். அவன் பிரிவதையெண்ணித் தலைவி வருந்துகிறாள்.'கவலைப்படாதே; நான் விரைவில் திரும்பி வந்துவிடுவேன்' என்று அவளுக்கு உறுதியளிக்கிறான் தலைவன். விரைவில் என்றால்

மேலும்

எழுதி எழுதிப் பழகிய எழுத்தாளர்!

திரு.வி.க. 1908ஆம் ஆண்டில் 'தேசபக்தன்' என்ற இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்ற நேரம். அதற்கு முன் அவருடைய எழுத்துநடை வேறாக இருந்தது. 'கற்றவரும் நற்றவரும் மற்றவரும், வெற்றிவேல் போற்றும் குற்றம் இலா எம் குரவரை அடைந்து குறுமுனியே, இக்குவலயத்து உற்றால் என விளங்கும் குணக்குன்றே, தமிழ்க்கடலை உண்டதவப்பேறே...' இப்படி எளிதில் புரிந்து கொள்ள

மேலும்

பூம்புகாரும் லண்டன் நகரமும்!

 பழந்தமிழர்கள், கோவில்கள், அரசர்களின் அரண்மனைகள், கோட்டை கொத்தளங்கள், வீடுகள், வீதிகள், நகர் ஒழுங்கமைப்பு ஆகியவற்றை அமைப்பதில் கலைநுணுக்கமும் தனித்தன்மையும் கொண்டிருந்தனர்.கடலில் மூழ்குவதற்கு முன்பு இருந்த பூம்புகார் நகரம், பத்தொன்பதாம் நூற்றாண்டின் லண்டன் மாநகரின் அமைப்போடு ஒத்திருந்தது என்பது ஆய்வாளர் சதாசிவ

மேலும்

தாவோயிசத்தை உருவாக்கியவர் யார்?

”இந்தப் பிரபஞ்சத்தில் மனிதனின் இடம் என்ன?” என்ற கேள்வி புகழ்பெற்றது. இதனை எழுப்பிய சீன தத்துவமான தாவோயிசத்தை உருவாக்கியவர் லாவோ ட்சு (Lao Tzu).பொது ஆண்டிற்கு முன் 6ஆம் நூற்றாண்டில் லாவோ ட்சு வாழ்ந்திருக்கலாம் என்பது ஒரு நம்பிக்கை. அவரைப்பற்றி நாம் அறிந்துள்ள பெரும்பாலான தகவல்கள் சு-மா ச்சாடெயின் (காலம்: 136 பொ.ஆ.மு 86 பொ.ஆ.மு.) என்ற வரலாற்று

மேலும்

வாசிப்பு தமிழா, வடசொல்லா?

'வ'கர வரிசையில் எண்ணற்ற வடசொற்கள் இருக்கின்றன. 'வ'கரத்தில் பல வடசொற்கள் வினைச்சொல் பயன்பாட்டில் காணப்படுகின்றன. 'வசிக்கிறான், வசித்தல்' என்பவை வடசொற்கள். 'குடியிருக்கிறான், குடியிருத்தல்' என்னும் பொருளில் அச்சொல் பயன்படுகிறது. 'வாசம்' என்பதும் ஓரிடத்தில் இருப்பதைக் குறித்த வடசொல்தான். 'மயிலாப்பூரில்தான் நமக்கு

மேலும்

குடிமகளைப் போற்றிய காப்பியம்

 1. சிலப்பதிகாரம், தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று. எதனால்?அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் இருக்க வேண்டும். ஒப்பில்லாத தலைவன் அல்லது தலைவியை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்க வேண்டும். அப்படி எழுதப்படும் நூல்களைப் பெருங்காப்பியம் என்பர். இந்த நான்கில் சிலவற்றை மட்டும் கொண்டிருக்கும் நூல்கள் சிறுகாப்பியம்

மேலும்

கி.மு., கி.பி. - பொ.யு.மு., பொ.யு. : குழப்பம் தீர்க்கும் கட்டுரை

  தமிழக வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் ஆண்டுகளைக் குறிப்பிடும்போது கி.மு., கி.பி., என்று முன்னொட்டுக்குப் பதிலாக பொ.யு.மு., பொ.யு. என்று திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இதுகுறித்துப் பேசிய தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் ‘இந்த மாற்றம் குறித்து இதுவரைக்கும் எந்த புகார்களும்

மேலும்